அடுத்த ஆண்டு ஜூன் மாதம் வரை பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்யலாம் என்ற தெரிவை 2021 ஜனவரி வரை கொக்டுத்திருந்தது அமேசான்.
2021 ஜூன் வரை வீட்டிலிருந்து வேலை செய்யலாம் என்று தற்போது Amazon.com Inc அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கத்தால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
"வீட்டிலிருந்து திறம்பட செய்யக்கூடிய நிலையில் உள்ள ஊழியர்கள் 2021 ஜூன் 30 வரை அவ்வாறு செய்வது வரவேற்கப்படுகிறது " என்று அமேசான் செய்தித் தொடர்பாளர் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இந்த work from home நீட்டிப்பு உலகளவில் பொருந்தும்.
முன்னதாக, வீட்டிலிருந்து வேலை செய்வதற்கான விருப்பம் 2020 ஜனவரி வரை ஊழியர்களுக்குக் கிடைத்தது.
சமீபத்தில், அமேசான் அமெரிக்காவில் உள்ள தனது பணியாளர்களில் 19,000 க்கும் அதிகமானோர் கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவித்தது. தொற்றுநோய் காலத்தில் தனது கிடங்குகளைத் திறந்து வைத்திருப்பதால், தனது பணியாளர்களுக்கு அமேசான் நிறுவனம் ஆபத்தை ஏற்படுத்தியதாகவும் விமர்சனத்தை அமேசான் எதிர்கொண்டது. அதன் விளைவாக ஊழியர்கள் மற்றும் தொழிற்சங்கங்களிலிருந்தும் அமேசான் நிறுவனத்திற்கு பலத்த சிக்கல்கள் எழுந்தன.
ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்யலாம் என்ற தெரிவை காலவரையின்றி அனுமதித்த முதல் பெரிய தொழில்நுட்ப நிறுவனம் ட்விட்டர். இந்த அறிவிப்பை மே மாதத்தில் டிவிட்டர் அறிவித்தது என்றால், ஊழியர்கள் தங்கள் பணிநேரங்களில் பாதி வரை வீட்டில் இருந்து அனுமதிப்பதாக மைக்ரோசாப்ட் இந்த மாத தொடக்கத்தில் கூறியது.
தனது ஊழியர்களை அடுத்த ஆண்டு ஜூலை வரை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிக்கும் என்று பேஸ்புக் (Facebook) கூறியது, அதே நேரத்தில் அலுவலகத்திற்கு வந்து தான் வேலை பார்க்க வேண்டும் என்ற வகை பணியில் இல்லாதவர்கள், ஜூன் வரை வீட்டில் இருந்தே பணியாற்றலாம் என்று work from home தெரிவை கூகுள் நீட்டித்தது.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR