இந்தியன் இரயில்வே அளிக்கும் யுடிஎஸ் ஆப் சேவை: நீங்கள் அடிக்கடி இரயில் பயணம் மேற்கொள்ளும் நபரா? அப்படியென்றால், இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். தற்போது மக்கள் பேருந்தில் பயணம் செய்வதில் கால் பங்கு செலவே இரயிலில் பயணம் செய்கின்றனர், இதனால் நேரமும் மிச்சமடைகிறது. எனவேதான் எப்பொழுது பார்த்தாலும் அனைத்து இரயில்களிலும் டிக்கெட் கிடைக்காமல் மக்கள் அவதிபடுவதை பார்க்கிறோம். அதன்படி இனி IRCTC ஆப் மூலியமாக நாம் வீட்டிலிருந்தே எக்ஸ்பிரஸ் இரயில்களுக்கான முன்பதிவு டிக்கெட்டுகளை புக் செய்ய முடியும்.
அதுமட்டுமின்றி பாசஞ்சர் டிக்கெட்டுகள் மற்றும் முபதிவில்லா டிக்கெட்டுகள், பிளாட்பாரம் டிக்கெட்டுகள் இவைகளை வாங்குவதற்கு எப்பொழுது பார்த்தாலும் இரயில் நிலையங்களில் வரிசை கட்டுக்கடங்காமல்தான் நிற்கும். அந்தவகையில் இதுபோன்ற அவதிகளை பயணிகள் மேற்கொள்லாமல் இருக்க இந்திய இரயில்வே UTS என்ற ஆன்ராய்டு செயலியை அறிமுகப்படுத்தியது.
மேலும் படிக்க | ரயில் சிக்னல் அறைகளுக்கு இரட்டை பூட்டு போட முடிவு - ஏன் தெரியுமா?
இந்தநிலையில் இனி நீங்கள் ஸ்டேஷனில் வரிசையில் நிற்காமல் ஆன்லைனில் ஜெனரல் இரயில் டிக்கெட்டுகளையும் பதிவு செய்யலாம். முன்பதிவு செய்யப்படாத இரயில் டிக்கெட்டுகளை ஆன்லைனில் பதிவு செய்யலாம் என்பது பெரும்பாலான பயணிகளுக்குத் தெரியாது. UTS ஆன் மொபைல் ஆப் மூலம் பயணிகள் முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை இப்போது பதிவு செய்துக் கொள்ளலாம்.
ஜெனரல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் செயல்முறை என்ன என்பதை அறிந்து கொள்ளுங்கள்:
யுடிஎஸ் பயன்பாட்டில் பதிவு செய்வதற்கான படிப்படியான செயல்முறை
* Google Play அல்லது Apple iOS இல் UTS மொபைல் பயன்பாட்டை பதிவிறக்கவும்.
* உங்கள் ஃபோன் எண், பெயர், பாலினம் மற்றும் பிறந்த தேதியுடன் பயன்பாட்டிற்கு பதிவு செய்யவும்.
* பாஸ்வேர்ட் ஜெனரேட்டர் கிடைக்கும். உங்கள் UTS பயன்பாட்டிற்கான தனிப்பட்ட பாஸ்வேர்ட்டை உருவாக்கவும்.
* UTS மொபைல் பயன்பாட்டின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கவும்.
* பதிவு பொத்தானை கிளிக் செய்யவும்.
* டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய உங்கள் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்ட்டை உள்ளிடவும்.
இந்த ஆப் -ல் இரண்டு முறைகளில் இரயில் டிக்கெட்டுகளை வாங்க முடியும்.
* நாம் புக் செய்யும் டிக்கெட்டுகளுக்கு பிரிண்ட் தேவை இல்லை.
* டிக்கெட்டுகளுக்கு பிரிண்ட் தேவைப்படும் முறை
UTS ஆப் மூலம் ஜெனரல் இரயில் டிக்கெட்டை முன்பதிவு செய்வது எப்படி
* காகிதமற்ற மற்றும் காகித டிக்கெட்டுகளுக்கு இடையே தேர்வு செய்யவும்.
* ஸ்டேஷன்களில் இருந்து புறப்படுதல் மற்றும் செல்லுதல் என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* 'அடுத்து' என்பதைத் தேர்ந்தெடுத்து, 'கட்டணத்தைப் பெறு' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
* ‘புக் டிக்கெட்’ என்பதை அழுத்தி, R-Wallet/UPI/Net Banking/Cards உள்ளிட்ட பல்வேறு கட்டண முறைகளைப் பயன்படுத்தி உங்கள் கட்டணத்தைச் செலுத்துங்கள்.
* டிக்கெட்டுகளை யுடிஎஸ் பயன்பாட்டில் ‘ஷோ டிக்கெட்’ விருப்பத்தை கிளிக் செய்வதன் மூலம் பார்க்கலாம்.
UTS APP -ன் பயன்கள்
UTS ஆப் மூலமாக எந்த ஒரு இரயில் நிலையத்திற்கும் பிளாட்பாரம் டிக்கெட், முன்பதிவில்லா டிக்கெட், பாசஞ்சர் டிக்கெட், சீசன் டிக்கெட் போன்றவற்றை எளிதாக புக் செய்யலாம்.
மேலும் படிக்க | ரயில்வே விதிகள்... ‘இந்த’ தவறுகள் செய்தால் கம்பி எண்ண வேண்டி வரும்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ