COVID impact: பண்டிகை காலத்திலும் தொடர்ந்து விலை குறையும் Dry Fruits, விலை விவரம் இதோ!!

கொரோனா வைரஸ் தொற்றுநோய் காரணமாக தேவை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியடைந்ததுள்ளதால், அவற்றின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 23, 2020, 01:16 PM IST
  • ஜனவரி மாதத்தில் ஒரு கிலோ 300 ரூபாய் என விற்கப்பட்ட பேரிச்சை அக்டோபரில் கிலோ ரூ.280 ஆனது.
  • ஜனவரி மாதம் ஒரு கிலோ ரூ .800 க்கு விற்கப்பட்ட முந்திரி அக்டோபரில் ரூ .650 ஆனது.
  • வரவிருக்கும் நாட்களில் கொரோனா காரணமாக இந்த விலைகள் மேலும் குறையக்கூடும் என நம்பப்படுகிறது.
COVID impact: பண்டிகை காலத்திலும் தொடர்ந்து விலை குறையும் Dry Fruits, விலை விவரம் இதோ!! title=

புதுடெல்லி: நவராத்திரி, தீபாவளி என பண்டிகைகள் வருவதற்கு முன்னர், வழக்கமாக, முந்திரி, பாதாம் மற்றும் திராட்சை போன்ற உலர் பழங்களின் (Dry Fruits) விலைகள் வழக்கமாக அதிகரிப்பதை நாம் பார்த்திருக்கிறோம். ஆனால் இந்த முறை உலர் பழங்கள் பண்டிகை காலத்தில் மலிவாகிவிட்டன.

கொரோனா வைரஸ் (Corona Virus) தொற்றுநோய் காரணமாக தேவை மிகப்பெரிய அளவில் வீழ்ச்சியடைந்ததுள்ளதால், அவற்றின் விலை கடந்த சில மாதங்களாக தொடர்ந்து குறைந்து வருகிறது. உலர் பழங்களுக்கான தேவை பொதுவாக பண்டிகைகளில் அதிகரிக்கிறது. ஆனால் இந்த முறை நவராத்திரி, தசரா மற்றும் தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் கூட அதிக அளவிலான வாடிக்கையாளர்கள் கடைகளிலிருந்து விலகியே இருக்கிறார்கள்.

ஆண்டின் தொடக்கத்தில் இருந்து விலை சரிந்தது

சந்தை போக்குகள் குறித்து எங்கள் இணை சேனலான ஜீ பிசினஸை செய்த ஆய்வில், ​​இந்த ஆண்டு ஜனவரி மற்றும் அக்டோபர் மாதங்களுக்கு இடையில் உலர் பழங்களின் விலையில் நிலையான சரிவு காணப்பட்டது என்பதும் விலைகள் கணிசமாகக் குறைந்துவிட்டன என்பதும் தெரியவந்தது.

முந்திரி மற்றும் திராட்சையும் மலிவாகின்றன

ஜனவரி மாதம் ஒரு கிலோ ரூ .800 க்கு விற்கப்பட்ட முந்திரி அக்டோபரில் ரூ .650 ஆக குறைந்துள்ளது. இதேபோல், திராட்சையும் விலை ஒரு கிலோ ரூ .240 லிருந்து ரூ.220 ஆக குறைந்துள்ளது.

ALSO READ: தொடர்ந்து உயரும் வெங்காய விலைகள்: தீபாவளியில் புதிய உச்சத்தைத் தொடக்கூடும்

பேரிச்சையின் விலையும் குறைந்தது.

பேரிச்சை ஜனவரி மாதத்தில் ஒரு கிலோ 300 என விற்கப்பட்டது. அது இப்போது குறைந்து, அக்டோபரில் கிலோ ரூ.280-க்கு விற்கப்படுகின்றது. ஆனால், அத்திப் பழத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ ரூ .750 என்றிருந்த அத்திப்பழம் கிலோ ரூ .800 –ஆக உயர்ந்துள்ளது.

வால்நட் மற்றும் பாதாம் விலை சரிந்தது

வால்நட் ஜனவரி மாதத்தில் ரூ .850 க்கு விற்கப்பட்டது. இது அக்டோபரில் ஒரு கிலோ ரூ .600 ஆக குறைந்துள்ளது. பாதாம் ஜனவரி மாதத்தில் ரூ .650 க்கு விற்கப்பட்டது. இது அக்டோபரில் ரூ .590 ஆக குறைந்துள்ளது.

ஏலக்காய் விலைகள்

ஜனவரியில், சிறிய ஏலக்காயின் விலை கிலோவுக்கு ரூ .5000 ஆக இருந்தது. இது குறைந்து அக்டோபரில் ஒரு கிலோ ரூ .3000 ஆகியுள்ளது. வரவிருக்கும் நாட்களில் கொரோனா காரணமாக இந்த விலைகள் மேலும் குறையக்கூடும் என நம்பப்படுகிறது.

ALSO READ: விலை உயர்வு எதிரொலி: மானிய விலையில் பருப்பு வகைகளை மாநிலங்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவு

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News