முடங்கிய இணைய சேவை; ஒரே இரவில் மார்க்கிற்கு 50 ஆயிரம் கோடி இழப்பு

நேற்றிரவு சுமார் 8 மணிநேரம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்அப் சேவைகள் முடங்கியது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 5, 2021, 10:30 AM IST
முடங்கிய இணைய சேவை; ஒரே இரவில் மார்க்கிற்கு 50 ஆயிரம் கோடி இழப்பு title=

உலகின் மிகப்பெரிய சமூக வலைத்தளங்களானது வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம், பேஸ்புக். இந்த சேவைகள் இந்தியா மட்டுமின்றி உலக அளவில் திடீரென முடங்கியது. நேற்று இரவு 9 மணியளவில் வந்த இந்த சேவைகளில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மக்கள் மிகுந்த சிரமத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பேஸ்புக் (Facebook), வாட்ஸ்அப் (Whatsapp) மற்றும் இன்ஸ்டாகிராம் (Instagram) முடக்கப்பட்டதால், பல நிறுவனங்களில் வேலை நிறுத்தப்பட்டது. எனவே சமூக ஊடகங்களில் #WhatsAppDown மற்றும் #FacebookDown ஆகியவை டிரென்ட் ஆகத் தொடங்கின. இந்த திடீர் சேவை முடக்கத்தால் வாட்ஸ்-அப்பில் செய்திகளை அனுப்பவும், வரும் செய்திகளை தெரிந்து கொள்ளவும் முடியவில்லை. பல மணி நேரத்துக்கும் மேலாக இந்த சேவைகள் முடங்கி இருந்தது.

ALSO READ | 8 மணி நேரம் முடங்கிய Facebook, WhatsApp, Instagram; காரணம் என்ன

இந்த சேவை மீண்டும் அதிகாலை 4 மணி அளவில் இயல்பு நிலைக்கு திரும்பியது. அதன்படி சுமார் 8 - 9 மணி நேரத்துக்கும் மேலாக வாட்ஸ் அப், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் முடங்கியதால் சமூக வலைதள பயனாளர்கள் கடும் அவதிப்பட்டனர்.

இந்நிலையில் 8 மணிநேரத்துக்கும் மேல் தடைப்பட்ட இந்த சேவைகளால் அதன் பயனாளர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். இதன் விளைவாக பேஸ்புக் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் சக்கர்பெர்க்கின் சொத்து மதிப்பு பெரும் சரிவை சந்தித்திருக்கிறது. இந்த சேவைகள் தடைப்பட்ட சில மணிநேரங்களில் அவரது சொத்துமதிப்பு சுமார் 7 பில்லியன் டாலர் அளவில் சரிந்திருக்கிறது. அதாவது இந்திய மதிப்பின் படி சுமார் ஐம்பதாயிரம் கோடி ரூபாய் ஆகும். 

இதன் விளைவாக உலக பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்திற்கு இறங்கி, பில் கேட்ஸுக்கு பின் சென்றிருக்கிறார் மார்க். இந்த சம்பவம் காரணமாக தற்போது அவரது சொத்து மதிப்பு சுமார் 120 பில்லியன் டாலர்களாக ஆனது. முன்னதாக சில வாரங்களுக்கு முன்பு அவரது சொத்து மதிப்பு சுமார் 140 பில்லியன் டாலர்களாக இருந்தது. இதன்மூலம் பேஸ்புக் நிறுவனத்தின் மதிப்பும் நேற்று சுமார் 5% சரிந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

ALSO READ | டைப் செய்யாமலேயே வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்புவது எப்படி?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News