நம்மில் பலருக்கு சுயமாக தாெழிலை தொடங்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதிலும், தனக்கு பிடித்த விஷயத்தை வைத்தே ஒரு தொழிலை ஆரம்பித்தால் அதில் கண்டிப்பாக சாதிக்கலாம் என்பது அனைவருக்கும் தெரியும். இந்தியாவை பொறுத்தவரை, கடந்த சில நாட்களாக சுய தொழில் தொடங்குபவர்கள் அதிகரித்து வருகின்றனர். இதற்கு காரணம், பலருக்கு வேறு ஒரு நிறுவனத்தின் கீழ் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணம் குறைந்து வருகிறது. அதிலும், எந்த திறனில் தனக்கு அதிக நம்பிக்கை உள்ளதோ அதை வைத்து பலர், சுய தொழிலை ஆரம்பிக்கின்றனர். இதனால், இந்தியாவின் பொருளாதாரம் அதிகரிப்பதோடு மட்டுமன்றி, தனி நபர் வருமானமும் அதிகரிக்கிறது. அந்த வகையில், ட்ராவல் செய்ய பிடித்தவர்கள் அதை வைத்து ஒரு தாெழிலையும் ஆரம்பிக்கலாம். அவை என்னென்ன தொழில்கள் தெரியுமா?
பயண உதவியாளர்:
ஒரு சில பிரபலங்கள், தாங்கள் வெளி ஊர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு பயணம் செய்யும் போது அவர்களுக்கு பயண உதவியாளர் தேவைப்படுவர். அந்த ஊரில் செலிபிரிட்டிக்கு என்ன வேலை இருக்கிறதோ, அதில் உதவியாக இருப்பர். எந்த இடத்தில் தங்க வேண்டு, எந்த இடத்திற்கு சென்று ஷோ நடத்த வேண்டும், எந்த இடத்தில் விழா நடத்த வேண்டும் என்பதை இந்த உதவியாளர்கள் பார்த்துக்கொள்வர்.
ட்ராவல் ப்ளாகர்:
பயணம் குறித்து எழுத பிடித்தவராக இருந்தாலோ, இயற்கை அழகை உங்கள் கேமராக்களால் படம் பிடிக்க தெரிந்தவர்களாக இருந்தாலோ, இந்த தொழிலை தேர்ந்தெடுக்கலாம். கடந்த சில ஆண்டுகளாக யூடியூப் மற்றும் இன்ஸ்டாகிராம் தளங்களில் அதிகமாக ட்ராவல் குறித்த வீடியோக்கள் வைரலாகி வருகின்றன. ஆரம்பத்தில் உங்கள் காதலுக்காக பயணம் செய்ய ஆரம்பித்தாலும், உங்களுக்கு அதிக ஆடியன்ஸ் கிடைத்து விட்டால், அவர்களாலும் உங்களால் சம்பாதிக்க முடியும். ஒரு சில தங்கும் விடுதிகள்மற்றும் ஹோட்டல்கள், உங்களுக்கான செலவுகளை, உணவு மற்றும் தங்கும் ஏற்பாடுகளை பார்த்துக்கொள்ளும்.
மேலும் படிக்க | பேங்க் போறீங்களா? மே மாதம் எந்தெந்த நாட்களில் வங்கி விடுமுறை தெரியுமா? இதோ லிஸ்ட்
ட்ராவல் ஏஜன்ஸி:
மக்கள் பலர், நேர்மையான மற்றும் பயனுள்ள ஆலோசனைகளை விரும்புகின்றனர். விடுமுறைகளின் போது குடும்பத்துடன் சேர்ந்து பயணம் செய்பவர்கள், கண்டிப்பாக இது போல ட்ராவல் ஏஜன்சியை நாடுவர். இதற்காக குறிப்பிட்ட தொகையையும் அவர்களுக்கு கொடுக்க வேண்டும். பயண தொடர்பாளர்கள் ஆக இருக்கும் இவர்கள், அதற்கு ஏற்ற சான்றிதழை பெற வேண்டும். எந்த இடத்தில் இருந்து கிளம்புகிறோமோ, அதிலிருந்து விடுமுறையை கழித்து விட்டு மீண்டும் வரும் வரை ட்ராவல் ஏஜன்ஸியை சேர்ந்தவர்களே அனைத்தையும் பார்த்துக்கொள்வர்.
எவ்வளவு சம்பாதிக்கலாம்?
பயணம் செய்யும் போது, கண்டிப்பாக பல நேரங்களில் பணம் செலவாவது சகஜம். ஆனால், ட்ராவல் ஏஜெண்டாக மாறினால், சுமார் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை மாதம் சம்பாதிக்கலாம் என கூறப்படுகிறது. இதனால், வருடம் ரூ.5 முதல் 6 லட்சம் வரை சம்பாதிக்கலாம். ட்ராவல் ஏஜண்டுகளுக்கு பல்வேறு இடங்களில் தள்ளுபடிகளும் கிடைக்கும். இதனால் ட்ராவல் பட்ஜெட்டுகளை மிச்சப்படுத்தவும் செய்யலாம்.
மேலும் படிக்க | கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது இந்த தவறை செய்ய வேண்டாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ