இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! கோதுமை, துவரம் பருப்பு விலை குறைப்பு

Tur Dal Price: வாடிக்கையாளர்கள் மீதான பணவீக்கத்தின் தாக்கத்தை குறைக்க மாநில அரசுகளுக்கு உதவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jul 13, 2023, 02:26 PM IST
  • ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர்.
  • பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வு.
  • மாதம் 10,000 டன் கோதுமை மற்றும் அரிசி பருப்புகளை ஒதுக்கீடு.
இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்! கோதுமை, துவரம் பருப்பு விலை குறைப்பு title=

சில்லறை பணவீக்கம்: ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் மீண்டும் ஒருமுறை அதிகரித்துள்ளது. உணவுப் பொருட்களின் விலை உயர்வைத் தொடர்ந்து ஜூன் மாதத்தில் சில்லறை பணவீக்கம் மூன்று மாதங்களில் இல்லாத அளவுக்கு 4.81 சதவீதமாக உயர்ந்துள்ளது. இது முன்னதாக மே மாதத்தில் 4.31 சதவீதமாக இருந்தது. இதற்கிடையில், மத்திய கையிருப்பில் இருந்து ஒவ்வொரு மாதமும் 10,000 டன் கோதுமை மற்றும் அரிசியை ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தியது. இதனால், கூட்டுறவு கடைகள் மூலம் விற்பனை செய்து, விலையை குறைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மத்திய உணவுத் துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கடிதம் எழுதியுள்ள தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், 'உணவுப்‌ பொருள்‌ பணவீக்கத்தில்‌ காணப்படும்‌ கவலைக்குரிய நிலை குறித்து ஒன்றிய அரசின்‌ கவனத்திற்குக்‌ கொண்டுவர விழைவதாகவும்‌, உணவுப்‌ பொருட்களின்‌ விலை உயர்வு காரணமாக நுகர்வோருக்கு ஏற்படும்‌ பாதிப்பைக்‌ குறைப்பதில்‌ மாநில அரசுகளுக்கு உதவிடத்‌ தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்குமாறும்‌ கேட்டுக்கொண்டுள்ளார்‌. பல அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை உயர்வால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்கள் பெரும் சுமைக்கு ஆளாகியுள்ளனர். ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்ற சமீபத்திய ஆய்வுக் கூட்டத்தைப் பற்றிக் குறிப்பிட்ட ஸ்டாலின், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு உற்பத்தியாளர்களிடமிருந்து அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு மாநில அரசு ஏலம் கோரியுள்ளது என்று கூறினார்.

மேலும் படிக்க | Money Tips: ₹15,000 முதலீட்டில் நேந்திரம் பழ தூள் தயாரித்து ஆயிரங்களை அள்ளலாம்!

கோதுமை மற்றும் பருப்பு வகைகளை ஒதுக்கீடு செய்ய கோரிக்கை
உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பற்றாக்குறையைக் கருத்தில் கொண்டு, அத்தகைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான மத்திய அரசின் முயற்சிகளை விரைவுபடுத்துமாறு கோயலை முதல்வர் வலியுறுத்தினார். இதற்கிடையில், மத்திய பங்குகளில் இருந்து வழங்குவதன் மூலம் நிலைமையை உறுதிப்படுத்த முடியும், என்றார். எனவே, மத்திய இருப்பில் இருந்து மாதம் 10,000 டன் கோதுமை மற்றும் அரிசி பருப்புகளை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.

இந்த நிலையில் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மற்றும் உழவர் சந்தைகள் மூலம் காய்கறி, உணவு தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை வெளிச்சந்தை விலையைவிட குறைவான விலையில் விற்பனை செய்வது உள்ளிட்ட பல்வேறு குறுகிய மற்றும் நீண்டகால நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. நியாயவிலை கடைகள் மூலம் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாதந்தோறும் துவரம்பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவற்றை மானிய விலையில் வழங்கி வருகிறது.

மத்திய அரசின் கையிருப்பில் இருந்து மேற்காணும் உணவு பொருட்களை விடுவிப்பது நிலைமையை எளிதாக்கும் என்பதால், மாதம் ஒன்றுக்கு தலா 10 ஆயிரம் டன் கோதுமை, துவரம் பருப்பு ஆகியவற்றை மத்திய அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டும். இந்த பொருட்கள் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் மூலம் விற்பனை செய்யப்பட்டு விலை கட்டுப்படுத்தப்படும். இந்த விஷயத்தில் மத்திய ஜவுளி, வர்த்தகம் மற்றும் தொழில், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி உடனடியாக தலையிட வேண்டும் என்றார்.

மேலும் படிக்க | அம்ரித கலசம் திட்டத்தை மீண்டும் நீட்டித்துள்ள SBI... இந்த முறை மிஸ் பண்ணாதீங்க!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News