ஒவ்வொருவரும் அவர்களின் எதிர்கால தேவைக்காக பலவிதமான சேமிப்புகளை செய்து வருகின்றனர், பலரும் வங்கிகளில் அல்லது தபால் நிலையங்களில் உள்ள ஏதேனும் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர். இவ்வாறு செய்யப்படும் முதலீடுகள் ஒருவரின் ஓய்வு காலத்திற்கு பின்னர் அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ளவும், வாழ்க்கையை மேம்படுத்தவும் உதவுகிறது. இவ்வாறு செய்யப்படும் முதலீட்டில் அதிகபட்ச லாபம் பெறவேண்டும் என்று மக்கள் நினைக்கிறார்கள். அப்படி குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறவேண்டும் என நீங்கள் நினைத்தால் எஸ்ஐபி -ல் முதலீடு செய்யலாம், இதன்மூலம் நீங்கள் லாபம் அடையலாம்.
மேலும் படிக்க | 7th Pay Commission: டிஏ-வில் பம்பர் ஏற்றம், ரூ. 40,000 வரை சம்பளம் அதிகரிக்கும்
நீங்கள் 30 வயதாக இருந்தால், நீங்கள் மாதத்திற்கு ரூ.3500 எஸ்ஐபி-ல் முதலீடு செய்ய வேண்டும். 30 ஆண்டுகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.3500 டெபாசிட் செய்வதன் மூலம் ரூ.12.60 லட்சம் முதலீடு செய்கிறீர்கள். இப்போது அது சராசரியாக 12 சதவீத வருமானத்தை அளிக்கிறது, எனவே 30 வருடங்கள் முடிந்த பிறகு உங்களிடம் 1.23 கோடி நிதி தயாராக இருக்கும்.
இப்போது ரூ.1.23 கோடி நிதியில் 5 சதவீத வட்டியை எடுத்தால், அது ஆண்டுக்கு ரூ.6.15 லட்சம் ஆக இருக்கும் அதன்படி, ஒவ்வொரு மாதமும் முதலீட்டாளர்களுக்கு 50000 ரூபாய் கிடைக்கும். எஸ்பிஐ ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் கடந்த சில ஆண்டுகளில் 20.04 சதவீதம் வரை வருமானத்தை அளித்துள்ளது. நிப்பான் இந்தியா ஸ்மால் கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் 18.14 சதவீதமும், இன்வெஸ்கோ இந்தியா மிட்கேப் மியூச்சுவல் ஃபண்ட் திட்டம் 16.54 சதவீதமும் வழங்கியுள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம், டிஏ, இபிஎஃப், கிராஜுவிட்டி அனைத்திலும் பம்பர் ஏற்றம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR