EPF முக்கிய அப்டேட்: ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் தொகையை எடுக்க வேண்டுமா? அதற்கு இவை எல்லாம் அவசியம்

EPF Withdrawal: ஓய்வுபெறும் முன்னரே அவசர தேவைகள் ஏற்பட்டால், அந்த தருணங்களிலும் இபிஎஃப் பணத்தை எடுப்பதாற்கான வசதியை இபிஎஃப்ஓ அளிக்கின்றது.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Nov 18, 2023, 06:49 AM IST
  • பிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் ஈக்விட்டியில் 50% வரை வட்டியுடன் பெறலாம்.
  • இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன.
  • இபிஎஃப் பணத்தை திரும்பப் பெறும் செயல்முறை குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது.
EPF முக்கிய அப்டேட்: ஓய்வுக்கு முன்னரே பிஎஃப் தொகையை எடுக்க வேண்டுமா? அதற்கு இவை எல்லாம் அவசியம் title=

EPF Withdrawal: பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பு (EPFO) ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தை (EPS) நிர்வகிக்கிறது. இது தனியார் துறையில் சம்பளம் பெறும் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. EPFO விதிகளின்படி, ஒவ்வொரு மாதமும், ஊழியர்களின் அடிப்படை சம்பளத்தில் 12 சதவீதம் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது. முதலாளியும் / நிர்வாகமும் EPF -க்கு அதே அளவு  தொகையை வழங்குகிறார்கள். முதலாளி / நிர்வாகத்தின் பங்களிப்பிலிருந்து, 8.33 சதவீதம் இபிஎஸ் கணக்கிற்கும், மீதமுள்ள 3.67 சதவீதம் இபிஎஃப் கணக்கில் டெபாசிட் செய்யப்படுகிறது.

பொதுவாக ஊழியர்கள் பணி ஓய்வுக்கு பிறகு இபிஎஃப் பணத்தை எடுப்பது வழக்கம். எனினும், ஓய்வுபெறும் முன்னரே அவசர தேவைகள் ஏற்பட்டால், அந்த தருணங்களிலும் இபிஎஃப் பணத்தை எடுப்பதாற்கான வசதியை இபிஎஃப்ஓ அளிக்கின்றது. இபிஎஃப் அட்னாவ்ஸ் அதாவது முன்பணம், அவசர அல்லது எதிர்பாராத செலவுகளின் போது நிதி உதவியை வழங்க பெரிய அளவில் உதவும். இபிஎஃப் (EPF) முன்பணத்திற்கு விண்ணப்பிக்க, உறுப்பினர்கள் தங்கள் முதலாளியிடம் படிவம் 31 ஐ சமர்ப்பிக்க வேண்டும்.

சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்பம் நிறுவனத்தால் சரிபார்க்கப்பட்டு இபிஎஃப்ஓ (EPFO) -க்கு ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப்படும். ஒப்புதல் கிடைத்தவுடன், முன்பணம் உறுப்பினரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும்.

இபிஎஃப் உறுப்பினர்கள் தங்கள் இபிஎஃப் கணக்கில் (EPF Account) இருந்து பல்வேறு நோக்கங்களுக்காக தொகையை எடுக்கலாம். மருத்துவ அவசரநிலை, கல்வி, திருமணம், நிலம் வாங்குதல், வீடு புதுப்பித்தல், வேலையின்மை போன்ற காரணங்களுக்காக பிஎஃப் கணக்கில் சேர்ந்துள்ள தொகையை எடுக்க முடியும். 

திருமணத்திற்காக எடுக்கப்படும் இபிஎஃப் அட்வான்ஸ்

இபிஎஃப் -இல் ஏழு வருடங்களுக்கு உறுப்பினர்களாக உள்ள நபர்கள் இபிஎஃப் திருமண முன்பண வசதியை (EPF Marriage Advance) பயன்படுத்திக்கொள்ள முடியும். தங்கள் திருமணத்திற்கு மட்டும்தான் இந்த அட்வான்ஸ் எடுக்க முடியுமா அல்லது பிறரது திருமணத்திற்காகவும் இதை எடுக்கலாமா என்ற சந்தேகம் பலருக்கு இருக்கிறது. இபிஎஃப் உறுப்பினரின் திருமணம், மகன்/மகளின் திருமணம், சகோதரன்/சகோதரியின் திருமணம் ஆகியவற்றுக்காக திருமணத்திற்கான இபிஎஃப் அட்வான்ஸை உறுப்பினர்கள் கோர முடியும். 

மேலும் படிக்க | தனிநபர் கடனா... கிரெடிட் கார்டா... அவசர தேவைக்கு எது சிறந்த தேர்வாக இருக்கும்!

எவ்வளவு தொகையை எடுக்க முடியும்?

பிஎஃப் உறுப்பினர்கள் இதில் தங்கள் ஈக்விட்டியில் 50% வரை வட்டியுடன் பெறலாம். மேலும் இதற்கு சில நிபந்தனைகள் உள்ளன. ஏழு வருடம் இபிஎஃப் உறுப்பினராக இருந்த பின்னரே திருமணத்திற்காக உதவித்தொகையை எடுக்க முடியும். கல்வி மற்றும் திருமணத்திற்காக மூன்று முறைக்கு மேல் அட்வான்ஸ் எடுக்க முடியாது. 

இபிஎஃப் பணத்தை திரும்பப் பெறும் செயல்முறை குறிப்பிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு உட்பட்டது. மேலும் திரும்பப் பெறக்கூடிய தொகையானது நோக்கத்தின் அடிப்படையில் மாறுபடும் என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இபிஎஃப் அட்வான்ஸ் (EPF Advance) என்பது ஊழியர்களின் குறிப்பிட்ட நிதித் தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக வழங்கப்படுகின்றது. மேலும், இபிஎஃப்ஓ அதன் விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அவ்வப்போது புதுப்பிக்கிறது. பிஎஃப் உறுப்பினர்கள் அதிகாரப்பூர்வ EPFO இணையதளத்தில் சமீபத்திய வழிகாட்டுதல்களைப் பார்க்க அறிவுறுத்தப்படுகிறார்கள். மெலும், துல்லியமான மற்றும் புதுப்பித்த தகவலுக்கு உறுப்பினர்கள் தங்கள் முதலாளி / நிறுவனம் அல்லது இபிஎஃப்ஓ அலுவலகத்தையும் அணுகலாம்.

EPF என்பது இந்தியாவில் உள்ள ஒரு சமூகப் பாதுகாப்புத் திட்டமாகும், இது ஊழியர்களுக்கு நிதிப் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை வழங்குகிறது. இது பணியாளர் வருங்கால வைப்பு நிதி அமைப்பால் (EPFO) நிர்வகிக்கப்படுகிறது. இது இந்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள ஒரு சட்டப்பூர்வ அமைப்பாகும்.

மேலும் படிக்க | Business Idea: லட்சங்களில் வருமானத்தை அள்ளித்தரும் சிப்ஸ் பிசினஸ்..!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News