ஹோண்டா நிறுவனம் இந்திய சந்தையில் வரும் ஜனவரி 23 ஆம் தேதி முதல் தனது புதிய இரு சக்கர வாகனத்தை அறிமுகம் செய்யவிருக்கிறது. இதுகுறித்து வாடிக்கையாளர்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் நிறுவனம் தனது அதிகாரபூர்வ சமூக வலைதள பக்கத்தில் டீசரை வெளியிட்டு, "புதிய ஸ்மார்ட்டைக் கண்டுபிடிக்க தயாராகுங்கள்" என்று கேட்டுக் கொண்டது. ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (ஹெச்எம்எஸ்ஐ) ஆக்டிவாவின் ஹைப்ரிட் மாறுபாட்டை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, கடந்த ஆண்டின் டிசம்பர் மாதத்தில் நிறுவனம் தனது புதிய ஹெச்-ஸ்மார்ட் டிரேட்மார்க்கை வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இருசக்கர வாகனத்தில் என்னென்ன தொழிநுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளது என்பது பற்றிய தெளிவான விவரங்களை நிறுவனம் இன்னும் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை.
மேலும் படிக்க | அன்லிமிடெட் ஆ பேசனுமா? ரூ 179 ரீசார்ஜ் பிளான்..அள்ளி வீசும் ஏர்டெல்
இதற்கு முன்னர் ஹோண்டா 2-சக்கர வாகனங்கள் நிறுவனம் தனது பிஎஸ்4 ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார் பைக்குகளில், ஹோண்டா எகோ டேகினாலஜியை (HET) பயன்படுத்தியது. பிஎஸ்6 டிரான்சிஷன் மூலம் ஸ்மார்ட் பவர் தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வாகனங்களில் உராய்வைக் குறைப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய வாகனத்தில் மேம்படுத்தப்பட்ட புதிய தொழில்நுட்பங்கள் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பது நிறுவனம் வெளியிட்டிருக்கும் புதிய டீஸர் மூலமாக தெரியவந்துள்ளது. ஏஐ இந்த தொழில்நுட்பத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது மற்றும் இருசக்கர வாகனத்தின் முழுமையான தொழிநுட்ப விவரங்கள் குறித்து ஜனவரி 23 ஆம் தேதி நிறுவனம் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
வாடிக்கையாளருக்கு செலவுகளை சிக்கனப்படுத்தும் நோக்கில் ஹோண்டா நிறுவனம் புதிய ஹைப்ரிட் தொழில்நுட்பத்தை வெளியிடும் என்று கூறப்படுகிறது. எலெக்ட்ரிக் பைக்குகளில் போன்று மறுபடியும் ரீசார்ஜ் செய்யக்கூடிய தனி பேட்டரியைப் பயன்படுத்தும் ஹைப்ரிட் அமைப்பையும் நிறுவனம் பயன்படுத்த வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஹோண்டா நிறுவனத்தின் இந்த புதிய வாகனம் 10-15 கிமீ மின்சார வேகத்தில் பயணம் செய்ய முடிந்தால், இது கண்டிப்பாக இந்திய வாகன சந்தையில் ஒரு கேம் சேஞ்சராக இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த எலக்ட்ரிக் பைக் ஆனது மணிக்கு 40 கிலோமீட்டர் வரை செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது மற்றும் இதில் உங்களுக்கு நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ளும் வகையில் ஐசிஇ பயன்பாடும் இருக்கும். எரிபொருள் செலவுகளை மிச்சப்படுத்தி மலிவான வகையில் வாகனங்களை பயன்படுத்த விரும்புபவர்களுக்கு ஹோண்டா நிறுவனத்தின் இந்த வாகனம் சிறந்த தேர்வாக இருக்கும். மேலும் ஹோண்டா தனது 2W போர்ட்ஃபோலியோவில் ஹைப்ரிட் தொழில்நுட்பத்தைச் சேர்ப்பதில் ஆர்வமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் படிக்க | Flipkart Offer: பாதிக்கும் குறைவான விலையில் பிரீமியம் சாம்சங் போன், முந்துங்கள்!!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ