இந்திய ரயில்வேயின் புதிய கால அட்டவணை: இந்திய இரயில்வே பயணம் செய்வதற்கான எளிய, விரைவான மற்றும் செலவு குறைந்த வழியை வழங்குகிறது. மேலும் ஆயிரக்கணக்கான பயணிகள் நீண்ட தூரத்தை கடக்க ரயிலில் பயணம் செய்கிறார்கள். அந்த வகையில் நீங்களும் அடிக்கடி இரயில் பயணம் மேற்கொள்ளும் நபராக இருந்தால், இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் தற்போது ரயில்வே துறை ஒரு பெரிய முக்கிய மாற்றத்தை செய்யதுள்ளது. அந்தவகையில் இனி வரும் நாட்களில் டெல்லி, பஞ்சாபிலிருந்து கேரளாவுக்குச் செல்ல உங்களுக்கு ஏதேனும் திட்டம் இருந்தால், இந்த செய்தியை உடனடியாக படித்து உங்களின் பயணத்தை அதற்கு ஏற்ப பிளான் செய்துக்கொள்ளுங்கள், ஏனெனில் தற்போது மீண்டும் பல ரயில்களின் நேரத்தை இந்தியன் ரயில்வே மாற்றியுள்ளது. இந்த மாற்றம் டெல்லியில் இருந்து கேரளா செல்லும் பல ரயில்களின் ஏற்பட்டுள்ளது. எனவே பயணிகள் தங்களின் பயணத்தை மேற்கொள்ளும் முன் இந்த செய்தியை கட்டாயம் ஒரு முறை படிக்கவும்.
நாளை முதல் புதிய அட்டவணை அமலுக்கு வருகிறது
இந்த நிலையில் இது தொடர்பாக தகவல் அளித்த இந்திய ரயில்வே, ரயில்களின் அட்டவணையில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம் நாளை முதல் அமலுக்கு வரும் என்று கூறியுள்ளது, அத்துடன் வருகிற அக்டோபர் 31 ஆம் தேதி 2023 வரை பொருந்தும் என்றும் தெரிவித்துள்ளது. வாருங்கள் அவை எந்த ரயில்கள் என்பதை இங்கே தெரிந்துக்கொள்ளவோம்.
மேலும் படிக்க | 500 நோட்டு குறித்து வெளியான அதிர்ச்சி தகவல்! ரிசர்வ் வங்கி புதிய உத்தரவு
* ரயில் எண் 12617 (MANGLADWEEP EXP) - எர்ணாகுளம் ஜங்ஷன் - ஹஸ்ரத் நிஜாமுதீன் டைனிக் மங்களா லட்சத்தீவு எக்ஸ்பிரஸின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இப்போது இந்த ரயில் அதன் நேரத்திற்கு 3.15 மணி நேரத்திற்கு முன் புறப்படும். அதேபோல் எர்ணாகுளத்தில் இருந்து 10.10 மணிக்கு புறப்படும்.
* ரயில் எண் 12618 (MNGLA LKSDP EXP) - ஹஸ்ரத் நிஜாமுதீன் - எர்ணாகுளம் ஜங்ஷன் மங்கள லட்சத்தீவு டெய்லி எக்ஸ்பிரஸ் எர்ணாகுளம் ஜங்ஷனை 10.25 மணிக்கு சென்றடையும்.
* ரயில் எண் 12431 (RAJDHANI EXP) திருவனந்தபுரம் சென்ட்ரல் - ஹஸ்ரத் நிஜாமுதீன் ட்ரை-வாராந்திர ராஜ்தானி எக்ஸ்பிரஸ் அதன் திட்டமிடப்பட்ட நேரத்திற்கு 4 மணி நேரம் 35 நிமிடங்கள் பின்னால் இயக்கப்படும். இந்த ரயில் செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் புறப்படும். இந்த ரயில் திருவனந்தபுரம் சென்ட்ரலில் இருந்து 14.40 மணிக்கு புறப்படும்.
* ரயில் எண் 12432 (TVC RAJDHANI) - ஹஸ்ரத் நிஜாமுதீன்-திருவனந்தபுரம் சென்ட்ரல் ராஜ்தானி எக்ஸ்பிரஸ் - 2 மணி 15 நிமிடங்கள் தாமதமாக இயக்கப்படும். இந்த ரயில் ஞாயிறு, செவ்வாய் மற்றும் புதன்கிழமைகளில் திருவனந்தபுரம் சென்ட்ரலை 01.50 மணிக்கு சென்றடையும்.
* ரயில் எண் 22149 (ERS PUNE EXP) - எர்ணாகுளம் ஜங்ஷன் - புனே ஜங்ஷன் இருவார விரைவு ரயிலின் நேரமும் மாற்றப்பட்டுள்ளது. இப்போது இந்த ரயில் 3 மணி நேரம் முன்னதாக புறப்படும். ஞாயிறு மற்றும் வெள்ளிக்கிழமைகளில் எர்ணாகுளம் ஜங்ஷனிலிருந்து புறப்படும்.
* ரயில் எண் 22655 (ERS NZM SF EXP) - எர்ணாகுளம் ஜங்ஷன் - ஹஸ்ரத் நிஜாமுதீன் சூப்பர் பாஸ்ட் ரயில் 3 மணி நேரத்திற்கு முன்னதாக புறப்படும்.
* ரயில் எண் 12217 (SAMPARK KRANTHI) - கொச்சுவேலி-சண்டிகர் இரு வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 20 நிமிடங்கள் முன்னதாக புறப்படும். திங்கள் மற்றும் சனிக்கிழமைகளில் கொச்சுவேலியிலிருந்து புறப்படும்.
* ரயில் எண் 12483 (KCVL ASR EXP) - கொச்சுவேலி-அமிர்தசரஸ் வாராந்திர சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ் 4 மணி நேரம் 20 நிமிடங்களுக்கு முன்னதாக புறப்படும்.
* ரயில் எண் 20923 (GIMB HUMSAFAR) - திருநெல்வேலி ஜங்ஷன் - காந்திதாம் ஜங்ஷன் வாராந்திர ஹம்சஃபர் சூப்பர்பாஸ்ட் 2 மணி 45 நிமிடங்களுக்கு முன்பு புறப்படும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ