விதிகளை மீறிய Yes Bank மீது புகார் அளித்த Dish TV: தலையிடுமாறு SEBI இடம் கோரிக்கை

தற்போதுள்ள இயக்குநர்கள் குழுவை அகற்ற முன்மொழிவை அளித்து, யெஸ் பேங்க், நிறுவனத்தின் கட்டுப்பாட்டை தன்வயப்படுத்த முயற்சிப்பதாக டிஷ் டிவி குற்றம் சாட்டியுள்ளது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Dec 13, 2021, 02:47 PM IST
விதிகளை மீறிய Yes Bank மீது புகார் அளித்த Dish TV: தலையிடுமாறு  SEBI இடம் கோரிக்கை title=

புதுடெல்லி: டைரக்ட்-டு-ஹோம் சேவை வழங்குனரான (Direct-to-Home service provider) டிஷ் டிவி, யெஸ் பேங்கின் மீது புதிய குற்றச்சாட்டுகளை விடுத்துள்ளது. யெஸ் பேங்க், டிஷ் டிவி-யின் இயக்குநர்கள் குழுவை பதவியிலிருந்து அகற்ற முயற்சிப்பதாகவும், இது கையகப்படுத்தல் விதிமுறைகளுக்கு முற்றிலும் மாறானது என்றும் டிஷ் டிவி கூறியுள்ளது. 

தற்போதுள்ள இயக்குநர்கள் குழுவை அகற்ற முன்மொழிவை அளித்து, யெஸ் பேங்க், நிறுவனத்தின் கட்டுப்பாட்டை தன்வயப்படுத்த முயற்சிப்பதாக டிஷ் டிவி குற்றம் சாட்டியுள்ளது. 

"செப்டம்பர் 3 அறிவிப்புகள், செப்டம்பர் 9 அறிவிப்புகள் மற்றும் இ.ஜி.எம் நோட்டீஸ் ஆகியவற்றை அனுப்புவதில் யெஸ் வங்கியின் நடவடிக்கைகள் கையகப்படுத்தும் விதிமுறைகளை மீறுவதாக நிறுவனம் நம்புகிறது. யெஸ் பேங்க் முன்மொழிந்துள்ளபடி, நிறுவனத்தின் குழுவில் குறிப்பிட்ட நபர்கள் நியமிக்கப்பட்டு, தற்போதைய இயக்குநர்களை (அனில் குமார் துவாவைத் தவிர) நீக்குவதற்கான முன்மொழிவு நடைமுறைக்கு வந்தால், அது, யெஸ் பேங்க் நிறுவனத்தின் கட்டுப்பாட்டைப் பெற வழிவகுக்கும்.” என்று டிஷ் டிவி செபிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளது.

யெஸ் பேங்க் (Yes Bank) லிமிடெட் டிஷ் டிவியின் 25.63 சதவீத ஈக்விட்டியைக் கொண்டுள்ளது. மேலும் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரராகவும் அது உள்ளது.

நிறுவனத்தின் குழுவை மறுசீரமைப்பதற்கும், இ.ஜி.எம்-ஐ திரும்பப் பெறுவதற்கும் யெஸ் பேங்க் செய்யும் முயற்சியை தடை செய்ய டிஷ் டிவி செபி-யின் (SEBI) தலையீட்டையும் கோரியுள்ளது.

ALSO READ: டிஷ் டிவியின் முடக்கம் விவகாரம்: அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் இருந்து யெஸ் வங்கிக்கு பெரும் பின்னடைவு

" நிறுவனத்திற்கு அனுப்பப்பட்ட இ.ஜி.எம் அறிவிப்பை உடனடியாக திரும்பப் பெறவும், இ.ஜிஎம் அறிவிப்பு தொடர்பாக மேற்கொண்டு எந்த நடவடிக்கையும் எடுப்பதை நிறுத்திக் கொள்ளவும், கையகப்படுத்தும் விதிமுறைகள் மீறப்படுவதை நிறுத்தவும் தங்கள் அலுவலகம் யெஸ் வங்கிக்கு தேவையான வழிகாட்டுதல்களை வழங்குமாறு கேட்டுக்கொகிறோம்” என்று டிஷ் டிவி கூறியுள்ளது.

முன்னதாக, செப்டம்பர் 27, 2021 அன்று நடைபெறவிருந்த நிறுவனத்தின் ஏஜிஎம்மில் குழுவை மறுசீரமைப்பதற்காக டிஷ் டிவிக்கு யெஸ் வங்கி நோட்டீஸ் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இ.ஜிஎம் நோட்டீஸில், நிர்வாக இயக்குனர் ஜவஹர் கோயல் தவிர, டிஷ் டிவியின் குழுவில் இருந்து ரஸ்ல்மி அகர்வால், பகவான் தாஸ் நாரங், ஷங்கர் அகர்வால் மற்றும் அசோக் மத்தாய் குரியன் ஆகியோரை நீக்க வேண்டும் என யெஸ் பேங்க் கோரியுள்ளது.

சுபாஷ் சந்திரா (Subhash Chandra) தலைமையிலான எஸ்செல் குழுமத்தின் ரூ.1,000 கோடி உரிமை வெளியீட்டை எதிர்க்கும் யெஸ் பேங்க், நிறுவனத்தின் குழுவில் பரிந்துரைக்கப்பட, இரண்டு நான்-எக்சிகியூடிவ் இயக்குநர்கள் மற்றும் ஐந்து சுயாதீன இயக்குநர்கள் உட்பட, ஏழு பேரின் பெயர்களையும் அனுப்பியுள்ளது. 

ALSO READ | 7th Pay Commission: மீண்டும் அதிகரிக்கிறதா அகவிலைப்படி? ஜனவரியில் நல்ல செய்தி!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News