வேலைக்கு செல்லும் எந்தவொரு நபருக்கும் ஓய்வூதிய திட்டமிடல் மிகவும் முக்கியமானது. சிறிது காலத்திற்குப் பிறகு, ஒருவர் வேலையை விட்டு வெளியேறினால், அவர் சிறந்த வாழ்க்கை வாழ வருமான ஆதாரம் அவசியமாக இருக்கும். அத்தகைய சூழ்நிலையில், அவர் சில முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து வைத்திருந்தால் எந்த பிரச்சனையும் இருக்காது. அவர் நெருக்கடி இல்லாமல் குறிப்பிட்ட நாட்களில் அடுத்த பணியை தேடிச் செல்ல முடியும்.
அதற்கு ஏற்ற திட்டங்கள் தான் பிபிஎப் மற்றும் பிஎப் திட்டங்கள். பெரும்பாலான மக்கள் PF அல்லது EPF இல் முதலீடு செய்கிறார்கள் மற்றும் அதையே செய்ய மற்றவர்களை அறிவுறுத்துகிறார்கள். இந்த இரண்டு திட்டங்களிலும் சிறந்த வருமானம் உத்தரவாதம் உள்ளது. இந்த இரண்டு திட்டங்களிலும் ஒரே நேரத்தில் பணத்தை முதலீடு செய்ய முடியுமா என்ற கேள்வி பல நேரங்களில் உங்கள் மனதில் எழலாம். பலருக்கும் இருக்கும் பொதுவான சந்தேகமும் கூட.
மேலும் படிக்க | ஒருவருக்கு எத்தனை வங்கி கணக்குகள் இருக்கலாம்? ஆர்.பி.ஐ கூறுவது என்ன?
நீங்கள் இரண்டு திட்டங்களிலும் ஒன்றாக முதலீடு செய்யலாம்
பணியாளர்கள் PPF மற்றும் EPF திட்டங்களில் முதலீடு செய்யலாம். நிறுவனமும் பணியாளருடன் சேர்ந்து EPF இல் முதலீடு செய்கிறது. அதே நேரத்தில், உங்கள் திறனுக்கு ஏற்ப பிபிஎஃப்-ல் முதலீடு செய்யலாம். இந்த திட்டம் நீங்கள் சுயாதீனமாக எடுக்கும் முடிவு தான்.
EPF திட்டம் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
ஊழியரின் சம்பளத்தில் ஒரு பகுதி EPF திட்டத்தில் டெபாசிட் செய்யப்படுகிறது. நிறுவனத்தின் கணக்கில் சமமான தொகையும் டெபாசிட் செய்யப்படுகிறது. சம்பள கட்டமைப்பின் படி அதன் தொகை தீர்மானிக்கப்படுகிறது. இந்த திட்டத்தில், ஒருவர் வேலை செய்யும் போது கூட சிறிய தொகையை எடுக்கலாம். ஓய்வுக்குப் பிறகு முழுத் தொகையையும் திரும்பப் பெறலாம்.
இப்போது PPF பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
PPF திட்டமும் ஓய்வூதிய திட்டமாகும். இது ஒரு வரி சேமிப்பு திட்டம். இது தவிர, இந்தத் திட்டம் ஓய்வுக்குப் பிறகு நிதிப் பாதுகாப்பை வழங்குகிறது. வயது வரம்பை தாண்டிய பிறகு உங்களுக்கு சேமிப்பு முழு தொகையும் கிடைக்கும். இதில் கிடைக்கும் வட்டி வருவாய்க்கு வரி விலக்கும் இருக்கிறது. பிபிஎப் திட்டத்தில் பல்வேறு முதலீடு ஆப்சன்கள் இருப்பதால், உங்களுக்கு ஏற்ற திட்டங்களை தேர்வு செய்து முதலீடு செய்யவும்.
மேலும் படிக்க | ஹோட்டல் ரூம் தேடி அழைய தேவையில்லை! ரயில்வே ஸ்டேஷனில் 100 ரூபாய்க்கு தங்கலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ