ட்ரோன் பைலட்டுகளுக்கான வேலை வாய்ப்பு: இந்தியா மிகப்பெரிய மக்கள்தொகை கொண்ட நாடாகும். இங்கு வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை எப்போதும் அதிகமாகவே இருக்கும்.
கல்லூரியில் படித்து பட்டம் பெறாமல் வேலை தேடுபவர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது. உங்களுக்கு ஒரு நல்ல வேலை காத்துக்கொண்டு இருக்கிறது. கல்லூரியில் பட்டம் பெறாமல் வேலை தேடும் நபர்கள் ரூ. 30,000 வரையிலான சம்பளத்துடன் அரசு வேலையைப் பெறலாம்.
சிவில் விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, வரும் ஆண்டுகளில், நாட்டில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான ஆளில்லா விமான பைலட்களை நியமிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்று கூறினார். நாடு முழுவதும் ட்ரோன் சேவைக்கான உள்நாட்டு தயாரிப்புகளை மத்திய அமைச்சகம் ஊக்குவித்து வருகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், ட்ரோன் பைலட்களின் அதிகமான ஆட்சேர்ப்பு நடக்க அதிக வாய்ப்புகள் உள்ளன.
கல்லூரி பட்டம் தேவையில்லை
ஜோதிராதித்ய சிந்தியா கூறுகையில், '12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் ட்ரோன் பைலட் பயிற்சி பெறலாம். இதற்கு கல்லூரி பட்டம் தேவையில்லை. வரும் ஆண்டுகளில் சுமார் ஒரு லட்சம் ட்ரோன் பைலட்டுகளுக்கான தேவை இருக்கும். இதற்கு, இரண்டு - மூன்று மாதங்கள் மட்டுமே பயிற்சி அளிக்கப்படும். மாதம் ரூ. 30,000 சம்பளத்தில் ஆளில்லா விமானத்தை இயக்கும் விமானியின் பணியை ஒருவர் செய்ய முடியும்.’ என்றார்.
மேலும் படிக்க | சென்னை மெட்ரோ ரயிலில் பணிபுரிய வேலைவாய்ப்பு!
இந்தியா உலகளாவிய ட்ரோன் மையமாக மாறும்
டெல்லியில் ட்ரோன்கள் குறித்த நிதி ஆயோக்கின் எக்ஸ்பீரியன்ஸ் ஸ்டுடியோவைத் தொடங்கி வைத்த மத்திய அமைச்சர், “2030-க்குள் இந்தியாவை உலகளாவிய ட்ரோன் மையமாக மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம். பல்வேறு தொழில்துறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான துறைகளில் ட்ரோன்களின் பயன்பாட்டை நாங்கள் ஊக்குவித்து வருகிறோம். புதிய தொழில்நுட்பம் உருவாக வேண்டும், மேலும் அதிகமான மக்கள் புதிய தொழில்நுட்பத்தை அணுக வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார்.” என்றார்.
அரசின் திட்டத்தை அறிந்து கொள்ளுங்கள்
ட்ரோன் சேவைகளை அணுகுவதற்கு அரசு தீவிரமாக செயல்பட்டு வருவதாக விமான போக்குவரத்து அமைச்சர் சிந்தியா தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் கூறுகையில், 'டிரோன் செக்டரை மூன்று பிரிவுகளில் முன்னோக்கி கொண்டு செல்கிறோம். முதல் பிரிவு கொள்கையுடையது. எந்த ஒரு கொள்கையையும் எவ்வளவு வேகமாக செயல்படுத்துகிறோம் என்பதை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.
இரண்டாவது பிரிவு முன்முயற்சியை உருவாக்குவது. மூன்றாவது பிரிவு உள்நாட்டு தேவையை உருவாக்குவது. 12 மத்திய அமைச்சகங்கள் இந்த கோரிக்கையை உருவாக்க முயற்சித்துள்ளன.’ என்றார்.
மேலும் படிக்க | ஆல் இந்திய ரேடியோவில் பணிபுரிய அறிய வாய்ப்பு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR