புதுடெல்லி: தற்போது பல நிறுவனங்கள் ஊழியர்களை பணியமர்த்தும்போதே, அவர்கள் அலுவலகத்திற்கு வர வேண்டுமா இல்லை வீட்டில் இருந்தே வேலை பார்க்கலாமா, அல்லது வாரத்திற்கு சில நாட்கள் மட்டும் அலுவலகத்திற்கு வந்தால் போதும் என்று பலதரப்பட்ட பணியிட வாய்ப்புகளை நிர்ணயிக்கின்றன. "ரிமோட் ஒர்க்" மற்றும் "வொர்க் ஃப்ரம் ஹோம்" விருப்பங்கள் குறைந்ததால், கலப்பின வேலைகள் (hybrid work model) உலகளவில் ஏப்ரல்-ஜூன் காலத்தில் 29 சதவிகிதம் உயர்ந்துள்ளது என்று ஒரு அறிக்கை கூறுகிறது.
கலப்பின வேலை (hybrid work mode) மாதிரி என்றால் என்ன?
ஒரு கலப்பின பணியிட மாதிரியானது, ஊழியர்களுக்கு நெகிழ்வுத்தன்மையையும் ஆதரவையும் வழங்க, அலுவலகம் மற்றும் தொலைதூரத்தில் இருந்து வேலை செய்யும் இரு தரப்பு மாடல் ஆகும். கலப்பின பணியிடத்தில், பணியாளர்கள் தேவைப்படும்போது அலுவலகத்திற்கு வந்தால் போதும். அல்லது, வாரத்தில் குறிப்பிட்ட நாட்கள் அலுவலகம், எஞ்சிய நாட்களில் வீட்டில் இருந்து பணிபுரிவது என்று பணியிடத்தை கலவையாக வைத்துக் கொள்வது என்ற மாடல் சொல்லலாம்.
பணியாளர் மற்றும் முதலாளிக்கு வசதி
இந்த ஹைபிரிட் மாடலில், விடுப்பு தேவைப்படும் சமயங்களில் அது சாத்தியம் இல்லை என்று அலுவலகம் மறுக்கும்போது, வெளியில் இருந்தே (உதாரணத்திற்கு வெளியூருக்கு செல்வது) வேலை செய்யும் சுதந்திரமும் கிடைக்கும். ஹைபிரிட் மாடலில் பணியாளர்கள் சிறந்த வேலை-வாழ்க்கை சமநிலையை அனுபவிக்கிறார்கள். இதனால், வேலையில் அவர்களின் ஈடுபாடும், செயல்திறனும் அதிகரிக்கிறது.
கலப்பின வேலை நன்மைகள்
இதன் எதிரொலியாக, அதிக உற்பத்தி, ஆரோக்கியமான மற்றும் நிலையான பணியாளர்களை உருவாக்க முடிவதால் நிறுவனங்களும் பயனடைகின்றன. பயணத்துறை, சுற்றுலா, சில்லறை வணிகம் மற்றும் நிதிச் சேவைகள் போன்ற தொழில்களில் கலப்பின வேலை (hybrid work model) தொடர்பான வேலை வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
வொர்க் ஃப்ரம் ஹோம்
"ரிமோட் ஒர்க்" மற்றும் "வொர்க் ஃப்ரம் ஹோம்" விருப்பங்கள் குறைந்ததால், கலப்பின வேலைகள் அதிகரித்து வருகின்றன. சர்வதேச அளவில் ஏப்ரல்-ஜூன் இடையிலான காலகட்டத்தில் 29 சதவிகிதம் கலப்பின வேலைகள் உயர்ந்துள்ளது என்று நேற்று (ஆகஸ்ட் 28 திங்கட்கிழமை) வெளியான ஒரு அறிக்கை கூறுகிறது.
அலுவலகம் மற்றும் வீடுகளுக்கு இடையில் ஊழியர்கள் தங்கள் வேலை நேரத்தை சமநிலைப்படுத்த உதவும் கலப்பின பணி வாய்ப்புகள் தற்போது அதிகரித்து வரும்போக்கு ஆரோக்கியமானதாக பார்க்கப்படுவதாக முன்னணி தரவு மற்றும் பகுப்பாய்வு நிறுவனமான GlobalData வெளிப்படுத்துகிறது.
கொரோனா காலகட்டம்
கொரோனா பரவிய காலத்தில், வீடுகளில் இருந்து பணிபுரியும் சாத்தியக்கூறுகள் தொடர்பான உலகளாவிய புரட்சி ஏற்பட்டது. அதன்பிறகு, இன்னும் பல நிறுவனங்கள் வீடுகளில் இருந்து பணிபுரியும் வாய்ப்பை (Work From Home) ஊழியர்களுக்கு வழங்குகின்றன. இதில் நிறுவனங்களுக்கு நிர்வாக செலவு உட்பட பல செலவுகள் குறைகிறது என்றால், பணியாளர்களுக்கும் சிலபல நன்மைகள் இருக்கிறது.
பயணத்துறை மற்றும் சுற்றுலா, சில்லறை வணிகம் மற்றும் நிதிச் சேவைகள் போன்ற தொழில்களில் கலப்பின வேலை தொடர்பான வேலை வாய்ப்புகள் இந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் அதிகரித்துள்ளன.
ஆய்வறிக்கை சொல்வது என்ன?
இந்த அறிக்கை தொடர்பாக விளக்கம் அளித்த குளோபல் டேட்டாவின் வணிக அடிப்படை ஆய்வாளர் ஷெர்லா ஸ்ரீபிரதா கூறுகையில், "அலுவலகத்திற்குத் திரும்புவதற்கான தேவைகளுக்கு இணங்குவதற்கும், பணி நெகிழ்வுத்தன்மையை வழங்குவதற்கும் இடையே நிறுவனங்கள் சமநிலையை ஏற்படுத்த முயற்சிப்பதால், ஹைபிரிட் வேலை தொடர்பான ஆர்வம் பணி வழங்குநர்கள் மற்றும் பணியாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது” என்று சொல்கிறார்.
எலிமென்ட் ஃப்ளீட் மேனேஜ்மென்ட், ஃப்ளைட் சென்டர் டிராவல் குரூப், ஆல்பர்ட்சன்ஸ் கம்பெனிகள், Amazon.com, Wells Fargo & Co, மற்றும் Hub International ஆகியவை ஹைப்ரிட் வேலை மாதிரியை வழங்கும் சில மிகப்பெரிய நிறுவனங்கள் என்று ஒரு பகுப்பாய்வு கூறுகிறது.
மேலும் படிக்க | Work From Home மூலமா வேலையா... பாத்து சூதானமா இருங்க - இனி அபராதம்தான்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ