இந்திய ரயில்வே புதிய விதிகள்: சிகரெட் பிடிப்பது அனைவருக்கும் மிகவும் தீங்கு விளைவிக்கும் என்றாலும், ரயிலில் புகைபிடித்தால் என்ன செய்வது...? இதைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? இல்லை என்றால் புகை பிடிப்பது தொடர்பாக ரயில்வே விதித்துள்ள விதிகள் என்ன என்பதை இன்று இந்த கட்டுரையின் மூலம் தெரிந்துக்கொள்ளுங்கள். சமீபத்தில் ஆந்திர மாநிலம் திருப்பதியில் இருந்து செக்கந்திராபாத் சென்ற வந்தே பாரத் ரயிலில் குண்டூர் ரயில் நிலையத்தை தாண்டி சென்று கொண்டிருந்தது. அப்போது, டிக்கெட் எடுக்காமல் ரயிலில் ஏறிய பயணி ஒருவர், தன்னை பாதுகாத்துக் கொள்ள கழிவறைக்கு சென்று பூட்டிக் கொண்டிருந்துள்ளார்.
கழிவறையில் இருந்த அவர், தனது பையில் இருந்து ஒரு சிகரெட்டை எடுத்து பற்ற வைத்துள்ளார். வந்தே பாரத் ரயிலில் தீப்பிடித்தால் தானியங்கி முறையில் தீயை அணைக்கும் கருவி, அலாரம் அடிக்கும் கருவி என நவீன தொழில்நுட்பங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது தெரியாமல், அவர் சிகரெட்டை பற்ற வைத்ததும், தானியங்கி தீயை அணைக்கும் கருவி வேலை செய்யத் தொடங்கியது. அலாரங்கள் ஒலிக்கத் தொடங்கின. பெட்டியில் உள்ள தீயை அணைக்கும் ஸ்ப்ரே அடிக்கத் தொடங்கியது. இதனால், பதற்றமடைந்த பயணிகள் ரயில் பெட்டியில் உள்ள அவசரகால தொலைப்பேசி மூலம் ரயில் காவலருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, மனுபுலு ரயில் நிலையம் அருகே ரயில் நிறுத்தப்பட்டது. மேலும் இதனால் ரயில் பயணிகள் சிரமத்திற்கு ஆளாகினர்.
மேலும் படிக்க | Indian Railways: ரயிலில் சும்மா கூட இத செய்யாதீர்கள்... அப்புறம் அதோ கதி தான்!
இந்நிலையில் இதனையடுத்து தற்போது இந்தியன் ரயில்வே புதிய விதிமுறை ஒன்று வெளியிட்டது. அதன் படி, அந்த விதி என்ன என்பதை தெரிந்துக்கொள்ளவோம்.
ரயில்வேயின் புதிய விதி என்ன?
ரயில்வே சட்டத்தின் 167வது பிரிவின் கீழ் ரயிலில் புகைபிடிப்பது (Smoking) குற்றமாகும். இதனுடன், சக பயணிகளை மறுத்த பிறகும், பயணத்தின் போது யாராவது சிகரெட் புகைத்தால், அவருக்கு ரயில்வே அபராதமும் விதிக்கப்படலாம்.
500 வரை அபராதம் விதிக்கப்படலாம்
மீறினால் இந்தியன் ரயில்வே தரப்பில் இருந்து அந்த பயணிக்கு 100 முதல் 500 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும். எனவே ரயிலில் புகைபிடிப்பது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. ரயிலில் இதுபோன்ற செயல்களைச் செய்வதால் தீ விபத்து ஏற்படும் என்றும், அவர்களுடன் பயணிக்கும் பயணிகளும் சிரமத்தை சந்திக்க நேரிடும் என்றும் ரயில்வே தெரிவித்துள்ளது.
ரயிலில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன
மேலும் ரயிலில் தீ விபத்து போன்ற சம்பவங்களை தடுக்க சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. 2500க்கும் மேற்பட்ட பெட்டிகளில் இதுபோன்ற அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளதால், ரயிலில் யாராவது புகைபிடித்தால், இந்த சென்சார்கள் மூலம் தெரியவந்துவிடும்.
ரயிலில் ஹூக்கா புகைக்கலாமா?
அதே சமயம் ரயில்வே சட்டத்தின் 164வது பிரிவின்படி, ரயிலில் ஹூக்கா எடுத்துச் செல்வது தண்டனைக்குரிய குற்றமாகும். ரயில்வேயின் இந்த விதிகளை மீறும் பயணிகளுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
டாய்லெட்டிலும் புகை பிடிக்க அனுமதி கிடையாது
இது தவிர, பல பயணிகள் கழிப்பறையில் சிகரெட் பிடிக்கலாம் என்று நினைக்கிறார்கள், ஆனால் அது தவறு. ரயிலில் எங்குமே புகை பிடிக்க அனுமதி கிடையாது. எரியும் தீப்பெட்டியை ரயிலிலோ, சுற்றுவட்டாரத்திலோ எறிந்தால், தீ விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதுடன், பயணிகளின் உயிருக்கும் அச்சம் ஏற்படுத்தக்கூடும்.
மேலும் படிக்க | ரயில்வேயின் சர்குலர் ஜர்னி டிக்கெட்! ஒரு டிக்கெட்டில் இந்தியா முழுவதும் சுற்றலாம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ