EPFO pension scheme: இனி ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்படும்! ரூ.15000 வரம்பு நீக்கப்படும்!

ஓய்வூதியதாரர்கள் முன்னர் எவ்வளவு சம்பளம் வாங்கியிருந்தாலும் சரி, ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய சம்பளம் மாதம் ரூ.15,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.  

Written by - RK Spark | Last Updated : Jul 14, 2022, 08:37 AM IST
  • ஊழியர்களின் ஓய்வூதியத்தை 15,000 ரூபாயாக வரையறுக்க முடியாது - இபிஎஃப்ஓ.
  • இபிஎஃப்க்கு கொடுக்கப்படும் தொகையில்ஒரு பகுதி 8.33% இபிஎஸ்க்கும் செல்கிறது.
  • ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.15 ஆயிரமாக கருதப்படுகிறது.
EPFO pension scheme: இனி ஓய்வூதியம் இரட்டிப்பாக்கப்படும்! ரூ.15000 வரம்பு நீக்கப்படும்! title=

ஊழியர் ஓய்வூதியத் திட்டமானது, ஊழியர்களுக்கென்று வைக்கப்பட்டுள்ள ஓய்வூதிய சம்பளத்தின் வரம்பை நீக்குவது குறித்து பேசி வருகிறது.  தற்போது ஊழியர்களுக்கு வழங்கப்படும் அதிகபட்ச ஓய்வூதிய சம்பளம் மாதம் ரூ.15,000 மட்டுமே, இதனை நீக்குவதற்கான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதால், நீதிமன்றத்தின் பதில் குறித்து ஊழியர்கள் காத்திருக்கின்றனர்.  ஓய்வூதியதாரர்கள் முன்னர் எவ்வளவு சம்பளம் வாங்கியிருந்தாலும் சரி, ஓய்வூதியதாரர்களுக்கு ஓய்வூதிய சம்பளம் மாதம் ரூ.15,000 மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் படிக்க | இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்; அடுத்த வாரம் சமையல் எண்ணெயின் விலை குறையும் 

கடந்த ஆகஸ்ட் மாதம், ஊழியர்களின் ஓய்வூதியத்தை 15,000 ரூபாயாக வரையறுக்க முடியாது என்று இந்திய யூனியன் மற்றும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) தாக்கல் செய்த மனுவின் விசாரணையை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்த போதிலும் இதுதொடர்பான விசாரணை இன்னும் நடைபெற்று கொண்டு தான் இருக்கிறது.  ஒரு வேலையில் சேர்ந்து இபிஎஃப்-ல் உறுப்பினராக சேரும் சமயம் இபிஎஸ்-லும்  உறுப்பினர் ஆக நேரிடுகிறது.  இதில் சேர்வதன் மூலம் ஊழியர் தனது சம்பளத்தில் 12% இபிஎஃப்-ல் கொடுக்கிறார், அதே தொகையை அவரது நிறுவனமும் கொடுக்கிறது.  அதேசமயம் இபிஎஃப்க்கு கொடுக்கப்படும் தொகையில்ஒரு பகுதி 8.33% இபிஎஸ்க்கும் செல்கிறது.  

ஓய்வூதியத்தை கணக்கிடுவதற்கான அதிகபட்ச சம்பளம் ரூ.15 ஆயிரமாக கருதப்படுகிறது, இதன்படி இபிஎஸ்-ன் கீழ் ஒரு ஊழியர் பெறக்கூடிய அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7,500 ஆகும்.  செப்டம்பர் 1, 2014க்கு முன் நீங்கள் இபிஎஸ்-ல் பங்களித்திருந்தால், ஓய்வூதிய சம்பளம் மாதம் ரூ.6500 ஆக இருக்கும்.  செப்டம்பர் 1, 2014க்குப் பிறகு நீங்கள்இபிஎஸ்-ல் சேர்ந்திருந்தால், அதிகபட்ச சம்பள வரம்பு ரூ.15,000 ஆக இருக்கும்.  ஓய்வூதியம் எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்றால், மாதாந்திர ஓய்வூதியம் = (ஓய்வூதியம் பெறக்கூடிய சம்பளம் x வருடங்கள் இபிஎஸ் பங்களிப்பு)/70 என்று கணக்கிடப்படுகிறது.  ஓய்வூதியம் ரூ.15,000 மற்றும் 30 ஆண்டுகள் பணிபுரிந்திருந்தால் மாதாந்திர ஓய்வூதியம் = 15,000X30/7= ரூ 6428 ஆகும்.

ஒரு பணியாளர் 6 மாதங்கள் அல்லது அதற்கு மேல் பணிபுரிந்து இருந்தால் அது 1 வருடமாக கருதப்படும் ஆனால் 6 மாதங்களுக்கு குறைவாக இருந்தால் அது 1 வருடமாக கணக்கிடப்படாது.  மேலும் பணியாளர் 14 ஆண்டுகள் 7 மாதங்கள் பணிபுரிந்திருந்தால், அது 15 ஆண்டுகளாகக் கருதப்படும், அதேசமயம் நீங்கள் 14 வருடங்கள் மற்றும் 5 மாதங்கள் வேலை செய்திருந்தால் 14 வருட சேவை மட்டுமே கணக்கிடப்படும்.  மேலும் இபிஎஸ்-ன் கீழ் குறைந்தபட்ச ஓய்வூதியத் தொகை மாதம் ரூ.1000 ரூபாய், அதிகபட்ச ஓய்வூதியம் ரூ.7500 ஆகும்.

மேலும் படிக்க | மலிவு விலை பெட்ரோல் விரைவில் சாத்தியம்; வெளியான முக்கிய தகவல்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News