இவ்வளவு கம்மி விலையில் Apple AirPods? தள்ளுபடியில் அசத்தும் பிளிப்கார்ட்!

Apple AirPods: செகண்ட் ஜெனெரேஷன் ஆப்பிள் ஏர்பாட்ஸ்கள் தான் உலகளவில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக தரவுகள் தெரிவிக்கிறது.  

Written by - RK Spark | Last Updated : Jan 7, 2023, 01:13 PM IST
  • கடந்த 2016-ல் ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை அறிமுகம் செய்தது.
  • ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை அதிரடி தள்ளுபடியுடன் வெறும் ரூ.1499க்கு வழங்குகிறது.
  • ப்ளிப்கார்ட்டில் ஆப்பிள் ஏர்பாட்ஸ்களின் ரூ.11,990 என்று பட்டியலிடப்பட்டுள்ளது.
இவ்வளவு கம்மி விலையில் Apple AirPods? தள்ளுபடியில் அசத்தும் பிளிப்கார்ட்! title=

உலகளவில் மிகவும் பிரபலமான டிடபுள்யூஎஸ் இயர்பட் என்றால் ஆப்பிள் ஏர்பாட்ஸ்கள் தான்.  ஆப்பிள் நிறுவனத்தின் இந்த முதல் வயர்லெஸ் புளூடூத் இயர்பட்ஸ்கள் சிறந்த பிரீமியம் ஒலி தரம், எளிதான இணைப்பு மற்றும் சிறிய அளவிலான வடிவமைப்பு போன்ற சிறப்பம்சங்களை கொண்டு விற்பனையில் வெற்றியினை பெற்றுள்ளது.  கடந்த 2016-ம் ஆண்டில் குபெர்டினோ-அடிப்படையிலான தொழில்நுட்ப நிறுவனம் ஐபோன் 7 உடன் இணைந்து முதல் ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை அறிமுகம் செய்தது.  தற்போது, ​​ஆப்பிள் தனது போர்ட்ஃபோலியோவில் மூன்றாம் தலைமுறை ஆப்பிள் ஏர்பாட்ஸ், இரண்டாம் தலைமுறை  ஆப்பிள் ஏர்பாட்ஸ் ப்ரோ மற்றும்  ஆப்பிள் ஏர்பாட்ஸ் மேக்ஸ் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.  இந்த மூன்று வகைகளிலும் இரண்டாம்  தலைமுறை ஆப்பிள் ஏர்பாட்ஸ்கள் தான் உலகளவில் அதிகம் விற்பனை செய்யப்படுவதாக தரவுகள் தெரிவிக்கிறது,  இதுதவிர முதல் தலைமுறை  ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை காட்டிலும் இரண்டாம் தலைமுறை ஆப்பிள் ஏர்பாட்ஸ்கள் சிறந்த கம்புயூட்டேஷன் மற்றும் பேட்டரியுடன் வருகின்றன.  

மேலும் படிக்க | தினசரி 2 ஜிபி டேட்டா.. 160 நாட்கள் வேலிடிட்டி.. BSNL அசத்தல் திட்டம்!

 

இருப்பினும் இந்த இரண்டு இயர்பட்ஸ்களின் வடிவமைப்பும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக தான் உள்ளது.  மூன்றாம் தலைமுறை ஏர்பாட்ஸ்களும் இதே சிறப்பம்சங்களை தான் கொண்டிருக்கிறது என்றாலும் இந்த சாதனத்தின் வடிவமைப்பு இரண்டையும் விட சற்று வித்தியாசமானதாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.  மூன்றாம் தலைமுறை  ஆப்பிள் ஏர்பாட்ஸ் மற்றும் இரண்டாம் தலைமுறை  ஆப்பிள் ஏர்பாட்ஸ் இரண்டிற்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளது.  அதுவே இந்த இரண்டு சாதனங்களின் விலையை ஒப்பிட்டு பார்த்தோமானால் இரண்டிற்குமிடையே மிகப்பெரிய பெரிய அளவில் வித்தியாசம் உள்ளது.  பெரும்பாலான வாடிக்கையாளர்கள் விலையின் காரணமான இரண்டாம் தலைமுறை  ஆப்பிள் ஏர்பாட்ஸ் வாங்குவதில் வெகுவாக ஆர்வம் காட்டி வருகின்றனர்.  தற்போது  ஆப்பிள் ஏர்பாட்ஸ் வாங்க விரும்புபவர்களுக்கு இ-காமர்ஸ் தளமான ப்ளிப்கார்ட் மிகப்பெரிய அதிரடி தள்ளுபடியை வழங்கியுள்ளது. 

இந்த 2023ம் ஆண்டில் முதல் வாரத்தில் ப்ளிப்கார்ட் நிறுவனம் உங்களுக்கு ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை அதிரடி தள்ளுபடியுடன் வெறும் ரூ.1499க்கு வழங்குகிறது.  ப்ளிப்கார்ட்டில் ஆப்பிள் ஏர்பாட்ஸ்களின் ரூ.11,990 என்று  பட்டியலிடப்பட்டுள்ளது.  இப்போது நீங்கள் உங்களின் பழைய ஸ்மார்ட்போனை மாற்றி இந்த சாதனத்தை வாங்கினால் உங்களுக்கு ப்ளிப்கார்ட் ரூ.10,500 வரை தள்ளுபடியினை வழங்குகிறது.  இந்த மாபெரும் தள்ளுபடியின் மூலமாக நீங்கள் ஆப்பிள் ஏர்பாட்ஸ்களை வெறும் ரூ.1,499க்கு வாங்கலாம், இது தவிர ஆக்சிஸ் வங்கியின் கார்டை பயன்படுத்தி ப்ளிப்கார்ட்டில் ஆப்பிள் ஏர்பாட்ஸ் வாங்குவோருக்கு 5% கேஷ்பேக்கை  வழங்குகிறது.

மேலும் படிக்க | சிறிய முதலீடு .... கை நிறைய லாபம் ! ஏழைகளுக்கான 4 வழிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News