ரேஷன் கார்டு அப்டேட்: ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு ஒரு நல்ல செய்தி உள்ளது. நீங்களும் ரேஷன் கார்டு வைத்திருப்பவராக இருந்தால், இந்த முறை உங்கள் பொங்கல் சிறப்பாக இருக்கும். அதன்படி தமிழகத்தில், தைப் பொங்கல் பண்டிகையை பொது மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடும் நோக்கில், அரசு சார்பில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு, பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.
அந்த வகையில் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு இந்த முறை 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்கப்படும். முன்னதாக கடந்த முறை 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டது. இதில் பல்வேறு குளறுபடிகள் ஏற்பட்ட நிலையில், ரொக்கமாக ரூ.1,000 மட்டும் வழங்க திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது.
மேலும் படிக்க | EPFO News: அதிகரிக்கிறதா இபிஎஃப்ஓ சந்தாதாரர்களின் ஓய்வூதியம்? சமீபத்திய அப்டேட் இதோ
ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு:
பச்சரிசி- 1 கிலோ, வெல்லம்- 1 கிலோ, முந்திரி- 50 கிராம், திராட்சை- 50 கிராம், ஏலக்காய்- 10 கிராம், பாசி பருப்பு- 500 கிராம், ஆவின் நெய் - 100 கிராம், மஞ்சள் தூள் - 100 கிராம், மிளகாய் தூள் - 100 கிராம், மல்லி தூள் - 100 கிராம் ஆகியவை, வழங்கப்பட்டது. இவற்றுடன் கடுகு - 100 கிராம், சீரகம்- 100 கிராம், மிளகு - 50 கிராம், புளி- 200 கிராம், கடலைப் பருப்பு- 250 கிராம், உளுத்தம் பருப்பு- 500 கிராம், ரவை- 1, கோதுமை - 1 கிலோ, உப்பு - 500 கிராம், துணி பை ஒன்று மற்றும் கரும்பு வழங்கப்பட்டது.
மத்திய அரசின் புதிய நெறிமுறை:
அரசின் இலவச ரேஷன் வசதியை, தகுதியற்ற பலர் பயன்படுத்தி வருகின்றனர். இதை தடுக்கும் வகையில், அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது. மேலும், புதிய வழிமுறைகளை பின்பற்றாத பயனாளிகளின் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளின்படி, இலவச ரேஷன் வசதியைப் பயன்படுத்திக் கொள்ளும் அனைவரும், அவர்களின் வெரிஃபிகேஷனை மேற்கொள்ள வேண்டும். இதற்காக 30 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. வெரிஃபிகேஷனில் நீங்கள் தகுதியற்றவர் என கண்டறியப்பட்டால் உங்கள் ரேஷன் கார்டு ரத்து செய்யப்படும்.
மேலும் படிக்க | ஏழரை நாட்டு சனியின் தாக்கம் பாடாய் படுத்துகிறதா? இந்த பரிகாரங்கள் கை கொடுக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ