2022-23 நிதியாண்டுக்கான வருமான வரிக் கணக்கை (ITR) தாக்கல் செய்வதற்கான ITR-2 ஆஃப்லைன் படிவத்தை வருமான வரித் துறை வெளியிட்டுள்ளது (AY 2023-24). கடந்த மாதம், CBDT ITR-1 மற்றும் ITR-4 இன் ஆஃப்லைன் படிவங்களை வெளியிட்டது. வரித் துறையானது ஆன்லைன் ITR படிவங்களை இன்னும் செயல்படுத்தவில்லை என்பதை நினைவில் கொள்க. தற்போது வருமான வரித் துறை ITR 1, ITR 2 மற்றும் ITR-4 படிவங்களுக்கான எக்செல் பயன்பாட்டை மட்டுமே வெளியிட்டுள்ளது.
ஆகையால், ஒரு நபர் உடனடியாக ஐடிஆர் தாக்கல் செய்ய விரும்பினால், அவர், வருமான வரி இ-ஃபைலிங் இணையதளத்தில் இருந்து இந்த டூலை பதிவிறக்கம் செய்ய வேண்டும். வருமானம் மற்றும் விலக்குகள் தொடர்பான தகவல்களுடன் பயன்பாட்டுப் படிவம் நிரப்பப்பட்டவுடன், அது வருமான வரி மின்-தாக்கல் தளத்தில் பதிவேற்றப்பட வேண்டும்.
வருமான வரி கணக்கு படிவத்தில் இந்த ஆண்டு குறிப்பிடத்தக்க மாற்றம் எதுவும் பெரிதாக இல்லை. ஐடிஆர் படிவத்தில் உள்ள ஒரே குறிப்பிடத்தக்க மாற்றம் வர்சுவல் நாணயங்கள் (virtual currencies) மற்றும் டிஜிட்டல் சொத்துகளைப் (digital assets) பயன்படுத்தி செய்யப்படும் பரிவர்த்தனைகள் தொடர்பான தகவலுக்கான கோரிக்கை மட்டுமே.
வரி செல்யுத்துவோர், ITR படிவத்தை (ஆஃப்லைன் அல்லது ஆன்லைனில்) சமர்ப்பிக்கும் போது, அதுவும் சரிபார்க்கப்பட வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஐடிஆர் வரி செலுத்துபவரால் சரிபார்க்கப்படாவிட்டால், அது வருமான வரித் துறையால் செயல்படுத்தப்படாது.
ITR 2: இந்த படிவத்தை யார் தாக்கல் செய்ய வேண்டும்?
வணிகம் அல்லது தொழிலின் இலாபங்கள் மற்றும் ஆதாயங்களிலிருந்து வருமானம் இல்லாத தனிநபர்கள் மற்றும் HUF -களுக்கானது.
பின் வரும் நிபந்தனைகணை பூர்த்தி செய்யும் வரி செலுத்தும் தனி நபர்கள் ITR-2 ஐ பயன்படுத்த வேண்டும்:
a) நீங்கள் நாட்டின் வசிக்கும் அல்லது வெளி நாடுகளில் வசிக்கும் நபராக இருந்தால்.
b) இந்து பிரிக்கப்படாத குடும்பம் (HUF)
c) ஒரு நிறுவனத்தின் இயக்குனர்
d) பட்டியலிடப்படாத ஈக்விட்டி பங்குகளில் முதலீடுகளை வைத்திருக்கும் நபர்
e) சம்பளம் வாங்கும் நபர், ஒன்றுக்கு மேற்பட்ட வீட்டு சொத்து, மூலதன ஆதாயங்கள், வட்டி வருமானம், ஈவுத்தொகை போன்ற பிற ஆதாரங்களில் இருந்து வருமானம் பெறும் நபர்.
f) வெளிநாட்டு நிறுவனங்களின் பங்குகளின் ஈவுத்தொகை போன்ற இந்தியாவிற்கு வெளியே உள்ள சொத்துக்களில் இருந்து வருமானம் பெறுதல்.
g) இந்தியாவிற்கு வெளியே சொத்துக்களை வைத்திருத்தல்
h) 'வீட்டுச் சொத்திலிருந்து வருமானம்' என்ற தலைப்பின் கீழ் ஏதேனும் இழப்புகள் முன்னோக்கி எடுத்துச் செல்லப்பட வேண்டியிருந்தால்,
i) குதிரைப் பந்தயம், லாட்டரி மற்றும் பிற சூதாட்ட வழிகளில் வெற்றி பெற்றதால் வந்த வருமானம் இருந்தால்
j) 2021-22 நிதியாண்டின் போது செய்யப்பட்ட குறிப்பிட்ட பணப் பரிமாற்றங்களுக்கு TDS உங்களுக்குப் பொருந்தியிருந்தால்
k) பணியாளர் பங்கு விருப்பத் திட்டங்களில் வருமான வரி ஒத்திவைக்கப்பட்டிருந்தால்
l) விவசாய வருமானம் 5,000 ரூபாய்க்கு மேல் இருந்தால்
m) இரட்டை வரிவிதிப்பு தவிர்ப்பு ஒப்பந்தத்தின் கீழ் நீங்கள் ஏதேனும் ஒப்பந்த நிவாரணம் கோரினால்.
மேலும் படிக்க | வருமான வரி செலுத்துபவரா நீங்கள்? கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
தவறான ITR படிவத்தைப் பயன்படுத்தினால் என்ன நடக்கும்?
உங்கள் ITR ஐ தாக்கல் செய்வதற்கு முன் சரியான ITR படிவத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்களா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். தவறான வரி அறிக்கை படிவத்தில் ஐடிஆர் தாக்கல் செய்யப்பட்டால் வருமான வரித்துறை உங்களுக்கு வரி அறிவிப்பை (tax notice) வழங்கும். வரித் துறையின் பொருத்தமான வரி அறிக்கை படிவத்தைப் பயன்படுத்தி நீங்கள் ஐடிஆர் சமர்ப்பிக்க வேண்டும்.
ஆஃப்லைன் பயன்பாட்டைப் பயன்படுத்தி தாக்கல் செய்யும் போது எனது ஐடிஆரில் நான் தவறு செய்துவிட்டேனா என்பதை எப்படி அறிவது?
வருமான வரி இணையதளத்தின்படி, “ஆன்லைன் படிவங்களுக்குப் பொருந்தக்கூடிய அனைத்து சரிபார்ப்பு விதிகளும் நீங்கள் அவற்றை போர்ட்டலில் சமர்ப்பித்தாலும் அல்லது ஆஃப்லைன் பயன்பாட்டிலிருந்து நேரடியாகச் சமர்ப்பித்தாலும் பொருந்தும். ஏதேனும் தவறு ஏற்பட்டால், கணினியிலிருந்து பிழை செய்தியைப் பெறுவீர்கள். மேலும் பிழைகள் உள்ள புலங்கள் படிவத்தில் முன்னிலைப்படுத்தப்படும். நீங்கள் உங்கள் JSON கோப்பை எக்ஸ்போர்ட் செய்து அப்லோட் செய்தால், தரவிறக்கம் செய்யக்கூடிய பிழைக் கோப்பு உருவாக்கப்படும். தவறுகளைச் சரிசெய்வதற்கு இதை நீங்கள் பயன்படுத்தலாம்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | New and Old Tax Regime பம்பர் செய்தி: இரு முறைகளிலும் சூப்பர் பலன்கள், விவரம் இதோ
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ