உலகம் இப்போது மின்சார வாகன பயன்பாட்டை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. சீனா ஏற்கனவே இதற்கான திட்டமிடலை வகுத்து இப்போது மின்சார வாகன புழக்கத்தை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் அதிகளவில் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இந்தியா உள்ளிட்ட நாடுகளும் மின்சார வாகன உற்பத்தியை ஊக்குவிக்க திட்டம் வகுத்து அதற்கான கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகளில் இறங்கியுள்ளன. இந்தியாவில் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மின்சார வாகன உற்பத்திக்கு தனி கொள்கையே வகுத்து அதற்கான அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்க தொடங்கிவிட்டன. ஆனால் சீனாவுடன் ஒப்பிடும்போது இந்தியா 20 ஆண்டுகள் இதில் பின் தங்கியிருக்கிறது என்று சொல்லலாம்.
சீனாவின் திட்டம்
ஏனென்றால் மின்சார வாகனங்களுக்கான யுக்தியை சீனா 2000 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்திலேயே வகுத்து அதற்கான இலக்கை நோக்கி பயணிக்க தொடங்கிவிட்டது. அந்நாடு லித்தியம் தான் பெட்டோல் டீசலுக்கு மாற்றாக இருக்க முடியும் என்பதை கணித்து லித்தியம் சுரங்கம் அமைப்பதிலும், அதனை முறையாக பிரித்தெடுக்க தேவையான கட்டமைப்புகளை அமைப்பதையும் 20 ஆண்டுகளாக செய்து வருகிறது. இதன் விளைவு இப்போது உலகின் 60 விழுக்காட்டுக்கும் மேலான லித்தியம் பிரித்தெடுப்பதற்கான கட்டமைப்பு அந்நாட்டிடம் மட்டுமே இருக்கிறது.
மேலும் படிக்க | சலுகை விலையில் பெட்ரோல்! IOC - Kotak மஹிந்திராவின் எரிபொருள் கிரெடிட் கார்டு!
சீனாவின் 2025 இலக்கு
இந்தியா சீனாவிடம் ஒப்பிடும்போது வெகு தொலைவில் பின்தங்கியிருக்கிறது. சீனா இப்போது அந்நாட்டைக் கடந்து ஆப்பிரிக்கா நாடுகளில் லித்தியம் சுரங்கத்தை அமைப்பதற்கான கட்டமைப்புகளில் இறங்கியிருக்கிறது. அந்நாட்டின் குறி 2025. ஆம், 2025 ஆம் ஆண்டுக்குள் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் லித்தியம் சுரங்கப் பணிகளின் கட்டமைப்புகளை நிறுவ திட்டமிட்டிருக்கும் சீனா, அப்போது லித்தியம் பிரித்தெடுப்பதற்கான அனைத்து கட்டமைப்புகளில் உலகின் மூன்றில் ஒரு பங்கை கொண்டிருக்கும்.
அதாவது, லித்தியம் மார்கெட்டில் அப்போது சீனா கோலோச்சிக் கொண்டிருக்கும். உலக நாடுகள் அந்நாட்டிடம் கையேந்தும் நிலை வரும். 2022-ல் 194,000 டன்களில் இருந்த ஆப்பிரிக்காவில் உள்ள திட்டங்கள் உட்பட சீனக் கட்டுப்பாட்டில் உள்ள சுரங்கங்கள் உற்பத்தி 2025 ஆம் ஆண்டளவில் 705,000 டன்களாக உயர்த்த உள்ளது. இது மின்சார-வாகன பேட்டரிகளுக்கு முக்கியமான கனிமத்தில் சீனாவின் பங்கை உலக விநியோகத்தில் 32% ஆக உயர்த்தும். கடந்த ஆண்டு சீனாவின் பங்கு 24% ஆக இருந்தது.
லித்தியம் போட்டி
இப்போது பெட்ரோல் டீசலுக்கு மாற்றாக பார்க்கப்படும் லித்தியம் அயன் பேட்டரிகளை உருவாக்க தேவையான லித்தியம் மற்றும் பிற மூலப் பொருட்களை தயாரிப்பதற்கான போட்டி உலக நாடுகளிடையே அதிகரித்துள்ளது. இதில் அமெரிக்கா மற்றும் சீனா இடையேயான போட்டி அதிகரித்து வருகிறது. ஆனால் சீனா மார்கெட்டில் ஆதிகம் செலுத்தி வருகிறது. சீனாவைக் கடந்து பல இடங்களில் கமுக்கமாக அந்நாடு சுரங்கம் அமைத்து கொண்டிருப்பதையும் உலக நாடுகள் உற்று நோக்கிக் கொண்டிருக்கின்றன.
மேலும் படிக்க | இந்தியாவை விட லித்தியம் கொட்டி கிடக்கும் குட்டி நாடு...! சீனா - அமெரிக்கா இல்லை
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ