தொற்றுநோய் காலத்தில் பலர் வேலைவாய்ப்பையும், வருமானத்தை இழந்து வாடியபோது, ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய் சம்பாதித்த ஒரே இந்தியர் யார் என்பது தெரிந்தால், ஆச்சரியம் ஏற்படும்…
வருமான சமத்துவமின்மை குறித்து சமீபத்தில் ஆக்ஸ்பாம் (Oxfam) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்றுநோய்களின் போது ஒரு நொடியில் ரிலையன்ஸ் நிறுவனத் தலைவர் முகேஷ் அம்பானி சம்பாதித்த தொகையை சாதாரண தொழிலாளி ஒருவர் சம்பாதிக்க குறைந்தபட்சம் மூன்று ஆண்டுகள் ஆகும் என்று சுட்டிக்காட்டியது.
‘Inequality Virus’ என்ற தலைப்பில் வெளியிடப்பட்டுள்ள ஆக்ஸ்பாம் (Oxfam) பல கேள்விகளை எழுப்புகிறது. 2020ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவி, ஏற்படுத்திய தாக்கங்களால் உலகமே நொந்து நூலான சமயத்தில் RIL முதலாளி அம்பானி, ஒரு நொடியில் சம்பாதித்த தொகையை ஒரு சாதாரண தொழிலாளி சம்பாதிக்க, அவருக்கு குறைந்தது மூன்று ஆண்டுகள் ஆகும். ஆக்ஸ்பாம் அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது அம்பானி ஒரு மணி நேரத்திற்கு 90 கோடி ரூபாய் சம்பாதித்தார்.
Also Read | Republic Day டெல்லி டிராக்டர் பேரணிக்கு கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதி
கொரோனா வைரஸ் தொற்றுநோய்களின் போது ஒரு மணி நேரத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட் (Reliance Industries Limited (RIL)) தலைவர் முகேஷ் அம்பானி சம்பாதித்த பணத்தை ஈட்ட, ஒரு தொழிலாளிக்கு 10,000 ஆண்டுகள் ஆகலாம் என்று சமீபத்திய ஆக்ஸ்பாம் அறிக்கை சொல்வதைக் கேட்டால் மலைப்பாக இருக்கிறது.
This pandemic showed us the importance of government action to protect our health and livelihoods. We can't return to where we were before. Instead, we must act on the urgency to create a more equal and sustainable world. Support Oxfam's work: https://t.co/mbDnmwKcyQ #DavosAgenda pic.twitter.com/KGzCdZanER
— Oxfam International (@Oxfam) January 25, 2021
ஒரு கணிப்பின்படி, இந்தியாவில் (India) சுமார் 24 சதவீதம் பேர் கோவிட்-19 (Covid-19) தொற்றுநோய் பரவல் காலத்தில் மாதத்திற்கு 3,000 ரூபாய் என்ற அளவில் தான் வருமானம் ஈட்ட முடிகிறது. 40 கோடி முறைசாரா தொழிலாளர்களின் வறுமையை குறைந்தது ஐந்து மாதங்களாவது போக்க அம்பானியின் செல்வம் மட்டும் போதுமானதாக இருக்கும் என்றும் ஆக்ஸ்பாம் (Oxfam) அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read | சசிகலா 27ஆம் தேதி விடுதலையாவது உறுதி! 4 வருடம் சிறைத்தண்டனை முடிந்தது
ஆக்ஸ்பாமின் சமீபத்திய அறிக்கை, கோவிட் -19 தொற்றுநோய் எவ்வாறு பணக்காரர்களுக்கும் ஏழ்மையான மக்களுக்கும் இடையிலான வருமான இடைவெளியை விரிவுபடுத்தியுள்ளது என்பதை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது. ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையிலான வருமான இடைவெளி இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கிலும் உள்ள எல்லா நாடுகளிலும் அதிகரித்துள்ளது.
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR