Post Office MIS: நாம் பாடுபட்டு சம்பாதித்த பணத்தை சரியான இடத்தில் முதலீடு செய்தால், வருமானத்தைப் பற்றிய கவலையில்லாமல் ஓய்வு காலத்தில் நிம்மதியாக வாழலாம். குறிப்பாக அரசாங்க உத்திரவாதத்துடன் கூடிய நிரந்திர வைப்புத் தொகையில் மாதாந்திர வருமானத்தைப் பெறும் திட்டங்களில் அச்சமின்றி முதலீடு செய்யலாம். அந்த வகையில் போஸ்ட் ஆபிஸ் திட்டங்கள் மிகவும் பாதுகாப்பான திட்டங்களில் அடங்கும். நிதிக்கான பாதுகாப்புடன் உத்தரவாதமான வருமானம் கொடுக்கும் மாதாந்திர வருமானத்தைப் பொறுத்த வரையில், அஞ்சல் அலுவலகம் மாதாந்திர சேமிப்பு திட்டம் முதலீட்டாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக உள்ளது. இதில் மொத்தத் தொகை வைப்புத் தொகையில் மாதாந்திர வருமானம் மூலம் உறுதியான வருமானம் இருக்கும்.
POMIS முதலீட்டு திட்டத்தில், ஒரு கணக்கில் அதிகபட்சமாக ரூ.9 லட்சமும், கூட்டாக தொடங்கப்படும் கணக்கில் அதிகபட்சமாக ரூ.15 லட்சமும் முதலீடு செய்யலாம். உங்கள் முதலீட்டு தொகைக்கு ஏற்ப உங்களுக்கு ஒவ்வொரு மாதமும் வட்டி கிடைக்கும். தற்போது, தபால் அலுவலக மாதாந்திர சேமிப்பு திட்டத்தின் (Post Office MIS) வட்டி விகிதம் 7.4 சதவீதமாக உள்ளது. தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் தனிப்பட்ட கணக்கில் ரூ.9 லட்சத்தை முதலீடு செய்தால், 7.4 சதவீத வட்டி விகிதத்தில், ஒவ்வொரு மாதமும் ரூ.5,500 மாத வருமானம் பெறலாம். அதேசமயம், கூட்டாக கணக்கினை தொடக்கினால் ரூ.15 லட்சத்தை முதலீடு (Investment Tips) செய்து, ஒவ்வொரு மாதமும் ரூ.9,250 வருமானம் ஈட்டலாம்.
தபால் அலுவலகம் MIS முதலீட்டில் கிடைக்கும் வருமானம்
முதலீடு: 9 லட்சம்
ஆண்டு வட்டி விகிதம்: 7.4%
முதலீட்டு காலம்: 5 ஆண்டுகள்
வட்டி மூலம் கிடைக்கும் வருவாய்: ரூ 3,33,000
மாத வருமானம்: ரூ.5,550
தபால் அலுவலகத்தின் இந்தத் திட்டத்தில், முதலீட்டாளர்கள் தனிப்பட்ட கணக்கில் ரூ.9 லட்சத்தையும், கூட்டுக் கணக்கில் ரூ.15 லட்சத்தையும் மொத்தமாக டெபாசிட் செய்யலாம். நீங்கள் விரும்பினால், உங்களின் அசல் தொகையை 5 வருட முதிர்வு காலத்திற்குப் பிறகு திருப்ப பெறலாம். அதே நேரத்தில், இது மேலும் 5 - 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து அதன் மூலம் மாத வருமானம் பெறலாம்.
மேலும் படிக்க | நிம்மதியாக ஓய்வூதியம் பெற வேண்டுமா? அப்போ ‘இந்த’ திட்டங்களில் முதலீடு செய்யுங்கள்
ஒவ்வொரு 5 வருடங்களுக்கும் பிறகும் உங்கள் தேவை மற்றும் விருப்பத்திற்கு ஏற்ப, அசல் தொகையை திரும்பப் பெறலாம் அல்லது திட்டத்தை நீட்டிக்கலாம். கணக்கில் பெறப்பட்ட வட்டி ஒவ்வொரு மாதமும் தபால் அலுவலக சேமிப்புக் கணக்கில் செலுத்தப்படும். தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்டத்தில் முதலீடு செய்யும் போது TDS கழிக்கப்படுவதில்லை. இருப்பினும், உங்கள் கைக்கு வரும் வட்டிக்கு வரி விதிக்கப்படும்.
தபால் அலுவலக MIS கணக்கை முதிர்ச்சிக்கு முன் மூடுவதற்கான விதிகள்
தபால் அலுவலக மாதாந்திர சேமிப்புத் திட்டத்தில் முதிர்வுக்கு முன் பணம் எடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஒரு வருடத்திற்குப் பிறகு இந்த வசதியைப் பெறுவீர்கள்., ஆனால் அதற்கு முன் பணத்தை எடுப்பது சாத்தியமில்லை. எவ்வாறாயினும், முதிர்ச்சிக்கு முன்பான்க கணக்கு மூடப்பட்டால், நீங்கள் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். 1 முதல் 3 ஆண்டுகளுக்குள் நீங்கள் பணத்தை எடுத்தால், டெபாசிட் தொகையில் 2% கழிக்கப்பட்டு திருப்பி அளிக்கப்படும்.
மேலும் படிக்க | PF கணக்கு இருந்தால் நீங்கள் ஓய்வு பெற்ற பின்பு எவ்வளவு ஓய்வூதியம் கிடைக்கும்?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ