வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் அப்டேட்: அரசு ஊழியர்களுக்கு (Government Employees) அரசு பெரிய பரிசை வழங்கியுள்ளது. இனி அரசு ஊழியர்களும் வந்தே பாரத் எக்ஸ்பிரஸில் (Vande Bharat Train) பயணம் செய்துக்கொள்ளலாம். இப்போது அரசு ஊழியர்கள் தங்கள் டூர், ட்ரேனிங், டிரான்ஸஃபர் மற்றும் ரிடாயர்மென்ட்காக வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்ஸுடன் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸில் (Humsafar Express) பயணிக்கலாம். முன்னதாக, இந்த ஊழியர்கள் சதாப்தி மற்றும் ராஜ்தானி ரயில்களில் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நிதி அமைச்சகம் தகவல் அளித்துள்ளது:
இது குறித்து நிதி அமைச்சகம் சார்பில் அலுவலக குறிப்பாணை வெளியிட்டு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, இனி அரசு ஊழியர்கள் வந்தே பாரத் ரயிலில் தங்கள் டூர் மற்றும் ட்ரேனிங் உட்பட பல பணிகளுக்காக இந்த ரயிலில் பயணிக்கலாம். எனவே அரசாங்க அதிகாரிகள் தங்கள் உத்தியோகபூர்வ பயணத்தில் இதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
பரிசீலனைக்கு பின், ரயில்வே துறை ஒப்புதல் அளித்தது:
இது விவகாரம் தொடர்பாக எங்கள் கூட்டாளர் இணையதளமான ஜீ பிசினஸின் கூற்றுப்படி, வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் மற்றும் ஹம்சஃபர் ரயில் ஆகியவை அரசாங்க வருகைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளப்படலாம். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் தற்போது நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை பரிசீலனைக்குப் பிறகு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
ராஜ்தானி ரயிலியில் வழங்கப்பட்ட அனைத்து வசதிகளும் இதில் கிடைக்கும்:
இந்த உத்தரவுக்குப் பிறகு, அரசு அதிகாரிகள் இனி வரும் காலம் ராஜ்தானி அல்லது சதாப்தி ரயில்களில் (Rajdhani and Shatabdi Express) பெறும் அனைத்து வசதிகளையும் வந்தே பாரத் ரயில் மற்றும் ஹம்சஃபர் எக்ஸ்பிரஸ் ஆகியவற்றில் பெற்றுக்கொள்ள முடியும் என்று நிதி அமைச்சகம் அறிவிப்பின் மூலம் வெளியிட்டுள்ளது.
ஓராண்டுக்கு முன் அறிவிப்பு வெளியிடப்பட்டது:
முதல் தனியார் ரயிலான தேஜாஸால் எக்ஸ்பிரஸுக்கு ஏற்பட்ட நஷ்டத்தைக் குறைக்க, அரசாங்கம் இத்தகைய நடவடிக்கையை எடுத்தது, தற்போத இது ரயில்வேக்கு பயனளிக்கிறது. கடந்த 12 செப்டம்பர் 2022 ஆம் தேதி அன்று தேஜாஸ் எக்ஸ்பிரஸ் ரயிலை அரசு அதிகாரிகளும் பயன்படுத்தலாம் என்று நிதி அமைச்சகத்தின் செலவினத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் எப்போது தொடங்கப்பட்டது:
வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் விரைவுவண்டியானது தனது முதல் பயணத்தை 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி 15 ஆம் தேதி அன்று தொடங்கியது. அப்போது புது டெல்லியிலிருந்து வாரனாசிக்கான முதல் சோதனை ஓட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். 2019 ஆம் ஆண்டு ஜனவரி 27 ஆம் தேதியில் இந்த விரைவு வண்டியின் சேவையானது வந்தே பாரத் விரைவுவண்டி எனப் பெயரிடப்பட்டது. முதல் நாள் சோதனை ஓட்டத்தின் போது, வாரணாசியிலிருந்து வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் திரும்பிய போது நடுவழியிலேயே பழுதானது. பின்னர் பழுது சரிசெய்யப்பட்டு மீண்டும் புது டெல்லியை ரயில் வந்தடைந்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ