EPFO விதிகளில் மாற்றம்: PF கணக்குதாரர்கள் இதை உடனடியாக செய்யவேண்டும்!

இபிஎஃப்ஓவின் அறிவுறுத்தலின்படி, இ-நாமினேஷன் செய்யாத உறுப்பினர் இறந்துபோகும் பட்சத்தில் அவரது டெபாசிட் தொகையை அவ்வளவு எளிதில் அவரது குடும்பத்தினர் பெற்றுவிட முடியாது.  

Written by - RK Spark | Last Updated : Sep 27, 2022, 06:19 AM IST
  • இபிஎஃப்ஓ அடிக்கடி பல்வேறு அப்டேட்டுகளை செய்து வருகிறது.
  • ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக இ-நாமினேஷன் செய்ய வேண்டும்.
  • இ-நாமினேஷன் செய்யவில்லையென்றால் டெபாசிட் தொகையை எளிதில் அவரது குடும்பத்தினர் பெற முடியாது.
EPFO விதிகளில் மாற்றம்: PF கணக்குதாரர்கள் இதை உடனடியாக செய்யவேண்டும்! title=

நாட்டில் உள்ள ஊழியர்கள் பலரும் அவர்களது மாத சம்பளத்தில் ஒரு குறிப்பிட்ட தொகையை வருங்கால வைப்பு நிதியாக அவர்களது பிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்து வருகின்றனர்.  அப்படி மாதந்தோறும் பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும் தொகையானது இறுதியில் ஊழியர்களின் ஓய்வுகாலத்தில் அவர்களது நிதித்தேவைகளை சமாளிக்க உதவிபுரிகிறது.  ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (இபிஎஃப்ஓ) அடிக்கடி பல்வேறு அப்டேட்டுகளை செய்து வருகிறது அந்த வகையில் தற்போது ஒரு முக்கியமான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.  அதாவது பிஎஃப் கணக்கு வைத்திருக்கும் ஊழியர்கள் அனைவரும் கட்டாயமாக இ-நாமினேஷன் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.  

மேலும் படிக்க | உசார் மக்களே! அக்டோபர் மாதத்தில் வங்கிகளுக்கு 21 நாட்கள் விடுமுறை!

இபிஎஃப்ஓவின் அறிவுறுத்தலின்படி, கணக்குதாரர்கள் இ-நாமினேஷன் செய்யவில்லையென்றால் அவர் இறந்துபோகும் பட்சத்தில் அவரது டெபாசிட் தொகையை அவ்வளவு எளிதில் அவரது குடும்பத்தினர் பெற்றுவிட முடியாது.  பிஎப் கணக்கில் ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களின் முதலாளிகளும் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்கின்றனர்.  அரசு ஊழியர்கள் மட்டுமின்றி தனியார் நிறுவன ஊழியர்களும் பிஎப் கணக்கு வைத்திருக்கின்றனர், சில சமயம் அவர்கள் வேறு நிறுவனத்தில் பணிமாற்றம் செய்யும் நேரத்தில் அவர்களது பிஎப் கணக்கும் மாறுகிறது.  அப்படி மாறுகையில் அவர்கள் கணக்கிலுள்ள பிஎஃப் தொகையை சரிபார்க்க விரும்புபவர்கள் யுஏஎன் எண் மூலம் லாக் இன் செய்து கணக்கிலுள்ள மொத்த தொகையை பார்க்கலாம்.

ஆனால் இப்போது பிஎஃப் கணக்கிலுள்ள இருப்பை நீங்கள் சரிபார்ப்பதில் ஒரு சிக்கல் உள்ளது, ஏனென்றால் பிஎஃப் இருப்பை சரிபார்க்கவும் இ-நாமினேஷன் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.  இ-நாமினேஷன் செய்தால் மட்டும் தான் உங்களால் பிஎஃப் பாஸ்புக்கை பார்க்க முடியும், இப்போது நீங்கள் பாஸ்புக்குக்கான பக்கத்தை திறந்ததும் அந்த திரையில் இ-நாமினேஷனுக்கான பாப்-அப் தோன்றும், அதில் நீங்கள் இ-நாமினேஷனைத் தாக்கல் செய்யவில்லை என்றால், இந்த பாப் அப் விண்டோ அந்த பக்கத்திலிருந்து போகாது.  எனவே நீங்கள் இப்போது இ-நாமினேஷன் செய்து அதன் பிறகு பாஸ்புக்கை சரிபார்க்கலாம்.

மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ உயர்வுக்கு முன் ஊழியர்களுக்கு ஷாக்! இந்த விதியை மாற்றியது அரசு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News