ஓய்வூதியத் திட்டத்தின் (இபிஎஸ்) முதலீட்டின் உச்சவரம்பை நீக்குவது குறித்து தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது, தற்போது அதிகபட்சமாக மாதந்தோறும் வழங்கப்படும் ஓய்வூதிய சம்பளம் ரூ.15,000 மட்டுமே. அதாவது, உங்கள் சம்பளம் என்னவாக இருந்தாலும், ஓய்வூதியத்தின் கணக்கீடு ரூ.15,000 மட்டுமே. இந்த வரம்பை நீக்குவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. ஆகஸ்ட் 12 அன்று, ஊழியர்களின் ஓய்வூதியத்தை 15,000 ரூபாயாக வரையறுக்க முடியாது என்று இந்திய யூனியன் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎப்ஓ) தாக்கல் செய்த மனுவின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்த போதிலும் தொடர்ந்து விவாதம் நடைபெற்று வருகிறது.
மேலும் படிக்க | எதற்காக டெர்ம் இன்சூரன்ஸ் திட்டத்தை நாம் எடுக்க வேண்டும்?
ஊழியர்கள் இபிஎப்-ல் உறுப்பினராகும் அதே நேரத்தில் இபிஎஸ்-லும் உறுப்பினராகின்றனர். இபிஎப்-ல் ஊழியர்கள் தனது சம்பளத்தில் 12% கொடுக்கிறார், அதே அளவு தொகையை அவரது நிறுவனமும் கொடுக்கிறது. அந்த தொகையில் ஒரு பகுதி 8.33% இபிஎஸ்-க்கு செல்கிறது. ஊழியர் ஓய்வு பெற்றாலும், ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.15000 என்று கருதப்படுகிறது, இதன் அடிப்படயில் இபிஎஸ்-ன் கீழ் ஒரு ஊழியர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும்.
செப்டம்பர் 1, 2014க்கு முன்னர் நீங்கள் இபிஎஸ்-ல் சேர்ந்திருந்தால் ஓய்வூதியர்களின் அதிகபட்ச மாதச் சம்பள வரம்பு ரூ.6500 ஆக இருக்கும். அதுவே செப்டம்பர் 1, 2014க்குப் பிறகு நீங்கள் இபிஎஸ்-ல் சேர்ந்திருந்தால், அதிகபட்ச சம்பள வரம்பு ரூ.15,000 ஆக இருக்கும். இப்போது ஒருவரது ஓய்வூதியம் 'மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x வருடங்கள் இபிஎஸ் )/70' என்கிற பார்முலாவை வைத்து கணக்கிடப்படுகிறது. செப்டம்பர் 1, 2014க்குப் பிறகு ஊழியர் இபிஎஸ்-ல் சேர்ந்தார்கள் என்றால் அவர்களுக்கு ஓய்வூதியம் ரூ.15,000 ஆக இருக்கும், அவர் 30 ஆண்டுகள் பணிபுரிந்து இருந்தால், 'மாதாந்திர ஓய்வூதியம் = 15,000X30/7= ரூ 6428' ஆக இருக்கும்.
6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் ஊழியர்கள் பணிபுரிந்து இருந்தால் அது 1 வருடமாக கருதப்படும், அதுவே 6 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் அது கணக்கில் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. அதாவது ஒரு ஒல்லியார் 14 ஆண்டுகள் 7 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அது 15 ஆண்டுகளாகக் கருதப்படும். ஆனால் அவர் 14 ஆண்டுகள் மற்றும் 5 மாதங்கள் வேலை செய்திருந்தால் அது 14 ஆண்டுகள் என்றே கணக்கில் கொள்ளப்படும். மேலும் இபிஎஸ்-ன் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.1000 மற்றும் அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7500 ஆகும்.
மேலும் படிக்க | SIP முதலீட்டில் ஏகப்பட்ட லாபம்: இந்த அம்சங்களில் தெளிவு தேவை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR