ரேஷன் கடையில் எல்பிஜி சிலிண்டர்: உங்களுக்கும் ரேஷன் கார்டு இருந்தால், அதன் மூலம் அரசின் ரேஷன் திட்டத்தைப் பயன்படுத்திக் கொண்டு வந்தால், இந்தச் செய்தி உங்களுக்குப் பயன்படும். ஆம், அரசு அறிமுகப்படுத்தி இருக்கும் புதிய திட்டத்தை பற்றி நீங்கள் கேள்விப்பட்டால், நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு லாட்டரி அடுத்துள்ளது என்று கட்டாயமாக கூறுவீர்கள். இத்திட்டத்தின் கீழ், இனி ரேஷன் விநியோகக் கடையில் எல்பிஜி கேஸ் சிலிண்டர் சலுகை விலையில் கிடைக்கும். மேலும் இந்த திட்டம் ஏழை ரேஷன் கார்டுதாரர்களுக்காக அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
5 கிலோ கேஸ் சிலிண்டர் கிடைக்கும்
இந்த திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு 5 கிலோ கேஸ் சிலிண்டர் வழங்கப்படும். கேஸ் சிலிண்டர் வழங்கும் திட்டம் தீபாவளிக்கு முன் துவங்க உள்ளது. அதன்படி இத்திட்டத்தை செயல்படுத்த, வழங்கல் துறை அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவனங்களிடையே ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களில் கமிஷன் தொகையை உயர்த்த வேண்டும் என ரேஷன் கடைக்காரர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பணவீக்கம் அதிகரித்து வரும் நிலையில், முந்தைய கட்டணத்தில் பெறப்படும் கமிஷன் போதுமானதாக இல்லை என்று அவர்கள் வாதிடுகின்றனர்.
மேலும் படிக்க | பான் கார்டு வைத்திருப்போர் கவனதிற்கு! இதை உடனடியாக செய்யுங்கள்!
பொது வசதி மையம் திறப்பதற்கு ஒப்புதல்
அந்தவகையில் அரசு கமிஷன் தொகையை அதிகப்படுத்தாமல், அரசு ரேஷன் கடை நடத்துவோரின் வருமானத்தை அதிகரிக்க இந்த முறையை அரசு தொடங்கியுள்ளது. இதன் கீழ், ரேஷன் கடைகளில், பொது வசதி மையங்களை, கடைசி நாளில் திறக்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டது. ஜன் சுவிதா கேந்திராவில் வருமானம் மற்றும் வசிப்பிடச் சான்றிதழ் போன்றவற்றைச் செய்யலாம். புதிய திட்டத்தின் கீழ், ரேஷன் கடைகளில் 5 கிலோ எல்பிஜி சிலிண்டர்கள் விற்பனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ரேஷன் கடைகளில் சிலிண்டர் விலை என்ன?
சிலிண்டர் விற்பனையில் எண்ணெய் நிறுவனங்கள் கடைக்காரர்களுக்கு வழங்கப்படும். உஜ்வாலா எரிவாயு இணைப்புதாரர்களுக்கு 5 கிலோ எடையுள்ள எல்பிஜி சிலிண்டர் ரூ.339 சலுகை விலையில் வழங்கப்படும். அதுவே இந்த சிலிண்டருக்கு மற்றவர்கள் ரூ.526 செலுத்த வேண்டி இருக்கும். மேலும் ரேஷன் கடை உரிமையாளர்கள் ஒரு நேரத்தில் அதிகபட்சமாக 20 நிரப்பப்பட்ட சிலிண்டர்களை கடையில் வைத்திருக்கலாம். இதுதவிர, கடையில் தீ தடுப்பு நடவடிக்கையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும் படிக்க | mAadhaar பயன்படுத்த பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் தேவையா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ