புதுடில்லி: எஸ்பிஐ, எச்.டி.எஃப்.சி மற்றும் ஐ.சி.ஐ.சி.ஐ உள்ளிட்ட பல முன்னணி வங்கி வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1 முதல் OTP பிரச்சனைகளை எதிர்கொள்ளக்கூடும். இந்த வங்கிகள் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) வழங்கிய விதிமுறைகளை பின்பற்றத் தவறியதால் வாடிக்கையாளர்கள் பிரச்சனையை எதிர்கொள்ள நெரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். ஏப்ரல் 4 வரை பொது பரிவர்த்தனைகளுக்காக வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதால் OTP சிக்கல் இன்னும் சவால் மிகுந்ததாகியுள்ளது.
இந்நாட்களில் பணம் செலுத்துவதற்கும் எந்தவொரு செயல்பாட்டை மேற்கொள்வதற்கும் OTP சரிபார்ப்பு அவசியம் ஆகிவிட்டது. ஆகையால், OTP தொடர்பான இந்த சிக்கல் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் சிரமத்தை ஏற்படுத்தும் என தெரிய வருகிறது.
உங்கள் வங்கி செயல்முறையின்போது OTP வரவில்லையா? இவை காரணமாக இருக்கலாம்:
- கட்டணம் செலுத்த அல்லது வங்கி தொடர்பான ஏதேனும் செயல்பாடுகளைச் செய்ய, வங்கிகள் பதிவுசெய்யப்பட்ட மொபைல் எண் அல்லது மின்னஞ்சல் ஐடி-க்கு அல்லது இரண்டிலும் ஒரு முறை பயன்பாட்டு கடவுச்சொல்லை (OTP) அனுப்புகின்றன. மேலும் தொடர வாடிக்கையாளர்கள் சரியான விவரங்களை உள்ளிட வேண்டும்.
- இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு அதிகப்படியான மற்றும் தேவையற்ற செய்திகள் அனுப்பப்படுவது தொடர்பான புகார்களை TRAI பெறத் தொடங்கியது.
- அதைத் தொடர்ந்து, TRAI இந்த விவகாரத்தை சரி செய்ய, கோரப்படாத வணிக தொடர்புகளின் (யு.சி.சி) அச்சுறுத்தலைக் கட்டுப்படுத்த, தொலைதொடர்பு வணிக தொடர்பு வாடிக்கையாளர் முன்னுரிமை விதிமுறைகள், 2018 (“TCCCPR, 2018”) ஐ ஜூலை 19, 2018 அன்று வழங்கியது.
- அப்போதிருந்து, ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் (TSP) மூலம் இந்த செய்திகளை அனுப்பும் முதன்மை நிறுவனங்களுடன் TRAI தொடர்பு கொள்ளத் தொடங்கியது.
- ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்யத் தவறிய மொத்த எஸ்எம்எஸ் அனுப்பும் முக்கிய வங்கிகள் மற்றும் டெலிமார்க்கெட்டர்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களுடன் தொலைதொடர்பு சேவை வழங்குநர்கள் பலமுறை தொடர்பு கொண்டுள்ளனர். மேலும் விதிமுறைகளின் விதிமுறைகளுக்கு இணங்குமாறு கேட்டுக்கொண்டனர் என்று டிராய் தெரிவித்துள்ளது.
- ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எஃப்.சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஆக்சிஸ் வங்கி போன்ற முக்கிய வங்கிகள் உள்ளிட்ட முதன்மை நிறுவனங்கள் கட்டாய விதிமுறைகளை பின்பற்றவில்லை என்பதை டிராய் அப்போது அறிந்து கொண்டார்.
- ஏப்ரல் 1, 2021 முதல் வாடிக்கையாளர்களுடனான தகவல்தொடர்புகளில் எந்தவிதமான இடையூறும் ஏற்படாமல் இருக்க, வங்கிகள், டெலிமார்க்கெட்டர்கள் உள்ளிட்ட முதன்மை நிறுவனங்களுக்கு மார்ச் 31, 2021 க்கு முன் ஒழுங்குமுறை தேவைகளை பூர்த்தி செய்யுமாறு டிராய் அறிவுறுத்தியுள்ளது.
- வங்கிகள் (Banks) இணங்கத் தவறினால், வாடிக்கையாளர்கள் ஏப்ரல் 1 முதல் OTP தொடர்பான சிக்கலை எதிர்கொள்வார்கள்.
ALS READ: Big News! ஏப்ரல் 1 முதல் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு இந்த வசதி கிடைக்காது!
பட்டியலில் எந்தெந்த வங்கிகள் உள்ளன?
TRAI ஆல் வழங்கப்பட்ட டீஃபால்டர் முதன்மை நிறுவனங்களின் பட்டியலில் பல வங்கிகள் உள்ளன. இந்த வங்கிகளின் வாடிக்கையாளர்கள் OTP தொடர்பான சிக்கலை எதிர்கொள்ள நேரிடும்.
ஆக்சிஸ் வங்கி
பந்தன் வங்கி
பாங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆஃப் இந்தியா
கனரா வங்கி
மத்திய வங்கி
ஃபெடரல் வங்கி
எச்.டி.எஃப்.சி வங்கி
ஐசிஐசிஐ வங்கி
ஐடிபிஐ வங்கி
ஐ.டி.எஃப்.சி ஃபர்ஸ்ட் பேங்க் லிமிடெட்
இந்தியன் ஓவர்சீஸ் வங்கி
கோட்டக் மஹிந்திரா வங்கி
பஞ்சாப் நேஷனல் வங்கி
ஆர்.பி.எல் வங்கி
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா
எஸ்பிஐ கார்டுகள் மற்றும் கட்டண சேவைகள்
யூனியன் பாங்க் ஆஃப் இந்தியா
யெஸ் பாங்க்
ALSO READ: இந்த வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு, இந்த சேவை ஏப்ரல் 1 முதல் நிறுத்தப்படும்!
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR