RD வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு... !

நடுத்தர மற்றும் எளிய வகுப்பு மக்களுக்கு எதிர்கால பாதுகாப்பு என்பது  என்பது அவர்களது சேமிப்பு ஆகும். இதை நம்பி அவர்கள் பல்வேறு அரசு சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 29, 2023, 07:27 PM IST
RD வட்டி விகிதங்களை உயர்த்தியது மத்திய அரசு... ! title=

புதுடெல்லி: இன்றைக்கு பலரும் பாதுகாப்பான முறையில் முதலீடு செய்ய விரும்புகின்றனர். இப்படி நினைப்பவர்களுக்கு அஞ்சலகம் மற்றும் வங்கியின் சிறுசேமிப்பு திட்டங்கள் பெரிதும் உதவுகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது. இன்றைக்கு சிறு சேமிப்பு திட்டங்கள் நல்ல வட்டி விகிதத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அத்துடன் முதலீட்டின் மீதான பாதுகாப்பும் கிடைக்கிறது. நடுத்தர மற்றும் எளிய வகுப்பு மக்களுக்கு எதிர்கால பாதுகாப்பு என்பது  என்பது அவர்களது சேமிப்பு ஆகும். இதை நம்பி அவர்கள் பல்வேறு அரசு சிறு சேமிப்புத் திட்டங்களில் முதலீடு செய்கின்றனர்.

இந்நிலையில், 2023-24 நிதியாண்டின் மூன்றாம் காலாண்டுக்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்களை அக்டோபர் 1 முதல் மாற்றாமல் பராமரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான சுற்றறிக்கையை நிதி அமைச்சகம் வெள்ளிக்கிழமை வெளியிட்டது. இந்த முடிவு இந்தியா முழுவதும் பல்வேறு சிறு சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்துள்ள மில்லியன் கணக்கான குடிமக்களுக்கு பொருந்தும். மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம், மாதாந்திர வருமானக் கணக்குத் திட்டம், தேசிய சேமிப்புச் சான்றிதழ், பொது வருங்கால வைப்பு நிதித் திட்டம், கிசான் விகாஸ் பத்ரா, சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் போன்றவை சில பிரபலமான திட்டங்களாகும். எனினும், 5 ஆண்டு தொடர் வைப்பு கணக்குகளுக்கான வட்டி விகிதம் 6.5 என்ற அளவில் இருந்து  6.7 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | அக்டோபர் 1 முதல் புதிய விதி அமல்.... அனைத்திற்கும் ஒரே ஆவணமாகிறது பிறப்பு சான்றிதழ்!

அக்டோபர் காலாண்டிற்கான சிறு சேமிப்பு திட்டங்களுக்கான புதிய வட்டி விகிதங்கள் கீழே விவரிக்கப்பட்டுள்ளன:

சிறு சேமிப்பு திட்டம் ஜூலை 1 முதல் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான வட்டி விகிதங்கள் அக்டோபர் 1 முதல் டிசம்பர் 31 வரையிலான வட்டி விகிதங்கள்
சேமிப்பு வைப்பு  4.0 4.0 
1 ஆண்டு கால வைப்பு  6.9 6.9
2 ஆண்டு கால வைப்பு  7.0 7.0
3 ஆண்டு கால வைப்பு  7.0 7.0
5 ஆண்டு கால வைப்பு   7.5  7.5
மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம்  8.2  8.2
மாதாந்திர வருமான கணக்கு திட்டம்  7.4  7.4
தேசிய சேமிப்புச் சான்றிதழ்  7.7  7.7
பொது வருங்கால வைப்பு நிதி திட்டம்   7.1  7.1
கிசான் விகாஸ் பத்ரா 7.5 7.5
சுகன்யா சம்ரித்தி கணக்கு திட்டம் 8.0 8.0
5 ஆண்டு தொடர் வைப்பு  6.5  6.7

அக்டோபர் காலாண்டில் சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் வைக்கப்பட்டுள்ளன.

மேலும் படிக்க | சிறுசேமிப்பு திட்டங்கள் ஜாக்பாட் செய்தி: வட்டி விகிதங்களில் மாற்றமா? அறிவிப்பு விரைவில்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News