குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் பெற... கூகுளின் ‘சில’ அசத்தல் அம்சங்கள்!

Google's Cheap Flight Ticket Booking Features: கூகுள் ஃப்ளைட்ஸ் மூலம் மலிவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். இதற்கு நீங்கள் குறிப்பிட்ட 3 வழிகளை பின்பற்ற வேண்டும்.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Sep 26, 2023, 02:31 PM IST
  • சிறந்த விலையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய Google Flights அம்சம் உதவும்.
  • Google Flights மூலம் மலிவான டிக்கெட்டைக் கண்டறிய 3 வழிகள்.
  • கூகுள் ஃப்ளைட்ஸ் கட்டண வரைபடம்
குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் பெற...  கூகுளின் ‘சில’ அசத்தல் அம்சங்கள்! title=

Google's Cheap Flight Ticket Booking Features: குறைந்த கட்டணத்தில் விமான டிக்கெட் வாங்க வேண்டாம் என நினைப்பவர்கள் யாராவது இருக்க முடியுமா என்ன...விடுமுறைக்காக ஊர் அல்லது நாட்டிற்கு வெளியே செல்ல திட்டமிட்டுள்ளீர்களா? அத்தகைய சூழ்நிலையில், எந்த போக்குவரத்தை  தேர்ந்த்டுக்கிறீங்கள்?  இன்றைய காலகட்டத்தில் விமானத்தில் பயணிப்பவர்கள் எண்ணிக்கை மிகவும் அதிகரித்துள்ளது. நீங்கள் விமானத்தில் எங்காவது செல்ல நினைத்தால், அதிக கட்டணம் கொண்ட டிக்கெட்டுகளை வாங்குவதற்கு பதிலாக, அதன் டிக்கெட்டுகளை மலிவான கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம். ஆம், நீங்கள் விமான டிக்கெட்டை முன்பதிவு செய்ய நினைத்தால், அதை மலிவான கட்டணத்தில் முன்பதிவு செய்யலாம். இதற்காக நீங்கள் கூகுள் வசதியை பின்பற்ற வேண்டும். குறைந்த விலையில் டிக்கெட் முன்பதிவு செய்யும் வசதியை கூகுள் வழங்குகிறது, குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை எப்படி முன்பதிவு செய்யலாம் என்பதை அறிந்து கொள்ளலாம். 

கூகுளின் மலிவான விமான டிக்கெட் முன்பதிவு சேவை (Google's cheap flight ticket booking service)

சமீபத்தில் கூகுள் நிறுவனம் விமானங்களை முன்பதிவு செய்யும் வசதியை அறிமுகப்படுத்தி, இதன் மூலம் குறைந்த கட்டண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யலாம். சிறந்த விலையில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், நல்ல விமானங்களைத் தேடவும் Google Flights அம்சம் உதவும். நீங்களும் மலிவாக விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விரும்பினால், இதற்கு மூன்று முறைகளை நீங்கள் பின்பற்றலாம்.

Google Flights மூலம் மலிவான டிக்கெட்டைக் கண்டறிய 3 வழிகள்

1. கூகுள் விமானங்கள் கட்டண கண்காணிப்பு (Google Flights Price Tracking): Google Flights அம்சத்தில் குறைந்த விலையில் விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய, விமானங்களின் விலை கண்காணிப்பு அம்சம் வழங்கப்படுகிறது. அதை நீங்கள் ஆக்டிவேட் செய்ய வேண்டும். விலை கண்காணிப்பு ஆதரவு எந்த தேதிக்கு ஆன விமான டிக்கெட் விலைகளைக் கண்காணிக்க உதவுகிறது. அதை ஆக்டிவேட் மூலம் தேதியின்படி விலைகளைக் காணலாம். இருப்பினும், விமான விலைகளைக் கண்காணிக்க, நீங்கள் உங்கள் Google கணக்கில் உள்நுழைந்திருக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும்.

மேலும் படிக்க | SBI, இந்தியன் வங்கிக்கு கோடிகளில் அபராதம்... ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!

2. கூகுள் ஃப்ளைட்ஸ் கட்டண வரைபடம் (Google Flights Price Graph) - கூகுள் ஃப்ளைட்ஸ் உதவியுடன் மலிவாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய விலை வரைபடத்தின் உதவியைப் பெறலாம். உங்கள் பயணத்தின் தேதி நிர்ணயிக்கப்படவில்லை மற்றும் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் செல்ல திட்டமிட்டால், விலை வரைபடத்தில் மாதம் அல்லது வாரத்திற்கு ஏற்ப கட்டணத்தை மதிப்பிடலாம். இந்த அம்சங்களின் மூலம் நீங்கள் மலிவான விமான டிக்கெட்டுகளையும் பெறலாம்.

3. கூகுள் பிளைட் பில்டர்ஸ் (Google Flights Filters) - மலிவான டிக்கெட் முன்பதிவுக்கு கூகுள் பிளைட் பில்டர் ஆப்ஷனை பயன்படுத்த மறக்காதீர்கள். இதன் மூலம், சிறந்த டீலைக் கண்டுபிடிப்பது அல்லது குறைந்த விலையில் நல்ல டீலைக் கூறுவது உங்களுக்கு எளிதாக இருக்கும். இதில், விமான நிறுவனங்கள், விமான நிலைய்ட நிறுத்தம், நாள், நாள் நேரம் போன்ற தகவல்களை உள்ளீடு செய்ட்வதன் மூலம் டிக்கெட்டுகளை எளிதாகத் தேடலாம்.

மேலும் படிக்க | ஆதார் இணைப்பு முதல் சேமிப்பு திட்டம் வரை... செப். 30ம் தேதிக்குள் ‘இந்த’ வேலைகளை முடிச்சுடுங்க... இல்லைன்னா சிக்கல் தான்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

 

Trending News