Alert: மிக ஆபத்தான 8 App; இவை மொபைலில் இருந்தால் கணக்கில் பணம் காலியாகலாம்

வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஹேக்கர் பெற்றால், கண் சிமிட்டும் நேரத்தில் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து விடுவார்கள்.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 16, 2021, 07:42 PM IST
  • வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஹேக்கர் பெற இந்த செயலிகள் உதவுகிறது.
  • அதன் மூலம் கண் சிமிட்டும் நேரத்தில் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து விடுவார்கள்.
  • ஹேக்கிங் செயலிகளை, இரண்டு புதிய வைரஸ்களின் உதவியுடன், ஹேக்கர்கள் கொண்டு வந்துள்ளதாக நம்பப்படுகிறது.
Alert: மிக ஆபத்தான 8 App; இவை மொபைலில் இருந்தால் கணக்கில் பணம் காலியாகலாம் title=

Android தொலைபேசி வைத்திருப்பவர்கள், கவனமாக இருங்கள், ஏனெனில் உங்கள் தொலைபேசியில் உள்ள சில செயலிகள் மூலம் ஹேக்கர்கள் உங்கள் வங்கிக் கணக்கை காலி செய்யலாம் 8 புதிய ஹேக்கிங்  செயலிகளை, இரண்டு புதிய வைரஸ்களின் உதவியுடன், ஹேக்கர்கள் கொண்டு வந்துள்ளதாக நம்பப்படுகிறது. இந்த செயலிகளின் உதவியுடன் வங்கிக் கணக்கிலிருந்து (Bank Account) பணத்தை காலி செய்து விடுவார்கள் .

இந்த 8 செயலிகளில் ஒன்றை நிறுவும்போது, ​​உங்கள் தொலைபேசி எண் அல்லது மின்னஞ்சலை தர வேண்டும். இந்த தகவல்களின் உதவியுடன், உங்கள் வங்கி கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் ஹேக்கர் பெறுகிறார். அதன் பிறகு எந்த வங்கிக் கணக்கையும் ஹேக் செய்வது அவர்களுக்கு எளிதாகிறது. கண் சிமிட்டும் நேரத்தில் உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுத்து விடுவார்கள்.

ALSO READ | Humanoid Robot: செந்தமிழில் பேசும் ரோபோ ஷாலுக்கு மொத்தம் 47 மொழிகள் அத்துப்படி!

ஹேக்கிங்கைத் தவிர்க்க இந்த செயலிகளை உடனடியாக நீக்க வேண்டும்

– Cake VPN (com.lazycoder.cakevpns)

– Pacific VPN (com.protectvpn.freeapp)

– eVPN (com.abcd.evpnfree)

– BeatPlayer (com.crrl.beatplayers)

– QR/Barcode Scanner MAX (com.bezrukd.qrcodebarcode)

– Music Player (com.revosleap.samplemusicplayers)

– tooltipnatorlibrary (com.mistergrizzlys.docscanpro)

– QRecorder (com.record.callvoicerecorder)

Malware ஒன்றின் உதவியுடன் உங்கள் வங்கிக் கணக்கை ஹேக்கர்கள் காலி செய்து விடுவார்கள்

இதன் மூலம் உங்கள் தொலைபேசியை அவர்களால் ஹேக் செய்ய முடியும். இந்த செயலிகள் மூலம்  உங்கள் தொலைபேசியில் MRAT நிறுவப்படும்.  அது நீங்கள் அறியாமலேயே நடக்கும். உங்கள் தொலைபேசியை வேறு இடத்திலிருந்து அணுக MRAT உதவும்.  இதனால் ஒரு நபர் உங்களிடமிருந்து வெகு தூரத்தில் இருந்தாலும் உங்கள் தொலைபேசியைக் கட்டுப்படுத்த முடியும்.

உங்கள் Android தொலைபேசியை தாக்கும் Malware Dropper என்பது Clast82  என்ற மால்வேர் ஆகும். Google Pay, Paytm, PhonePe போன்ற நிதி பரிவர்ட்தனையில் உள்ள அனைத்து முக்கியமான தகவல்களையும் எடுத்து உங்கள் வங்கிக் கணக்கு ஹேக் செய்யப்படுகிறது. AlienBot Banker  என்ற மற்றொரு ப்ரோகிராம் வைரஸ் மூலமும், இந்த தகவல்கள் அனைத்தையும் திரட்டலாம்.

ALSO READ | X-ray கொடுத்த ஷாக்... பிறப்பில் தான் ஆண் என்பதை அறிந்த மணமான பெண் அதிர்ச்சி..!!
 

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News