ZEEL-க்கு ஆதரவாக பெரிய முடிவு: இன்வெஸ்கோ EGM-க்கு தடை விதித்தது பாம்பே உயர் நீதிமன்றம்

பம்பாய் உயர் நீதிமன்றம், EGM-க்கு அழைப்பு விடுக்க இன்வெஸ்கோவிற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2021, 04:53 PM IST
ZEEL-க்கு ஆதரவாக பெரிய முடிவு: இன்வெஸ்கோ EGM-க்கு தடை விதித்தது பாம்பே உயர் நீதிமன்றம் title=

Zee Entertainment Enterprises Limited (ZEEL) க்கு ஆதரவான ஒரு பெரிய முடிவு வந்துள்ளது. ZEEL ஐ சட்டவிரோதமாக சிக்க வைக்க முயற்சிக்கும் Invesco விவகாரத்தில் Zee Entertainment Enterprises Limited (ZEEL) க்கு ஆதரவாக ஒரு மிகப்பெரிய முடிவு இன்று வெளியிடப்பட்டது. இந்த வழக்கில், செவ்வாயன்று நடந்துள்ள ஒரு மிகப்பெரிய முன்னேற்றத்தில், பம்பாய் உயர் நீதிமன்றம், EGM-க்கு அழைப்பு விடுக்க இன்வெஸ்கோவிற்கு தற்காலிகமாக தடை விதித்துள்ளது.

முன்னதாக, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், ஜீயுடன் தனது ஊடக சொத்துக்களை இணைக்கும் திட்டத்தை முன்வைத்துள்ளதாகவும், புனித் கோயங்கா ZEEL இன் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக தொடர வேண்டும் என விரும்புவதாகவும் ஒரு ஊடக அறிக்கையின் மூலம் ரிலையன்ஸ் உறுதிபடுத்தியது. இதற்கு சில மணி நேரங்களுக்குப் பிறகு புனித் கோயங்கா ஒரு அறிக்கையை வெளியிட்டார். "சில சமயங்களில் அமைதியாக இருப்பது சிறப்பானதாக இருக்கும். ஆனால், சில சூழ்நிலைகளில் சரியான நேரத்தில் உள்ளதை உள்ளபடி கூறுவது அவசியம். அப்போதுதான் உண்மை முன்னால் வரும்” என அந்த அறிக்கையில் தெரிவித்தார்.

புனித் கோயங்காவிடமிருந்து வந்துள்ள அந்த அறிக்கையில், "தற்போதைய விவகாரத்தில் எனது மௌனத்தை கலைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளேன். அதனால்தான் நான் இன்று இந்தக் குறிப்பை எழுதுகிறேன். எனது அனைத்து தகவல் பரிமாற்றங்களிலும் நான் எப்போதும் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் இருந்திருக்கிறேன். தற்போதைய சூழ்நிலையைப் பற்றிய எனது எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். இந்த விஷயத்தில் இதுவே எனது முதல் மற்றும் கடைசி தகவல் பரிமாற்றமாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். இதன் பின்னர் ZEE இல் நமது மதிப்புகூட்டு பணிகளுக்கான பயணத்தில் கவனம் செலுத்த விரும்புகிறேன் முடியும்."

ALSO READ: ZEEL-Invesco: ஜீல்-இன்வெஸ்கோ இணைப்பு முன்மொழிவை உறுதிப்படுத்தும் ரிலையன்ஸ்

"முதலாவதாக, பெரும்பாலும், இன்வெஸ்கோ (Invesco) நமது நிறுவனத்திற்கு மிகவும் வலுவான ஆதரவாக இருந்து வருகிறது என்பதை நான் ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். இந்த உறவு இன்று மோசமாகி வருவதையும், நாம் அனைவரும் எதிர்கொள்ளும் துரதிர்ஷ்டவசமான சூழ்நிலைகளையும் பார்ப்பது எனக்கு வேதனை அளிக்கிறது" என்று கோயங்கா கூறினார்.

ரிலையன்ஸ் குழுமத்துடன் ZEEL-ஐ ஒரு ஒப்பந்தத்தில் வலுக்கட்டாயமாக இணைக்க இன்வெஸ்கோ முயற்சித்தது. ஆனால், ஜீ அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. ஜீ உடன் இணைக்கப்படவிருந்த குழுவின் நிறுவனங்களுக்கு குறைந்தபட்சமாக ரூ. 10,000 கோடி உயர்த்தப்பட்ட மதிப்பீடு கொடுக்கப்பட்டதுதான் இதற்கு காரணம்.

இன்வெஸ்கோ MD மற்றும் CEO புனித் கோயங்காவுடன், இயக்குநர்களான அசோக் குரியன் மற்றும் மனிஷ் சோக்கானி ஆகியோரை வெளியேற்றுவதற்கு EGM க்கு அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும், குரியன் மற்றும் சோக்கானி ஏற்கனவே தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துவிட்டனர். இதன் மூலம், இன்வெஸ்கோவால் முன்வைக்கப்பட்ட தீர்மானம் பயனற்றதானது.

மேலும், சுரேந்திர சிங் சிரோஹி, நைனா கிருஷ்ண மூர்த்தி, ரோஹன் தமிஜா, அருணா சர்மா, சீனிவாச ராவ் அடேபள்ளி மற்றும் கவுரவ் மேத்தா ஆகிய ஆறு புதிய இயக்குநர்களை நியமிக்க இன்வெஸ்கோ கோரியது.

ALSO READ: ZEEL நிறுவனத்தை சட்டவிரோதமாக கையகப்படுத்த முயன்ற Invesco சதி அம்பலம்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News