Salary: லாரி டிரைவர்களுக்கு 72 லட்சம் ரூபாய் சம்பளம்!

வேலை கிடைக்கவில்லை என பலர் வாடி வதங்கிக் கொண்டிருக்க, வாங்கப்பா வேலைக்கு என்று 72 லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து சூப்பர் போனஸ், வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை கொடுத்தாலும் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியாக இருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Sep 18, 2021, 07:30 AM IST
  • வாகன ஓட்டுநர்களுக்கான தேவை அதிகரித்துள்ளது
  • ஆண்டுக்கு 72 லட்ச ரூபாய் சம்பளத்தில் பிரிட்டனில் வேலை
  • வார விடுமுறை 2, போனசும் தாராளம்
Salary: லாரி டிரைவர்களுக்கு 72 லட்சம் ரூபாய் சம்பளம்!   title=

பொறியாளர்கள்-மருத்துவர்கள் என அதிகம் படித்தவர்கள் பெறும் சம்பளத்தைவிட டிரக் ஓட்டுநர்களுக்கு சம்பளம் அதிகம் என்பது உங்களுக்குத் தெரியுமா?

வேலை கிடைக்கவில்லை என பலர் வாடி வதங்கிக் கொண்டிருக்க, வாங்கப்பா வேலைக்கு என்று 72 லட்ச ரூபாய் சம்பளம் கொடுத்து சூப்பர் போனஸ், வாரத்தில் இரண்டு நாள் விடுமுறை கொடுத்தாலும் வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்பது ஆச்சரியாக இருக்கிறது. 

பொதுவாக வாகன ஓட்டுநர்களுக்கு பெரிய அளவில் சம்பளம் இருக்காது. ஆனால் அது உண்மையல்ல. இந்த நாட்டில் லாரி டிரைவர்களுக்கு சம்பளம், ஆண்டுக்கு 72 லட்சம் ரூபாய் என்பதைக் கேட்டால் ஆச்சரியமாக இருக்கிறது.

Also Read | சிறையை தகர்த்து கைதிகளை தப்பவைத்த பயங்கரவாதிகள்

தற்போது, பிரிட்டனில் உள்ள சூப்பர் மார்க்கெட் துறைக்கு ஓட்டுநர்களின் தேவை அதிகம் உள்ளது, தேவைக்கு ஏற்ப ஆட்கள் கிடைக்காததால், ஆண்டுக்கு 72 லட்சத்துக்கும் அதிகமான சம்பளம் வாகன ஓட்டுநர்களுக்கு வழங்க பிரிட்டன் சூப்பர் மார்க்கெட்கள் தயாராக உள்ளன.
 
 இங்கிலாந்தின் பல்பொருள் அங்காடிகளில், டிரக் டிரைவர்களுக்கு ஆண்டுக்கு 70,000 பவுண்டுகள் (ரூ. 70,88,515) சம்பளம் வழங்கப்படுகிறது இது மட்டுமல்லாமல், அவர்களுக்கு 2000 பவுண்டுகள் அதாவது சுமார் 2,02,612 ரூபாய் போனஸ் வழங்கப்படுகிறது.

ஓட்டுனர்களுக்கு ஏன் இவ்வளவு சம்பளம்?
டெஸ்கோ மற்றும் செயின்ஸ்பரி போன்ற நிறுவனங்கள், அதிகமான சம்பளத்திற்கு டிரைவர்களை பணியமர்த்துகின்றனர். தேவையை விட 100,000 ஓட்டுநர்கள் குறைவாக இருப்பதால் லாரி டிரைவர்களுக்கு கணிசமான சம்பளம் கிடைக்கிறது.

அதிலும் அனுபவம் வாய்ந்த ஓட்டுனர்களாக இருந்தால், அவர்கள் வேலையை விட்டு போய்விடக்கூடாது என்பதற்காக, லட்சக்கணக்கில் ஊதிய உயர்வு கொடுத்து பணியில் தக்க வைத்துக் கொள்கின்றனர்.

READ ALSO | லண்டனில் பள்ளி குழந்தைகளுக்கு தடுப்பூசி

பல்பொருள் அங்காடிகளின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தேவைப்படும் லாரி ஓட்டுநர்களை தக்க வைத்துக் கொள்வதே மிகவும் சிரமமாக இருக்கிறதாம்!
 
2 வருட ஒப்பந்தத்தில் வேலைக்கு வருபவர்களுக்கு பல சலுகைகள் கொடுக்கப்படுகின்றன. 17 ஆண்டுகளாக லாரி ஓட்டுநராக பணியாற்றிவரும் பாரி (Barry) என்ற டிரக் டிரைவர், இரண்டு வருட ஒப்பந்தத்தில் £ 2,000 போனஸ் என்ற சலுகை கொடுப்பதாக சொல்லி வேலைவாய்ப்பு முகவர்கள் தன்னை அணுகியதாக கூறினார்.

வாரத்திற்கு ஐந்து நாள் வேலை, அது இரவு நேரப் பணியாக இருக்கும். வார விடுமுறை இரண்டு நாட்கள் கொடுக்கப்படும். வார விடுமுறை நாட்களில் பணியாற்றினால் சம்பளம் கூடுதலாகும்.

சனிக்கிழமையன்று வேலை பார்த்தால், ஒன்றரை மடங்கு சம்பளம், ஞாயிற்றுக்கிழமை வேலை பார்த்தால், ஊதியம் இரட்டிப்பாகும். 

ALSO READ | அறுவைசிகிச்சை மூலம் தலைமுடியை தங்க முடியாக மாற்றிய பாடகர்

அது மட்டுமல்ல, அவர் ஆச்சரியத்துடன் என்ன கூறுகிறார் தெரியுமா? 'இந்த பணிக்கு கிடைக்கும் சம்பளம் ஆச்சரியளிக்கிறது. இந்த அளவு சம்பளம் என் முதலாளிக்குக் கூட இல்லை” என்றும் அவர் கூறினார்.

தற்போது நிறுவனங்கள் வார இறுதி நாட்களில் சூப்பர் மார்க்கெட்டுகளுக்கு டெலிவரி டிரைவர்களைத் தேடுவதாகவும், அந்த நிறுவனங்களுக்கு பணம் முக்கியமில்லை என்றும் அவர் கூறினார்.

டிரைவர் கிடைக்கவில்லை என்றால், பொருட்களின் விலை அதிகரிக்கும். செயின்ஸ்பரி மற்றும் டெஸ்கோ போன்ற பிரபல நிறுவனங்கள் தனக்கு வேலை வழங்கத் தயாராக இருப்பதாக பாரி கூறுகிறார்.  ஜூலை மாதம் டெஸ்கோ (Tesco) நிறுவனம் பணியமர்த்திய டிரைவர்கள் செப்டம்பர் இறுதிக்குள் வேலையில் சேர்ந்தால் 1,000 யூரோ போனஸை வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், ஓட்டுநர் பற்றாக்குறையின் நெருக்கடி இறுதியில் பொருட்களின் விலை உயர்வுக்கு வழிவகுக்கும் என்றும் கவலை எழுகிறது. அது உண்மை தான் என்று எச்சரிக்கிறார், லண்டன் மொத்த விநியோகஸ்தர்களின் கூட்டமைப்பின் தலைமை நிர்வாகி ஜேம்ஸ் பிஎல்பி.

ALSO READ | முழு மானை விழுங்கும் மலைப்பாம்பு நெஞ்சைப் பதபதைக்கும் வீடியோ

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News