நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது! ரிசர்வ் வங்கியின் குட் நியூஸ்

Current Account Deficit: நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 8.3 பில்லியன் டாலர்களாக நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது. 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Dec 27, 2023, 10:35 AM IST
  • நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்தது
  • நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டின் தரவுகள்
  • முன்னேற்றமடையும் இந்திய பொருளாதாரம்
நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது! ரிசர்வ் வங்கியின் குட் நியூஸ் title=

இந்தியாவின் நடப்பு கணக்கு பற்றாக்குறை: நாட்டின் நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக அதாவது 8.3 பில்லியன் டாலர்களாக நடப்பு கணக்கு பற்றாக்குறை குறைந்துள்ளது.

நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்றால் என்ன?

நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது ஏற்றுமதி இறக்குமதி இடையேயான வேறுபாடு ஆகும். ஒரு நாட்டின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதியிடையே வரவு செலவு போக கணக்கிடப்படும் வித்தியாசம் நடப்பு கணக்கு பற்றாக்குறை (Current Account Deficit) என்று அறியப்படுகிறது. சுருக்கமாக, ஏற்றுமதியை விட இறக்குமதி அதிகமாக இருந்தால் நடப்புக் கணக்கில் பற்றாக்குறை ஏற்படுகிறது. ithil  பண பரிமாற்றங்களும் உட்படும். 

நடப்புக் கணக்கு பற்றாக்குறை என்பது ஒரு மிகப் பெரிய கவலைக்குரிய விஷயம் ஆகும். அதாவது இறக்குமதியை விட ஏற்றுமதி அதிகமாக இருக்கும்போது, நாட்டின் பொருளாதாரம் தள்ளாடுகிறது என்று பொருள்.

நடப்புப் பற்றாக்குறை பொருளாதாரத்தை எவ்வாறு பாதிக்கிறது?

நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரிக்கும் போது பண மதிப்பும் பாதிப்படைகிறது. இன்னும் சொல்லப்போனால் நடப்புக் கணக்கு பற்றாக்குறை அதிகரித்தால் ரூபாயின் மதிப்பு குறைகிறது. இதற்கு அந்நிய செலாவணி மூலமாக பணம் வெளியேறுவது காரணம் என்பது முக்கிய காரணம். இதைத் தவிர, உள்நாட்டில் சேமிப்புக்கும் முதலீட்டுக்கும் உள்ள இடைவெளி அதிகரித்து வருகிறது என்பதும் மற்றுமொரு காரணமாக இருக்கிறது.

மேலும் படிக்க | பங்குச் சந்தையில் உச்சத்தை எட்டும் அதானியின் குழுமம்! பசுமை எரியாற்றலுக்கு ஜே!

சேமிப்பு குறைய காரணங்கள் யாவை?

சேமிப்பு குறைவதற்கு காரணம் குறைந்த பணவரவு மற்றும் தங்கம், கச்சா எண்ணெய் போன்ற பொருட்களின் இறக்குமதியே ஆகும். நடப்புக் கணக்கு பற்றாக்குறை குறைய வேண்டுமென்றால், தங்கத்தின் தேவையும் கணிசமாகக் குறைய வேண்டும்.

தற்போது நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறை ஏன் குறைந்துள்ளது? இதற்கான தரவுகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதமாக அதாவது 8.3 பில்லியன் டாலர்களாக குறைந்துள்ளது. சரக்கு வர்த்தக பற்றாக்குறை குறைப்பு மற்றும் சேவை ஏற்றுமதி அதிகரிப்பு காரணமாக நடப்பு கணக்கு பற்றாக்குறை முக்கியமாக குறைந்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நேற்று (டிசம்பர் 26, 2023) வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த 2022-23 நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் (ஜூலை-செப்டம்பர்) நடப்புக் கணக்கு பற்றாக்குறை 3.8 சதவீதம் அதாவது 30.9 பில்லியன் டாலராக இருந்தது.

வெளிநாட்டிற்கு அனுப்பப்பட்ட பணத்திற்கும், வெளிநாட்டில் இருந்து நாட்டில் பெற்ற தொகைக்கும் உள்ள வித்தியாசம் அதிகரித்திருக்கிறது.இது நடப்பு நிதியாண்டின் முதல் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 1.1 சதவீதம் அதாவது 9.2 பில்லியன் டாலராக இருந்தது.

மேலும் படிக்க | உலகின் அதிவேக விரைவு ரயிலுக்கு சொந்தக்கார நாடு! மணிக்கு 603 கி.மீ ஓடும் ஜெட் ரயில்
 
இந்தியாவின் நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் பேமெண்ட் பேலன்ஸ் நிலை குறித்த வெளியிடப்பட்ட தரவுகளின்படி, நடப்பு நிதியாண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டில் CAD குறைந்துள்ளது. வர்த்தகப் பற்றாக்குறை குறைவதே இதற்குக் காரணம். இது 2023-24 இன் இரண்டாவது காலாண்டில் 61 பில்லியன் டாலராக இருந்தது, இது 2022-23 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் 78.3 பில்லியன் டாலராக இருந்தது.

இந்தியாவின் ஏற்றுமதி

ரிசர்வ் வங்கி தரவுகளின்படி, மென்பொருள் ஏற்றுமதி, வர்த்தகம் மற்றும் பயணிகள் சேவைகளின் அதிகரிப்பு காரணமாக சேவைகள் ஏற்றுமதி ஆண்டு அடிப்படையில் 4.2 சதவீதம் அதிகரித்துள்ளது. நிகர சேவை ரசீதுகள் காலாண்டு மற்றும் ஆண்டுதோறும் அதிகரித்துள்ளன. சரக்கு வர்த்தக பற்றாக்குறை குறைவதால், நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் ஒரு சதவீதமாக சிஏடி மட்டுப்பட்டிருக்கிராது, இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலத்தில் 2.9 சதவீதமாக இருந்தது.

ரிசர்வ் வங்கி தகவல்

RBI தரவுகளின்படி, முதன்மை வருமானக் கணக்கில் இருந்து நிகர திரும்பப் பெறுவது ஜூலை-செப்டம்பர் காலாண்டில் $12.2 பில்லியனாக அதிகரித்துள்ளது. இது முதன்மையாக முதலீட்டு வருமானத்தை செலுத்துவதைக் குறிக்கிறது. தரவுகளின்படி, இரண்டாவது காலாண்டில் தனியார் பரிமாற்றங்கள் $28.1 பில்லியன்களாக இருந்தன. இது ஒரு வருடத்திற்கு முன்பு இதே காலகட்டத்துடன் ஒப்பிடும்போது 2.6 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. தனியார் பரிமாற்ற ரசீதுகள் என்பது வெளிநாட்டில் பணிபுரியும் இந்தியர்கள் தங்கள் குடும்பத்தினருக்கு அனுப்பும் பணம் ஆகும்.

மேலும் படிக்க | Budget 2024: PPF முதலீட்டாளர்களுக்கு பட்ஜெட்டில் இரட்டை ஜாக்பாட், அதிகரிக்கும் வருமானம்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News