வாங்கின தேதியில் இருந்து வாரண்டி கிடையாதாம்...பதறாதீங்க... முதல்ல இதை படிங்க..!!

மத்திய நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோகித் குமார் சிங், சாம்சங், பானாசோனிக், ப்ளூ ஸ்டார், வேர்புல், வோல்டாஸ், பிலிப்ஸ், ஹேவல்ஸ்,  சோனி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Nov 10, 2023, 11:17 AM IST
  • நுகர்வோர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரை.
  • வாங்கிய தேதியில் இருந்து வாரண்ட்டி கணக்கிடக் கூடாது.
  • வீட்டுக்கு வந்ததும் வாங்கிய பில்லை பைலில் போட்டு பத்திரமாக வைத்து விடுவோம்.
வாங்கின தேதியில் இருந்து வாரண்டி கிடையாதாம்...பதறாதீங்க... முதல்ல இதை படிங்க..!! title=

தீபாவளி வந்துடுச்சு... விதவிதமா டிரஸ் வாங்குவது ஒரு பக்கம் இருந்தாலும், இந்தத் தடவையாவது வாஷிங் மெஷின் வாங்கணும்... டிவி, பிரிட்ஜ் வாங்கணும்னு நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இல்லத்தரசிகள் பெரிய பட்டியலே வைத்திருப்பார்கள்.  ஒவ்வொரு முறையும் தீபாவளிக்கு தான் இப்படி பொருள் வாங்கும் இலக்கு விற்கப்படும். போனஸ் பணம் கையில் புரள்வதால், கனவு மெய்ப்படும் நேரம் இது. இப்படி பொருள் வாங்கப் போகும்போது அக்கம்பக்கத்திலும் உறவினர்களிடமும் யோசனை கேட்டு.... இந்த கம்பெனி தான் நல்லா இருக்காம்... அகிலா வீட்ல வாங்கி அஞ்சு வருஷம் ஆச்சு. ரிப்பேர் ஆகவே இல்லையாம். அப்ப இதுதாங்க வாங்கணும்... இன்று நச்சரித்து கடைக்கு படையெடுப்பார்கள்.

கடைக்குள் போய் பார்த்ததும் தலை சுற்றும். காரணம் நாம் ஒன்று நினைக்க கடைக்காரர் ஒரு ரூட் காட்டுவார். இது புதுசா வந்திருக்கேன்னு நினைக்காதீங்க... அருமையான கம்பெனி. மத்ததெல்லாம் ரெண்டு வருஷம் தான் வாரண்டி. இவங்க அஞ்சு வருஷம் தராங்க. நம்பிக்கையோடு தைரியமா வாங்கிட்டு போங்க என்று குட்டையை குழப்புவார். அவருடைய தீபாவளி சேல்ஸ் இலக்கு அப்படி. அவர் என்ன செய்வார். மொத்தத்தில் குழம்பிப்போய் அங்கிருந்து ஆளாளுக்கு போன் போட்டு சரி , வாரண்ட் கை கொடுக்கும் என்று நம்பி வாங்கி வந்து விடுவோம். அதான் அஞ்சு வருஷம் இருக்கே  என்ற நினைப்பு, புது கம்பெனி பொருளாக இருந்தாலும் அசாத்திய நம்பிக்கையை தந்துவிடும்.

வீட்டுக்கு வந்ததும் வாங்கிய பில்லை பைலில் போட்டு பத்திரமாக வைத்து விடுவோம். அதிலிருந்து தானே வாரண்டி கணக்கு எடுப்பாங்க என்று நீங்கள் நினைத்தால் அது தவறு.  காரணம் வீட்டு உபயோகப் பொருட்களுக்கான கொள்கைகளில் மாற்று வரப்போகிறது. இந்தப் பரிந்துரையை செய்துள்ளது. பொருட்கள் வாங்கிய தேதியில் இருந்து வாரண்டியை கணக்கிடக் கூடாது. அந்தப் பொருளை வீட்டில் டெலிவரி செய்த பிறகு, கம்பெனியிலிருந்து ஒரு இன்ஜினியர் வருவார். இப்படித்தான் பண்ணனும் கூடாது... இன்று 'சட்ட திட்டம்' எல்லாம் போட்டு விளக்குவார். இதற்கெல்லாம் வாரண்டி உண்டு இதற்கெல்லாம் கிடையாது என்று பாடம் எடுப்பார்.

இதை இன்ஸ்டாலேஷன் செய்வது என்பார்கள். அப்படி இன்ஸ்டாலேஷன் செய்த தேதியில் இருந்து தான் வாரண்டியை கணக்கிட வேண்டும் பரிந்துரை செய்திருக்கிறது மத்திய அரசு. இது குறித்து மத்திய நுகர்வோர் விவகார துறை செயலாளர் ரோகித் குமார் சிங், சாம்சங், பானாசோனிக், ப்ளூ ஸ்டார், வேர்புல், வோல்டாஸ், பிலிப்ஸ், ஹேவல்ஸ்,  சோனி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். 

மேலும் படிக்க | கோடீஸ்வரனாகும் எளிய வழி... ‘இந்த’ 5 விதிகளை கடைபிடிக்கவும்...!

அதில், வாங்கிய தேதியில் இருந்து வாரண்ட்டி கணக்கிடக் கூடாது. அதை வீட்டில் இன்ஸ்டாலேஷன் செய்த தேதியில் இருந்துதான் கணக்கிட வேண்டும். இதுதான் முறை. பாதுகாப்பு சட்டம் 2019  விதிகளின் படி இது நியாயமானதும் கூட. ஏனென்றால் பொருளை வாங்கும் நுகர்வோர் அந்த தேதியில் இருந்து தான் அதனை பயன்படுத்த ஆரம்பிக்கிறார். பயன்படுத்த தேதியில் இருந்து வாரன்டி கணக்கிடுவது தானே நியாயமான நடைமுறை? எனவே இனி இன்ஸ்டாலேஷன் செய்த தேதியிலிருந்து வாரன் டிவி கணக்கிடுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்.  நுகர்வோர் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுரையின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக நுகர்வோர் விவகார துறை தனது அறிக்கையில் விளக்கம் அளித்துள்ளது. அப்பாடா, இதுவும் ஒரு தீபாவளி பரிசுதான் என்கிறீர்களா... என்ஜாய்.

மேலும் படிக்க | 'பிக் பாஸ்' ஆர்பிஐ அதிரடி... வங்கிகளுக்கு கொடுக்கப்பட்ட '5 டாஸ்க்': புதிய விதிகளால் குஷியில் கஸ்டமர்ஸ்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News