Gold rates today: மக்களை மகிழ்விக்கும் தங்கம்! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ!

2020 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தங்கத்தின் விலை சுமார் 11,000 குறைந்துள்ளது. 2020 ஆகஸ்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை மிக அதிகமாக 10 கிராமுக்கு 57,008 ரூபாயாக இருந்தது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 2, 2021, 02:43 PM IST
  • 2020 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தங்கத்தின் விலை சுமார் 11,000 குறைந்துள்ளது.
  • தற்போதைய விலை வீழ்ச்சியால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
  • சில்லறை வியாபாரிகளிடம் நகைகளுக்கான தேவை அதிகரித்துள்ளது.
Gold rates today: மக்களை மகிழ்விக்கும் தங்கம்! இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம் இதோ! title=

Gold Price Today, 2 March 2021: முந்தைய சந்தை அமர்வில் கீழே சென்ற தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை உயர்ந்தது. 10 கிராம் 24 காரட் தங்கத்தின் விலை ரூ. 45,950 ஆக உயர்ந்தது. வெள்ளி விலை 1 கிலோவுக்கு ரூ .66,600 ஆக குறைந்துள்ளதாக ஊடக அறிக்கைகள் தெரிவித்துள்ளன. 2020 ஆகஸ்ட் மாதத்திலிருந்து தங்கத்தின் விலை சுமார் 11,000 குறைந்துள்ளது. 2020 ஆகஸ்டில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு தங்கத்தின் விலை மிக அதிகமாக 10 கிராமுக்கு 57,008 ரூபாயாக இருந்தது.

சர்வதேச விலைகள் மீட்கப்பட்டதால் கடந்த வாரம் முழுவதும் தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரங்கள் நிலையில்லாமல் இருந்தன. தங்கத்தின் விலை கடந்த 6 மாதங்களில் 10 கிராமுக்கு ரூ .10,000 அதாவது 18 சதவீதம் குறைந்துள்ளது. பல்வேறு வரி வகைகளின் அடிப்படையில் தங்கத்தின் விலை மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். அத்துடன் வெவ்வேறு நகைக் கடைகளில் வசூலிக்கப்படும் செய்கூலி மற்றும் பிற கட்டணங்களும் மாறுபடுகின்றன.

முக்கிய நகரங்களில் இன்று தங்கத்தின் விலை நிலவரத்தைப் பார்க்கலாம்:

புதுடெல்லியில், 22 காரட் தங்கம் (Gold) இன்று 10 கிராமுக்கு ரூ .45,210 ஆகவும், மும்பையில் 44,950 ரூபாயாகவும் உயர்ந்துள்ளது. இதேபோல், சென்னையில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .43,560 ஆகவும், கொல்கத்தாவில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .45,470 ஆகவும் உள்ளது. பெங்களூரில் தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ .43,060 ஆக உயர்ந்துள்ளது.

ALSO READ: Gold, Silver வாங்கும்போது KYC அவசியமா? அரசாங்கம் என்ன சொல்கிறது?

தங்கத்தின் தேவையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது:

தங்கத்தின் விலையில் (Gold Price) ஏற்பட்டுள்ள வீழ்ச்சியைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தங்கம் வாங்குவதில் மக்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. விலை குறந்ததால், சந்தைகளில் தங்கத்தின் தேவையும் அதிகரித்துள்ளது. ராய்ட்டர்ஸிடம் பேசிய கொல்கத்தாவைச் சேர்ந்த மொத்த விற்பனையாளர் ஒருவர், தற்போதைய விலை வீழ்ச்சியால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளதாகவும், அதைத் தொடர்ந்து சில்லறை வியாபாரிகளிடம் நகைகளுக்கு நல்ல தேவை எற்பட்டுள்ளதாகவும் கூறினார்.

வீட்டில் தங்கம் உள்ளதா?

விரைவில் தங்கத்தை வீட்டில் வைத்திருப்பதற்கான விதிகளில் அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. தங்கத்தை பணமாக்கும் திட்டத்தில் (Gold Monetization Scheme) அரசாங்கம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகிறது. இந்த திட்டத்தில் அனைத்து அரசு வங்கிகளும் சேர்க்கப்படுகின்றன.

தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், ஒவ்வொரு வங்கியின் குறைந்தபட்சம் 50% கிளைகளில் ஜிஎம்எஸ் திட்டத்தின் கீழ் வாடிக்கையாளர்களுக்கு சேவை வழங்கப்படுவதை அரசாங்கம் கட்டாயமாக்கக்கூடும். இந்த திட்டத்தின் கீழ் நகைக்கடைக்காரர்களுக்கும் தங்க வைப்பு பெறும் உரிமை கிடைக்கக்கூடும். மேலும், இந்த திட்டத்தின் கீழ், வங்கிகள் நகை விற்பனையாளர்கள் மூலம் தங்க டெபாசிட்டைப் பெற முடியும். புதிய மாற்றங்களின் கீழ், இந்தத் திட்டத்துடன் அதிக வாடிக்கையாளர்களை இணைக்க முயற்சி மேற்கொள்ளப்படும்.

தங்கத்தை பணமாக்கும் திட்டத்தின் கீழ், தங்கத்தை வங்கியில் டெபாசிட் செய்வதற்கு 2.25 சதவீதம் வரை வங்கி உங்களுக்கு வட்டி செலுத்தும். நடுத்தர காலம் மற்றும் நீண்ட காலத்தைத் தவிர, இந்த திட்டத்தில் நீங்கள் 1.3 ஆண்டுகள், 2.4 ஆண்டுகள் மற்றும் 5 நாட்களுக்கு கூட தங்கத்தை டெபாசிட் செய்யலாம்.

ALSO READ: இனி தங்கத்தின் தூய்மை பற்றிய கவலை வேண்டாம்: BIS Care Mobile App உங்களுக்கு உதவும்!!

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News