8 ஆவது ஊதியக்கமிஷன், சமீபத்திய செய்திகள்: மத்திய அரசு ஊழியர்களுக்கு வரும் மாதங்களில் பல நல்ல செய்திகள் வரவுள்ளன. இன்னும் சில நாட்களில் அகவிலைப்படி அதிகரிப்பு பற்றிய அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதனுடன் ஜூலை 2023 முதலான அகவிலைப்படி அத்கரிப்பு அரியர் தொகையும் ஊழியர்களுக்கு கிடைக்கும். இதன் பிறகு ஊழியர்களின் ஊதியத்தில் கணிசமான ஏற்றம் இருக்கும். பண்டிகை காலங்களில் ஊழியர்கள் ஒரு மிகப்பெரிய பரிசை எதிர்பார்க்கலாம் என்று கூறினால் அது மிகையாகாது.
8 ஆவது ஊதியக்குழு
இந்த முறை அரசாங்கம் AICPE குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படியை 4% வரை அதிகரிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கிடையில், எட்டாவது ஊதியக் குழுவை அமல்படுத்த வேண்டும் என்று மத்திய பணியாளர்கள் அமைப்பினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கு மத்திய மோடி அரசு இதுவரை எந்த பதிலும் அளிக்கவில்லை. எனினும் எட்டாவது ஊதியக் குழுவைத் திட்டமிடுவது தொடர்பான பார்முலாவைத் தயாரிக்கும் பணியில் மத்திய அரசு மும்முரமாக ஈடுபட்டு வருவதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஃபார்முலாவின் அடிப்படையில், வரும் காலங்களில் மத்திய ஊழியர்களின் சம்பளம் உயரும். ஊடகங்களில் வரும் செய்திகளின்படி, எட்டாவது ஊதியக் குழு அமைப்பது குறித்த பெரிய அறிவிப்பை அரசாங்கம் விரைவில் வழங்கத் தயாராகி வருகிறது. எட்டாவது ஊதியக் குழுவை விரைவில் அரசு அமல்படுத்தலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படிக்க | தீபாவளிக்கு முன் மத்திய ஊழியர்களுக்கு இரட்டை ஜாக்பாட்.. உடனே தெரிந்துக்கொள்ளுங்கள்
சமீபத்தில், எட்டாவது ஊதியக் குழு அமைப்பது தொடர்பாக அரசு இப்பொது பரிசீலிக்கவில்லை என்று நிதித் துறை இணை அமைச்சர் பங்கஜ் சவுத்ரி மாநிலங்களவையில் கூறியிருந்தார். எனினும், இனிவரும் காலங்களில் அரசு நிச்சயம் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்கக்கூடும் என அரசியல் வல்லுநர்கள் கூறுகிறார்கள். அடுத்த ஆண்டு வரவிருக்கும் பொதுத் தேர்தலுக்கு முன்பாக, எட்டாவது ஊதியக் குழுவை அமைப்பது தொடர்பான சில திட்டவட்டமான நடவடிக்கைகளை அரசு எடுக்கலாம் என்று ஊகிக்கப்படுகிறது.
10 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிய ஊதியக்குழு
2013ல், 7வது சம்பள கமிஷன் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு 2016-ம் ஆண்டு அது அமல்படுத்தப்பட்டது. இதற்குப் பிறகு ஊழியர்களின் சம்பளத்தில் கணிசமான உயர்வு ஏற்பட்டது. தற்போது ஊழியர்களின் அதிர்ஷ்டம் மீண்டும் ஜொலிக்கப் போகிறது. புதிய ஊதியக் குழுவின் பரிந்துரைகள் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை அமல்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
ஃபிட்மெண்ட் ஃபாக்டர்
மத்திய அரசு 8-வது ஊதியக் குழுவை அமல்படுத்தினால், ஃபிட்மென்ட் ஃபாக்டர் அதிகரிக்கும். மத்திய பணியாளர்கள் பெறும் சம்பளத்தில் ஃபிட்மென்ட் ஃபாக்டர் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த ஊழியர்களின் கொடுப்பனவுகள் தவிர, அவர்களின் அடிப்படை சம்பளம் ஃபிட்மென்ட் காரணியின் அடிப்படையில் தீர்மானிக்கப்படுகிறது.
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44 சதவீதம் உயர்த்தப்படும்.
8வது சம்பள கமிஷன் அமல்படுத்தப்பட்டாலோ அல்லது ஃபிட்மென்ட் ஃபாக்டரின் சதவீதத்தை அரசு உயர்த்தினாலோ மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் எவ்வளவு உயரும் என்பதை ஒரு உதாரணத்துடன் புரிந்துகொள்வோம். தற்போது, மத்திய பணியாளர்களுக்கு 2.57 சதவீத ஃபிட்மென்ட் பேக்டர் உள்ளது. இதன்படி மத்திய ஊழியர்களின் குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகும். ஃபிட்மென்ட் ஃபாக்டர் 3.68 சதவீதமாக உயர்ந்தால், குறைந்தபட்ச அடிப்படை சம்பளம் 44 சதவீதத்திற்கு மேல் அதாவது நேரடியாக ரூ.18,000 -இலிருந்து ரூ.26,000 ஆக உயரும்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ