கோடக் மஹிந்திரா வங்கி எஃப்டி விகிதம் உயர்வு: நாட்டின் தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகள் சமீப காலமாக தங்கள் எஃப்டி திட்டம், சேமிப்பு கணக்கு மற்றும் கடன் வட்டி விகிதங்களை அதிகரித்து வருகின்றன. ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை உயர்த்தியதே இதற்கு காரணமாகும்.
சமீபத்தில், நாட்டில் அதிகரித்து வரும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி சில சிறப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இதில் மிக முக்கியமான நடவடிக்கை ரெப்போ விகித உயர்வாகும். இந்த முடிவிற்குப் பிறகுதான், அனைத்து பெரிய மற்றும் சிறிய வங்கிகளும், என்பிஎஃப்சி-களும் தங்கள் கடன்களை விலை உயர்ந்ததாக மாற்றியுள்ளன.
இதனுடன், எஃப்டி மற்றும் சேமிப்புக் கணக்கிலும் அதிக வருமானம் கிடைக்கிறது. கோடக் மஹிந்திரா வங்கி மீண்டும் எஃப்டி வட்டி விகிதங்களை அதிகரிக்க முடிவு செய்துள்ளது.
வங்கி தனது வெவ்வெறு காலங்களுக்கான நிலையான வைப்புத் திட்டத்தில் 10 அடிப்படை புள்ளிகளை அதிகரித்துள்ளது. இந்த புதிய கட்டணங்கள் ஜூலை 1, 2022 முதல் அமலுக்கு வந்துள்ளன. 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான எஃப்டிகளுக்கு வங்கி 2.50% முதல் 5.90% வரை வட்டி விகிதங்களை வழங்குகிறது. வங்கியின் எஃப்டி வட்டி விகிதத்தைப் பற்றி இங்கே காணலாம்.
மேலும் படிக்க | மில்லியனர்களை பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 5 விஷயங்கள்
கோடக் மஹிந்திரா வங்கியில் 2 கோடிக்கும் குறைவான எஃப்டி-க்கு கிடைக்கும் வட்டி விவரம்:
7-14 நாட்கள் - 2.50%
15-30 நாட்கள் - 2.50%
31-45 நாட்கள் - 3.00%
46-90 நாட்கள் - 3.00%
91-120 நாட்கள் - 3.50%
121-179 நாட்கள் - 3.50%
180 நாட்கள் - 4.75%
181-269 நாட்கள்- 4.75%
270 நாட்கள் - 4.75%
271-363 நாட்கள் - 4.75%
364 நாட்கள் - 5.25%
365-389 நாட்கள்-5.50%
391 நாட்கள் முதல் 23 மாதங்கள் வரை - 5.75%
23 மாதங்கள் - 5.75%
23 மாதங்கள் 1 நாள் - 2 வருடங்களுக்கும் குறைவான காலம் - 5.75%
2 முதல் 3 ஆண்டுகளுக்கு குறைவான காலம் - 5.75%
3 முதல் 4 ஆண்டுகளுக்கு குறைவான காலம் - 5.90%
4 முதல் 5 ஆண்டுகள் வரை - 5.90%
5 முதல் 10 ஆண்டுகள் - 5.90%
இந்த வங்கிகளும் தங்கள் எஃப்டி வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன
சமீபத்தில் பல பெரிய வங்கிகள் தங்கள் எஃப்டி வட்டி விகிதங்களை மாற்றியுள்ளன. கனரா வங்கி தனது சேமிப்பு கணக்கு மற்றும் எஃப்டி வட்டி விகிதங்களை மாற்றியுள்ளது. மேலும், ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியும் அதன் எஃப்டி வட்டி விகிதங்களை அதிகரித்துள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: பம்பர் டிஏ உயர்வு, ஊதியத்தில் பெரிய ஏற்றம் இருக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR