தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் 4000 ரூபாய் வீழ்ச்சி, அடுத்த வாரம் என்ன ஆகும்..!!

தங்கம் வெள்ளி விலை, ஆகஸ்ட் 10 முதல் ஒவ்வொரு வாரமும் குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.4000 வரை  குறைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 12, 2020, 06:57 PM IST
  • தங்கம் வெள்ளி விலை, ஆகஸ்ட் 10 முதல் ஒவ்வொரு வாரமும் குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.4000 வரை குறைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்வோம்.
  • சென்னையில், நேற்று 24 கேரட் தங்கத்தின் விலை 10 கிராமிற்கு 53,430 ரூபாய் என இருந்தது. ஒரு பவுனுக்கு 42,744 ரூபாய் ஆகும்.
தங்கத்தின் விலை ஒரு மாதத்தில் 4000 ரூபாய் வீழ்ச்சி, அடுத்த வாரம் என்ன ஆகும்..!! title=

தங்கம் வெள்ளி விலை, ஆகஸ்ட் 10 முதல் ஒவ்வொரு வாரமும் குறைந்து வருகிறது. தங்கத்தின் விலை 10 கிராமிற்கு ரூ.4000 வரை  குறைந்துள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்று தெரிந்து கொள்வோம்.

புது தில்லி: பொருளாதார மீட்சி ஏற்படுவதற்கான அறிகுறிகளால் தங்கத்தின் விலை குறைந்து வருகிறது. உலகின் மிகப்பெரிய பொருளாதாரம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில்  பொருளாதாரம் மீளும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை, தங்கத்தின் விலை 1 சதவீதத்திற்கும் அதிகமாக சரிந்தது. அடுத்த ஆண்டு தொடக்கம் வரை, தங்கத்தின் விலை பெரிய அளவில் அதிகரிக்க வாய்ப்பில்லை என்று வல்லுநர்கள் நம்புகின்றனர். சிட்டி குழுமத்தின் சமீபத்திய அறிக்கையில்,  தங்கத்தின் விலை உயரும் வாய்ப்பு 30 சதவீதம் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில், வீழ்ச்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு 20 சதவீதம் என கூறப்பட்டுள்ளது. 

உள்நாட்டு சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து வீழ்ச்சியடைந்து வருகிறது. இதன் பின்னணியில் உள்ள முக்கிய காரணம் அதிகரித்து வரும் ரூபாயின் மதிப்பு . ஆகஸ்ட் 10 ஆம் தேதி தங்கத்தின் விலை 10 கிராமுக்கு 56200 ரூபாய் என்ற அளவை எட்டியது. இப்போதுஉள்நாட்டு சந்தையில் பத்து கிராம் தங்கத்தின் ரூ .52 ஆயிரமாக குறைந்துள்ளது.

மேலும் படிக்க | சிறிய மூலதனத்தில், அதிக வருமானம் தரும் “ஸ்மார்ட் தொழில்” பற்றி அறியலாம்..!!!

சென்னையில், நேற்று 24 கேரட் தங்கத்தின் விலை  10 கிராமிற்கு 53,430 ரூபாய் என இருந்தது. ஒரு பவுனுக்கு 42,744 ரூபாய் ஆகும். அதே போல 22 கேரட் 10 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை 48,980 ரூபாய்க்கு விற்பனை ஆனது. ஒரு பவுன் விலை 39,184 ரூபாய்.  

எப்படி பார்த்தாலும் தங்கத்தின் விலை பெரிய அளவில் உயர வாய்ப்பில்லை என நிபுணர்கள் கருதுகின்றனர்.

மேலும் படிக்க | ITR, வருமான வரி தாக்கல் சிக்கலின்றி செய்ய தேவையான 5 ஆவணங்கள்..!!!

Trending News