இந்த வங்கியின் Cheque Books இயங்காது; கவனமா இருங்க

வாடிக்கையாளர்கள் தங்கள் புதிய காசோலை புத்தகத்தை வங்கிக்கிளைக்கு சென்று பெறலாம்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 9, 2021, 10:23 AM IST
இந்த வங்கியின் Cheque Books இயங்காது; கவனமா இருங்க title=

புதுடெல்லி: New Cheque Book: பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB), ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பேங்க் ஆப் இந்தியா (UBI) கணக்கு வைத்திருப்பவர்களுக்கு வம்கி முக்கிய எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த இரண்டு வங்கிகளின் கணக்கு வைத்திருப்பவர்கள் பழைய காசோலை புத்தகங்களை வைத்திருந்தால், அடுத்த மாதம் முதல் அவை பயம் அளிக்காது என்று PNB வங்கி கூறியுள்ளது. எனவே இத்தகைய இன்னல்களை தவிர்க்க புதிய காசோலை புத்தகத்திற்கு உடனடியாக விண்ணப்பிக்க பிஎன்பி அறிவுறுத்திள்ளது.

வாடிக்கையாளர்களுக்கு PNB எச்சரிக்கை
இது தொடர்பாக PNB -Punjab Nationl Bank தனது ட்விட்டர் பக்கத்தில் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில் eOBC மற்றும் eUNI இன் பழைய காசோலை புத்தகம் 1-10-2021 முதல் நிறுத்தப்படும். தயவுசெய்து வாடிக்கையாளர்கள் உங்கள் பழைய காசோலை புத்தகத்தை PNB காசோலை புத்தகத்துடன் (Cheque Book) புதுப்பிக்கப்பட்ட PNB IFSC மற்றும் MICR உடன் மாற்றவும்’ என அறிவுறுத்தியுள்ளது.

ALSO READ | ALERT தொடர்ந்து 5 நாட்களுக்கு வங்கிகள் செயல்படாது -முழு பட்டியல்

 

மத்திய அரசின் அறிவிப்பின் படி கடந்த ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி முதல் சிறிய நிதித்துறை வங்கிகள் பல, பெரிய வங்கிகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஓரியண்டல் பேங்க் ஆஃப் காமர்ஸ் (OBC) மற்றும் யுனைடெட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகிய வங்கிகளில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் பஞ்சாப் நேஷனல் வங்கி (PNB) உடன் இணைக்கப்பட்டது. இதனால் IFSC கோடுகள் உள்ளிட்ட சில முக்கிய வங்கி செயல்பாடுகலும் மாற்றப்பட்டது.

புதிய காசோலை புத்தகத்தை பெற எங்கே விண்ணப்பிப்பது
1. பஞ்சாப் நேஷனல் வங்கி ஏடிஎம் -க்குச் சென்று செக் புக் கோரிக்கையை வைக்கலாம்.
2. இணைய வங்கியைப் பயன்படுத்தி காசோலை புத்தகத்திற்கு விண்ணப்பிக்கலாம்
3. நீங்கள் பிஎன்பி ஒன் செயலி மூலம் செக் புத்தகத்திற்கு விண்ணப்பிக்கலாம்
4. நீங்கள் அழைப்பு மையத்தை அழைப்பதன் மூலம் காசோலை புத்தகத்தை விண்ணப்பிக்கலாம்

இந்நிலையில் அனைத்து வாடிக்கையாளர்களும் புதுப்பிக்கப்பட்ட காசோலை புத்தகங்களை அக்டோபர் 1 க்குள் கட்டாயமாக பெற்றுக்கொள்ள வேண்டும். இது தொடர்பாக ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவற்றை 1800-180-2222 என்ற எண் மூலம் தொடர்பு கொள்ளலாம். இதற்கிடையில், பண்டிகை காலங்களில் PNB வங்கி சில்லறை பொருட்கள் மீதான அனைத்து சேவை கட்டணங்கள் மற்றும் செயலாக்க கட்டணங்களையும் தள்ளுபடி செய்துள்ளது. மேலும் வீட்டுக் கடன்களுக்கு 6.80% மற்றும் கார் கடன்களுக்கு 7.15% வட்டி விகிதத்தையும் வழங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

ALSO READ | செப். 1 முதல் பல முக்கிய விதிகளில் மாற்றம்; உங்களுக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும்..!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News