இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தால்(யூஐடிஏஐ) வழங்கப்படும் 12 இலக்க ஆதார் அட்டை எண்ணைப் பயன்படுத்தி எந்த ஏடிஎம் அல்லது வங்கிக் கிளைக்கும் செல்லாமல் உங்கள் வங்கிக் கணக்கு இருப்பைச் சரிபார்க்க முடியும். ஆதார் அட்டை பலவிதமான அரசு சார்ந்த செயல்களுக்கு முக்கியமான அடையாள ஆவணமாக விளங்குகிறது. இந்திய குடிமக்களுக்கு யூஐடிஏஐ பல்வேறு ஆன்லைன் சேவைகளை வழங்குகிறது. வங்கிச் சேவைகள் முதல் அரசாங்கத் திட்டங்களைப் பெறுவது வரை பல ஆண்டுகளாக ஆதார் அட்டை மிக முக்கியமான ஒன்றாக மாறிவிட்டது. இப்படி ஆதார் அட்டை மூலமாக பல சேவைகளை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கி வரும் நிலையில் தற்போது ஆதார் அட்டையை வைத்து வங்கி கணக்கிலுள்ள இருப்பை சரிபார்க்கும் வசதியை வழங்குகிறது.
இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்படி, மக்கள் தங்கள் ஆதார் அட்டைகளை தங்கள் வங்கி கணக்குகள் மற்றும் மொபைல் எண்களுடன் இணைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. ஆதார் அட்டையை பயன்படுத்தி வங்கி இருப்பை சரிபார்க்க இணைய வசதி தேவையில்லை என்பது கூடுதல் சிறப்பு. இந்த சேவையின் மூலமாக மூத்த குடிமக்கள், ஸ்மார்ட்போன்கள் இல்லாதவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வங்கிக் கிளைக்குச் செல்லாமல் தங்கள் வங்கி விவரங்களை சரிபார்த்துக்கொள்ள முடியும்.
ஆதார் அட்டை மூலம் வங்கி கணக்கு இருப்பை சரிபார்த்தல்:
1) உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணிலிருந்து *99*99*1# ஐ டயல் செய்யவும்
2) உங்கள் ஆதார் அட்டையில் 12 இலக்க எண்ணை உள்ளிட வேண்டும்.
3) உங்கள் ஆதார் எண்ணை மீண்டும் உள்ளிட்டு சரிபார்க்க வேண்டும்.
4) இப்போது இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யூஐடிஏஐ) உங்களுக்குக் கணக்கு இருப்பின் ஃபிளாஷ் எஸ்எம்எஸ்-ஐ அனுப்பும்.
மேலும் படிக்க | வாவ்..ரயில் பயணிகளுக்காக புதிய சேவையா? கட்டாயம் தெரிஞ்சிகோங்க
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ