ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. உடனே இதை சரிபார்க்கவும்

New List Of Ration Cards Released: 2024 ஆம் ஆண்டுக்கான புதிய ரேஷன் கார்டுக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களின் பட்டியலானது தற்போது அரசு வெளியிட்டுள்ளது.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Feb 25, 2024, 10:14 AM IST
  • புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
  • புதிய ரேஷன் கார்டு பட்டியலை உங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் சரிபார்க்கலாம்.
  • உடனே தங்களுடைய பெயர் பட்டியலை சரிபார்க்க வேண்டும்.
ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு குட் நியூஸ்.. உடனே இதை சரிபார்க்கவும் title=

புதிய ரேஷன் கார்டு லிஸ்ட்: நாட்டிலுள்ள ஏழை எளிய மக்களுக்கு உதவுவதற்காக அரசு தரப்பிலிருந்து ரேஷன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. மத்திய அரசு மட்டுமல்லால், மாநில அரசுகளும் ரேஷன் கார்டு பயனாளிகளுக்கு பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறது. இதில் உணவு தானியங்கள் மட்டுமல்லாமல் பல உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் தான் ரேஷன் கார்டு முக்கிய ஆவணங்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

இந்தியாவில் குடும்பத்துடன் வசித்து வருபவர்களுக்கு அவர்களின் குடும்ப உறுப்பினர் விபரங்களுடன் குடும்ப அட்டை அதாவது ரேஷன் கார்டு (Ration card) வழங்கப்படுகிறது. குடும்ப அட்டையானது இந்தியக் குடிமகனுக்கு மிக முக்கிய ஆவணமாகும். அத்தியாவசியப் பொருட்கள் சட்டம் 1995 அத்தியாவசியப் பொருள்களின் உற்பத்தி வழங்கல் விநியோகம் போன்றவற்றை நியாயமான முறையில் வழங்கிட மத்திய மாநில அரசுகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. அதன்படி அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்கப்படுகிறது. இதன்மூலம் நியாய விலைக்கடைகளில் அத்தியாவசியப் பொருள்களை பெறுவதற்கு உணவுச் சீட்டாகவும், பிற அரசு திட்டங்களில் பங்கேற்க அடையாள அட்டையாகவும் பயனபடுகிறது. வறுமைக் கோட்டுக்கு மேல் உள்ளவர்கள், கீழ் உள்ளவர்கள் என்ற அடிப்படையில் இவ்வட்டைகள் வேறுபடுகின்றன.

இந்நிலையில் இத்தகைய முக்கியமான ஆவணமான ரேஷன் கார்டின் 2024 ஆம் ஆண்டிற்கான புதிய ரேஷன் கார்டுக்கு தேர்வு செய்யப்பட்ட தகுதியான நபர்களின் பட்டியலானது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, விண்ணப்பித்தவர்கள் உடனே தங்களுடைய பெயர் பட்டியலை சரிபார்க்க வேண்டும். அது எப்படி என்று இங்கே பார்க்கவும்.

மேலும் படிக்க | 7th Pay Commsission: மத்திய அரசின் சர்ப்ரைஸ்: தேர்தலுக்கு முன் ஊழியர்களுக்கு 3 முக்கிய அறிவிப்புகள்

* புதிய ரேஷன் கார்டு பட்டியலை உங்கள் வீட்டிலிருந்தே ஆன்லைனில் சரிபார்க்கலாம். 
* இதன் மூலம் நீங்கள் புதிய பட்டியலில் உங்கள் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது தெரிந்துகொள்ளலாம். 
* புதிய ரேஷன் கார்டு பட்டியலில் உங்கள் பெயர் இடம் பெற்றிருந்தால் அரசிடமிருந்து உங்களுக்கு பல சலுகைகள் வழங்கப்படும்.

ரேஷன் கார்டு புதிய பட்டியலில் பெயரை இப்படி சரிபார்க்கவும் :
* முதலில் அதிகாரப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
* இதன் பின், அதிகாரப்பூர்வ இணையதளத்தின் முகப்புப் பக்கம் திறக்கும், அதில் நீங்கள் ரேஷன் கார்டின் தகுதிப் பட்டியலின் விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும்.
* இப்போது மாவட்டப் பெயர், தொகுதி, கிராம பஞ்சாயத்து போன்ற விவரங்களை தேர்ந்தெடுக்கவும்.
* இதற்குப் பிறகு, அந்தோதயா ரேஷன் கார்டு எண்ணின் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* அதன் பிறகு ரேஷன் கார்டு எண்ணின் விருப்பத்தை கிளிக் செய்யவும்.
* கிளிக் செய்த பிறகு, ரேஷன் கார்டுகளின் புதிய பட்டியல் திரையில் தோன்றும்.
* இப்போது இந்தப் புதிய பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லையா? என்பதை சரிபார்த்து, பதிவிறக்கம் செய்துக் கொள்ளவும்.

புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்க தகுதிகள் என்ன?
உத்தரப் பிரதேச மாநிலத்தின் மக்கள் 2024 ஆம் ஆண்டு ரேஷன் கார்டு பட்டியல் கீழ் பலன்களைப் பெற விரும்பினால் அதற்கான தகுதியைக் கொண்டிருப்பது மிகவும் முக்கியமாகும், இதற்கு அம்மாநில நிரந்தர குடிமக்களாக இருப்பவர்களின் பெயர்கள் மட்டுமே ரேஷன் கார்டு பட்டியலில் இருக்கும். திட்டத்தின் பலன்களைப் பெற பயனாளியின் வயது 18 அல்லது அதற்கு மேற்பட்டதாக இருப்பது கட்டாயமாகும்.

மேலும் படிக்க | Reserve Bank of India: MSME, விவசாயிகளுக்கு ரிசர்வ் வங்கியின் சூப்பர் செய்தி: இனி நிமிடத்தில் கடன் கிடைக்கும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News