RBI on 1000 Rupee Notes: வெள்ளியன்று, இந்திய ரிசர்வ் வங்கி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டது. செப்டம்பர் 30 ஆம் தேதி வரை, 87 சதவீத ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வந்துவிட்டதாகவும், ஆனால் ரூ.10,000 கோடி மதிப்புள்ள நோட்டுகள் இன்னும் சந்தையில் இருப்பதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்தது. ஆனால், ரிசர்வ் வங்கியின் அறிவிப்புக்குப் பிறகு, மற்றொரு சுவாரசியமான விஷயமும் நடந்தது. 1000 ரூபாய் நோட்டு மீண்டும் சந்தையில் வருமா, அதை மீண்டும் பார்க்க முடியுமா என்ற கேள்விகள் சமூக ஊடகங்களில் எழத் தொடங்கின. ரிசர்வ் வங்கி 2000 ரூபாய் பற்றி அறிவித்தவுடன் 1000 ரூபாய் பற்றிய கேள்விகள் எழ காரணம் என்ன? 1000 ரூபாய் பற்றி ஆர்பிஐ கூறியது என்ன? இதை பற்றி இந்த பதிவில் காணலாம்.
ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) ரூ.1000 நோட்டை மீண்டும் அறிமுகம் செய்யவோ, புதிய ரூ.1000 நோட்டை வெளியிடவோ திட்டமிடவில்லை. இது பற்றி X இல் பதிவிட்டுள்ள ஏஎன்ஐ, ரிசர்வ் வங்கிக்கு 1000 ரூபாய் நோட்டை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என தெளிவுபடுத்தியுள்ளது.
மக்களுக்கு ரூபாய் நோட்டுகள் தொடர்பான பிரச்சனை வரக்கூடாது என்பதற்காக போதுமான 500 ரூபாய் நோட்டுகளை அச்சடித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ரூபாய் நோட்டு தட்டுப்பாடு இல்லாமல் இருக்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதே சமயம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையால் மக்களின் பணத்தேவை குறைந்துள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில் 1000 ரூபாய் நோட்டுகளை கொண்டு வர வேண்டிய அவசியம் இல்லை என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. இது போன்ற போலியான மற்றும் பொய்யான விஷயங்களை பரப்புவதை நிறுத்த வேண்டும் என மக்களுக்கு ரிசர்வ் வங்கி (RBI) அறிவுறுத்தியுள்ளது.
2016-ல் பணமதிப்பிழப்பு: 2016 ஆம் ஆண்டு பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மெற்கொண்ட மத்திய அரசு பழைய ரூ.1000 மற்றும் ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவித்து, அதற்கு பதிலாக புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுகளை வெளியிட்டது. ஆனால், 2000 ரூபாய் நோட்டுகளையும் மத்திய அரசு சமீபத்தில் திரும்பப் பெற்றுள்ளது. 2000 ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றுவதற்கான காலம் தற்போது முடிந்துவிட்டது.
எனினும், உங்களிடம் இன்னும் 2000 ரூபாய் நோட்டுகள் (CUrrency) இருந்தால், அவற்றை மாற்றிக்கொள்ளலாம். இருப்பினும் இந்த நோட்டுகளை முன்னர் அனைத்து வங்கிக்கிளைகளிலும் மாற்ற முடிந்தது, இப்போது இவற்றை ரிசர்வ் வங்கி அலுவலகங்களில் மட்டும் மாற்றலாம் அல்லது டெபாசிட் செய்யலாம். இந்தியாவில் ரிசர்வ் வங்கியின் 19 பிராந்திய அலுவலகங்கள் உள்ளன. அங்கு மக்கள் ரூ.2000 நோட்டை மாற்றலாம்.
சிதைந்த மற்றும் சேதமடைந்த நோட்டுக பற்றி ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இந்தியாவில் உள்ள ஒவ்வொரு வங்கிக்கும் அழுக்கடைந்த, சிதைந்த மற்றும் சேதமடைந்த நோட்டுகளுக்கு பதிலாக புதிய நோட்டுகளுக்களை மாற்றுவதற்கான வசதியை வழங்க உத்தரவிட்டுள்ளது. ஆனால் அத்தகைய நோட்டுகளின் மதிப்பை தீர்மானிக்க விதிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்திய ரிசர்வ் வங்கி ஏப்ரல் மாதம் ஒரு விதியை உருவாக்கி, மே மாதம் அதை புதுப்பித்தது. அனைத்து வங்கிக் கிளைகளும் ருபாய் நோட்டுகள் தொடர்பான பிரச்சனைகளில் மக்களுக்கு உதவ வேண்டும் என ரிசர்வ் வங்கி கேட்டுக்கொண்டுள்ளது. பழைய சேதமடைந்த நோட்டுகளுக்கு பதிலாக வங்கிகள் மக்களுக்கு புதிய ரூபாய் நோட்டுகளை அளிக்க வேண்டும். இதற்காக மக்கள் ரிசர்வ் வங்கி அலுவலகங்களுக்குச் செல்ல வேண்டியதில்லை என்பதை உறுதி செய்வதற்காக ரிசர்வ் வங்கி இந்த அறிவிப்பை அளித்தது.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ