வேலை மாற்றமா? இபிஎஃப் கணக்குகளை மர்ஜ் செய்ய மறக்காதீங்க.. இதோ செயல்முறை

EPFO Update: பணியாளர்கள் எப்போது தங்கள் வேலையை மாற்றினாலும், அவர்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பணி உள்ளது. 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 27, 2024, 09:06 AM IST
  • புதிய கணக்கு திறக்கப்பட்டால், பழைய நிறுவனத்தில் உள்ள கணக்கு என்னவாகும்?
  • அதில் உள்ள தொகையை எப்படி எடுப்பது?
  • இந்த இரு கணக்குகளையும் ஒன்றாக இணைக்க முடியுமா?
வேலை மாற்றமா? இபிஎஃப் கணக்குகளை மர்ஜ் செய்ய மறக்காதீங்க.. இதோ செயல்முறை title=

EPFO Update: அலுவலக பணியாளர்கள் அனைவரும் இபிஎஃப் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பான EPFO, ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி கணக்குகளை நிர்வகிக்கின்றது. பணியாளர்கள் தங்கள் மாத சம்பளத்தில் ஒரு தொகையை பிஎஃப் கணக்கில் டெபசிட் செய்கிறார்கள். அதே அளவு தொகையை நிறுவனமும் டெபாசிட் செய்கின்றது. இபிஎஃப் தொகை ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகான காலத்தில் உதவும் ஒரு மிகப்பெரிய சேமிப்பாக பார்க்கப்படுகின்றது. இபிஎஃப் கணக்குகள் தொடர்பான பல புதுப்பிப்புகள் அவ்வப்போது வெளியிடப்படுகின்றன. இவற்றை இபிஎஃப் உறுப்பினர்கள் அப்டேட் செய்து வைத்துக்கொள்வது நல்லது. 

தனியார் துறையில் பணிபுரியும் பணியாளர்கள் அவ்வப்போது தங்கள் வேலையை மாற்றுகிறார்கள். நல்ல வருமானம், மனதிற்கு பிடித்த மற்றொரு வேலை, இடமாற்றம் என இதற்கு பல காரணங்கள் இருக்கக்கூடும். ஆனால், பணியாளர்கள் எப்போது தங்கள் வேலையை மாற்றினாலும், அவர்கள் செய்ய வேண்டிய ஒரு முக்கியமான பணி உள்ளது. இபிஎஃப் (EPF) தொடர்பான பணிதான் அது. அதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

ஊழியர்கள் தங்கள் வேலையை மாற்றும்போது, புதிய நிறுவனத்தில் புதிய இபிஎஃப் கணக்கு (EPF Account) திறக்கப்படும். பல ஊழியர்களுக்கு, ஏற்கனவே தன்னிடம் ஒரு இபிஎஃப் கணக்கு இருக்கும்போது ஒரு புதிய கணக்கு ஏன் திறக்கப்படுகிறது என்ற கேள்வி வருவதுண்டு. மேலும் புதிய கணக்கு திறக்கப்பட்டால், பழைய நிறுவனத்தில் உள்ள கணக்கு என்னவாகும்? அதில் உள்ள தொகையை எப்படி எடுப்பது? இந்த இரு கணக்குகளையும் ஒன்றாக இணைக்க முடியுமா? இப்படிப்பட்ட கேள்விகளும் பணியாளர்களுக்கு வருவதுண்டு. இந்தக் கேள்விகளுக்கான பதில்களைத் தெரிந்து கொள்ளலாம். 

புதிய பிஎஃப் கணக்கு ஏன் திறக்கப்படுகிறது?

20 அல்லது அதற்கு மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரியும் ஒரு தனியார் நிறுவனத்தில் நீங்கள் பணிபுரியத் தொடங்கும் போதெல்லாம், நிறுவனம் உங்கள் PF கணக்கைத் திறக்க வேண்டும். இதில், ஊழியர் மற்றும் நிறுவனம் இருவரும் பணியாளரின் எதிர்காலத்திற்கு பங்களிக்கின்றனர்.

ஒருவர் முதன்முறையாக பணியில் சேர்ந்து, இபிஎஃப் கணக்கைத் திறக்கும்போது, ​​EPFO ​​இலிருந்து UAN எண்ணைப் பெறுகிறார். பணியாளர்கள் தங்கள் வேலையை மாற்றும் போதெல்லாம், புதிய நிறுவனம் அவர்களுக்கான புதிய பிஎஃப் கணக்கைத் திறக்கும், ஆனால் UAN மாறாமல்  அப்படியே இருக்கும்.

ஒரே UAN இன் கீழ் பல்வேறு பிஎஃப் கணக்குகள் இருப்பதற்கு இதுவே காரணமாகும். பணியாளர்களின் பிஎஃப் இருப்பும் மாறுபடும். பணியாளர்கள் தங்கள் கணக்குகள் அனைத்தையும் ஒன்றிணைக்கும் வரை இவை வெவ்வேறாகத் தான் இருக்கும். 

மேலும் படிக்க | ஏப்ரல் மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? உடனே சரிபார்க்கவும்

இபிஎஃப் கணக்கை இணைப்பதற்கான செயல்முறை (How To Merge EPF Accounts)

- பிஎஃப் கணக்கை ஒன்றிணைக்க, முதலில் https://www.epfindia.gov.in/ என்ற இணையதளத்திற்கு செல்லவும்.
- அதற்கு பிறகு, Services பிரிவில் For Employee என்பதைக் கிளிக் செய்யவும்.
- One Employee மற்றும் One EPF Account என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- திறக்கும் புதிய பக்கத்தில், UAN, கடவுச்சொல் மற்றும் கேப்ட்சாவை உள்ளிட்டு லாக் இன் செய்யவும்.
- அடுத்த பக்கத்தில் பழைய பிஎஃப் கணக்கின் விவரங்கள் தெரியும்.
- இப்போது PF கணக்கு எண்ணை உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்.
- அதன் பிறகு உங்கள் பழைய கணக்கு புதிய கணக்குடன் இணைக்கப்படும், அதாவது மர்ஜ் செய்யப்படும்.

பிஎஃப் கணக்குகளை இணைப்பதால் என்ன நடக்கும்? 

பணியாளர்கள் (Employees) அனைத்து பிஎஃப் கணக்குகளையும் ஒன்றிணைத்தால், UAN அவரது அனைத்து பணி அனுபவத்தையும் இணைக்கும். உதாரணமாக, ஒருவர் மூன்று நிறுவனங்களில் தலா 2 ஆண்டுகள் பணிபுரிந்திருக்கிறார் என வைத்துக்கொள்ளலாம். இபிஎஃப் கணக்குகளை இணைத்த பிறகு, அவரது மொத்த அனுபவம் 6 ஆண்டுகளாக இருக்கும். ஆனால், அவர் கணக்குகளை இணைக்கவில்லை என்றால், கணக்குகள் வெவ்வேறாக இருக்கும். அப்படி இருந்தால், பிஎஃப் கணக்கிலிருந்து பணத்தை எடுக்கும்போது, ​​பணியாளர் 10 சதவிகிதம் டிடிஎஸ் செலுத்த வேண்டி இருக்கும்.

மேலும் படிக்க | NPS: வருமான வரி கட்ட சலித்துக் கொள்பவரா? வரியே கட்டாமல் இப்படி பணத்தை சேமிக்கலாம்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News