வீட்டுக்கடன் வாங்கணுமா? மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதோ

Home Loan Cheapest Interest Rates:மிகக்குறைந்த வட்டி விகிதத்தில் கடன் வழங்கும் வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் விவரங்களை இந்த பதிவில் காணலாம்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Aug 20, 2022, 06:22 PM IST
  • பல வகையான வீட்டுக் கடன்கள் உள்ளன.
  • அவற்றின் விதிமுறைகளும் வேறுபட்டவை.
  • வீட்டுக் கடனுக்கான மலிவான வட்டி விகிதங்களை அளிக்கும் வங்கிகளின் பட்டியல் இதோ.
வீட்டுக்கடன் வாங்கணுமா? மிகக்குறைந்த வட்டியில் கடன் வழங்கும் வங்கிகள், நிதி நிறுவனங்கள் இதோ title=

வீட்டுக் கடனுக்கான மலிவான வட்டி விகிதங்கள்: பல வகையான வீட்டுக் கடன்கள் உள்ளன, அவற்றின் விதிமுறைகளும் வேறுபட்டவை. நாட்டில் உள்ள பல்வேறு வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் தங்கள் சொந்த கட்டணத்தில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன. நாட்டிலேயே எந்தெந்த வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களுக்கு குறைந்த விலையில் வீட்டுக் கடன்களை வழங்குகின்றன என்பதை இந்த பதிவில் தெரிந்துகொள்ளலாம். 

நாட்டில் குறைந்த விலையில் வீட்டுக் கடன்களை வழங்கும் வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களின் பட்டியல் இதோ: 

எச்எஸ்பிசி
எச்எஸ்பிசி வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 7.35 சதவீதத்தில் தொடங்குகின்றன. மேலும் அதன் செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 1 சதவீதம் வரை இருக்கக்கூடும்.

சிட்டி பேங்க்
சிட்டி பேங்க் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 7.40 சதவீதத்தில் தொடங்குகின்றன. விண்ணப்பக் கட்டணம் ரூ. 5000 + ஜிஎஸ்டி வரை இருக்கும். முன்பதிவு கட்டணம் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில் 0.40 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது + ஜிஎஸ்டி (கட்டணம் திரும்பப் பெறப்படாது).

மேலும் படிக்க | உடனடி கடன் செயலிகள்: இந்த விஷயங்களில் கவனம் தேவை, எச்சரிக்கும் SBI 

எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ்
எல்ஐசி ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 7.50 சதவீதத்தில் தொடங்கி 9.00 சதவீதம் வரை செல்லக்கூடும். அதன் செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் (அதிகபட்சம் ரூ. 50,000) 0.35 சதவீதம் வரை இருக்கலாம்.

ஸ்டாண்டர்ட் சார்டர்ட் வங்கி
ஸ்டாண்டர்ட் சார்ட்டர்டு வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 7.55 சதவீதத்தில் தொடங்குகின்றன. மேலும் அதன் செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 0.5 சதவீதம் முதல் 1 சதவீதம் வரை இருக்கும்.

ஆக்சிஸ் வங்கி
ஆக்சிஸ் வங்கி வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 7.60 சதவீதத்தில் தொடங்கி 12.50 சதவீதம் வரை செல்லலாம். அதன் செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 1 சதவீதம் வரை இருக்கலாம் (குறைந்தபட்சம் ரூ. 10,000).

இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ்
இந்தியாபுல்ஸ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ஆண்டுக்கு 8.70 சதவீதத்தில் தொடங்குகின்றன. அதன் செயலாக்க கட்டணம் 0.5 சதவீதத்திலிருந்து தொடங்குகிறது.

எல்&டி ஹவுசிங் ஃபைனான்ஸ்
L&T ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் விகிதங்கள் 7.70 சதவீதம் முதல் 8.70 சதவீதம் வரை இருக்கலாம். அதன் செயலாக்க கட்டணம் கடன் தொகையில் 2 சதவீதம் வரை செல்லக்கூடும்.

பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ்
பஜாஜ் ஹவுசிங் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் விகிதங்கள் 7.70 சதவீதத்தில் இருந்து தொடங்கலாம். அதன் செயலாக்க கட்டணம் 0.3 சதவீதமாகும்.

ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ்
ரெப்கோ ஹோம் ஃபைனான்ஸ் வீட்டுக் கடன் விகிதங்கள் 7.70 சதவீதமாகும். அதன் செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 1 சதவீதம் வரை இருக்கலாம்.

டாடா கேபிடல்
டாடா கேபிட்டலின் வீட்டுக் கடன் விகிதங்கள் 7.75 சதவீதம் வரை இருக்கலாம். அதன் செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 0.5 சதவீதம் வரை இருக்கலாம்.

பந்தன் வங்கி
பந்தன் வங்கி வீட்டுக் கடன் விகிதங்கள் 7.80 சதவீதம் முதல் 13.50 சதவீதம் வரை இருக்கலாம். அதன் செயலாக்கக் கட்டணம் கடன் தொகையில் 0.25% முதல் 1% வரை இருக்கக்கூடும்.

குறிப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் ஆகஸ்ட் 16, 2022 அன்று கடைசியாக புதுப்பிக்கப்பட்டவை. வீட்டுக் கடன் வட்டி விகிதங்கள் வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிதி நிறுவனங்களால் அவ்வப்போது மாற்றப்படுகின்றன. வாடிக்கையாளரின் CIBIL மதிப்பெண், வயது, கடனைத் திருப்பிச் செலுத்தும் திறன் ஆகியவற்றைப் பொறுத்தும் கடன் வட்டி விகிதங்களில் வித்தியாசம் இருக்கலாம்.

மேலும் படிக்க | EPFO ஈ நாமினேஷன் மூலம் கிடைக்கும் பல வித பயன்கள்: முழு விவரம் இதோ 

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News