Gold Rates Today: இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய தங்க விலை நிலவரம் எப்படி உள்ளது?

தங்க இறக்குமதி நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை (சிஏடி) பாதிக்கிறது. தங்க இறக்குமதியின் சரிவு நடப்பு நிதியாண்டின் 11 மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை 84.62 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைக்க உதவியுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 151.37 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.  

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Sripriya Sambathkumar | Last Updated : Mar 23, 2021, 01:10 PM IST
  • டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய அனைத்து முக்கிய நகரங்களிலும் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது.
  • இந்தியாவில் தங்க நகைகளுக்காக தேவை அதிகமாக இருப்பதால், இங்கு தங்கத்திற்கான தேவையும் அதிகமாக உள்ளது.
  • இந்தியா ஆண்டுதோறும் 800-900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது.
Gold Rates Today: இன்று தங்கம் வாங்கலாமா? இன்றைய தங்க விலை நிலவரம் எப்படி உள்ளது?  title=

Gold Rate 23 March 2021: டெல்லி, சென்னை, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய அனைத்து முக்கிய நகரங்களிலும் தங்கத்தின் விலை இன்று சற்று உயர்ந்துள்ளது. MCX-ல், தங்க விலை ரூ. 45,880 ஆக உள்ளது.

முக்கிய நகரங்களில் இன்றைய தங்க விலை நிலவரம்:

டெல்லியில் 22 காரட்டுக்கான தங்கத்தின் விலை (Gold Rate) ரூ. 44,200 ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ. 190 குறைவாகும். 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 48,220 ஆக உள்ளது. இது நேற்றைய விலையை விட ரூ. 170 குறைவாகும். 

சென்னையில், 22 காரட் தங்கத்தின் விலை பத்து கிராமுக்கு ரூ 10 குறைந்து 44,540 ரூபாயாக உள்ளது. 24 காரட் தங்கம் 10 ரூபாய் குறைந்து ரூ. 47,219 ஆக உள்ளது. 

மும்பையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 120 ரூபாய் குறைந்து 22 காரட் 43,800 ரூபாயாகவும் 24 காரட் 44,800 ரூபாயாகவும் உள்ளது. 

உலகளாவிய சந்தைகளில் தங்கம் (Gold) மற்றும் வெள்ளி விலைகள் பலவீனமடைந்துள்ளன. இந்தியாவிலும் உள்நாட்டு சந்தையில் இந்த பலவீனத்தைக் காண முடிகிறது. 

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தங்கத்தின் விலை காலை 10 மணியளவில் எடுக்கப்பட்டவை. நாள் முழுவதும் தங்கத்தின் விலை மாறிக்கொண்டே இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

மேலும் அந்தந்த மாநிலங்களின் வரி வகைகளுக்கு ஏற்ப பல்வேறு பகுதிகளில் விலைகளில் மாற்றம் இருக்கும். எனவே தங்கம் வாங்குபவர்கள் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் நேரடி விலைகளைக் கண்காணித்து முடிவெடுப்பது நல்லது. 

ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!

2020-21 ஏப்ரல் முதல் பிப்ரவரி வரை தங்க இறக்குமதி குறைந்தது

2020-21 ஏப்ரல்-பிப்ரவரி மாதங்களில் தங்க இறக்குமதி 3.3 சதவீதம் சரிந்து 26.11 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது என்று வர்த்தக அமைச்சக தகவல்கள் தெரிவிக்கின்றன. 2019-20 ஏப்ரல்-பிப்ரவரி மாதங்களில் தங்கத்தின் இறக்குமதி 27 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது. 

தங்க இறக்குமதி நாட்டின் நடப்புக் கணக்கு பற்றாக்குறையை (சிஏடி) பாதிக்கிறது. தங்க இறக்குமதியின் சரிவு நடப்பு நிதியாண்டின் 11 மாதங்களில் நாட்டின் வர்த்தக பற்றாக்குறையை 84.62 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் குறைக்க உதவியுள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 151.37 பில்லியன் அமெரிக்க டாலராக இருந்தது.

இந்தியா மிகப்பெரிய தங்க இறக்குமதியாளராக உள்ளது

தங்கத்தை மிகப்பெரிய அளவில் இறக்குமதி செய்யும் நாடு இந்தியா. இந்தியாவில் தங்க நகைகளுக்காக தேவை அதிகமாக இருப்பதால், இங்கு தங்கத்திற்கான தேவையும் அதிகமாக உள்ளது. இந்தியா ஆண்டுதோறும் 800-900 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது.

ALSO READ: Gold Rates Today: இப்போதே தங்கம் வாங்கினால் நல்ல லாபம் பார்க்கலாம்: விலை நிலவரம் இதோ

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News