₹99 கட்டணத்தில் மூன்று மாத இலவச டெலிவரி... சலுகைகளை அள்ளி வழங்கும் Swiggy!

Swiggy One Lite மெம்பர்ஷிப் திட்டத்தில், மூன்று மாத இலவச டெலிவரி, பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் போன்றவற்றை வெறும் ரூ.99க்கு பெறுவீர்கள். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Oct 11, 2023, 07:42 AM IST
  • பண்டிகையை முன்னிட்டு ஸ்விக்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல சலுகைகளை வழங்கியுள்ளது.
  • Swiggy One இன் புதிய மற்றும் மிகவும் மலிவு கட்டணத்தில் கிடைக்கும் சேவை.
  • மூன்று மாத சந்தாவிற்கு வெறும் ரூ.99 என்ற கவர்ச்சிகரமான கட்டணத்தில் கிடைக்கும் சலுகை.
₹99 கட்டணத்தில் மூன்று மாத இலவச டெலிவரி... சலுகைகளை அள்ளி வழங்கும் Swiggy! title=

SWIGGY One Lite: பிரபல ஆன்லைன் உணவு டெலிவரி தளமான ஸ்விக்கி நிறுவனம் அதன் புதிய சலுகையான Swiggy One Lite ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. Swiggy One Lite என்ற இந்த அம்சத்தின் கீழ் உணவு, மளிகை பொருட்கள் மற்றும் பிக்-அப் மற்றும் டிராப் சேவைகள் ஆகியவற்றில் சலுகளைகளை அள்ளிக் கொடுக்கிறது. மேலும் ஸ்விக்கி ஒன் லைட் சிறப்பு அம்சம் என்னவென்றால் மூன்று மாத சந்தாவிற்கு வெறும் ரூ.99 என்ற கவர்ச்சிகரமான கட்டணத்தில் கிடைக்கிறது. இந்த அதிரடியான அறிவிப்புகள் ஃபுட் டெலிவரி சேவையில் ஸ்விக்கி ஒரு புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம். வாடிக்கையாளர்கள் இதனால் பெரும் பயனை அடைவார்கள். பண்டிகை காலத்தில் விற்பனையை அதிகரிக்கும் நோக்கிலும், வாடிக்கையாளர்களை கவரும் நோக்கிலும் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. 

Swiggy One Lite மெம்பர்ஷிப் திட்டத்தில், மூன்று மாத இலவச டெலிவரி, பிரத்யேக சலுகைகள் மற்றும் தள்ளுபடிகள் போன்றவற்றை வெறும் ரூ.99க்கு பெறுவீர்கள். பண்டிகையை முன்னிட்டு ஸ்விக்கி தனது வாடிக்கையாளர்களுக்கு நல்ல சலுகைகளை வழங்கியுள்ளது. இது Swiggy One இன் புதிய மற்றும் மிகவும் மலிவு கட்டணத்தில் கிடைக்கும் சேவையாகும். உணவு, மளிகை பொருட்கள் மற்றும் பிக்-அப் மற்றும் டிராப் சேவைகள் போன்ற பல நன்மைகளை வழங்கும் சிறந்த திட்டமாகும்.

ஸ்விக்கி ஒன் லைட்டின் நன்மைகள்

3 மாதங்களுக்கு Swiggy One Lite மெம்பர்ஷிப் மூலம், 149 ரூபாய்க்கு மேல் உணவு ஆர்டர்களில் பயனர்கள் மொத்தம் 10 இலவச டெலிவரிகளைப் பெறுவார்கள். கூடுதலாக, 199 ரூபாய்க்கு மேல் ஆர்டர் செய்தால், இன்ஸ்டாமார்ட்டில் 10 இலவச டெலிவரிகளின் பலனையும் பெறுவார்கள். இலவச டெலிவரியுடன், பயனர்கள் 20,000 உணவகங்களில் வழக்கமான சலுகைகளுக்கு மேல் 30 சதவீதம் கூடுதல் தள்ளுபடியையும் பெறுவார்கள். லைட் உறுப்பினர்களில் ஒருவர் 60 ரூபாய்க்கு மேல் Swiggy Genie டெலிவரிகளில் 10 சதவீத தள்ளுபடியைப் பெறுவார்.

மேலும் படிக்க | அடிச்சது ஜாக்பாட்! ஃபிக்சட் டெபாசிட்களுக்கு 9.11% வரை வட்டி, எந்த வங்கி கொடுக்கிறது?

பண்டிகை காலங்களில் வாடிக்கையாளர்கள் பயனடைவார்கள்

Swiggy இன் வருவாய் மற்றும் வளர்ச்சியின் துணைத் தலைவர் அனுராக் பங்கனமாமுலா இது குறித்து கூறுகையில், மக்களின் வாழ்க்கையை எளிதாக்க ஸ்விக்கி நிறைய முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. Swiggy One உறுப்பினர்கள் 10ல் 9 பேர் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட சேவைகளின் பலன்களைப் பெறுகின்றனர். இது மிகவும் மதிப்புமிக்க உறுப்பினர் திட்டமாகும். எந்தவொரு திட்டத்தையும் இதுவரை பயன்படுத்தாத வாடிக்கையாளர்களை மனதில் வைத்து இந்த சிறப்பு சலுகை வழங்கப்பட்டுள்ளது. இப்போது அவர்கள் இந்த சிறப்பு சலுகையைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 3 மாதங்களுக்கு வெறும் 99 ரூபாய் அறிமுக விலையில், Swiggy One Lite பயனர்கள் உணவு, மளிகை மற்றும் Genie பிரிவுகளில் செய்யப்படும் ஆர்டர்களுக்கு உறுப்பினர் கட்டணத்தை விட சராசரியாக 6 மடங்கு அளவிற்கு பணத்தை சேமிக்கும் வாய்ப்பை பெறுவார்கள் என்றார்.

இந்திய டிஜிட்டல் சேவை துறையில் மிகப் பெரிய அளவிலான ஆதிக்கமும், வாடிக்கையாளர்களையும் கொண்டு உள்ள துறை என்றால் ஆன்லைன் புட் டெலிவரி மற்றும் குவிக் காமர்ஸ் துறை தான். இத்துறையில் சோமேட்டோ, ஸ்விக்கி ஆகிய இரு நிறுவனங்களும் பெரும் ஆதிக்கத்தை செலுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது. ஸ்விக்கியின் இந்த சலுகையை தொடர்ந்து Zomato நிறுவனமும் ஏதேனும் சலுகைகளை அளிக்குமே என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும் .

மேலும் படிக்க | நிம்மதியான ரிட்டயர்மெண்ட் வாழ்க்கைக்கு பெஸ்ட் ஓய்வூதிய திட்டம்! டாப் 5 திட்டங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News