மே 23ம் தேதி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெறுவதாக அரசு அறிவித்துள்ளது. ரூ.2000 நோட்டுக்களை வங்கிகளில் டெபாசிட் அல்லது பரிமாற்ற, பான் அல்லது ஆதார் போன்ற அடையாள ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டுமா என்கிற குழப்பம் மக்களிடையே இருந்து வருகிறது. கடந்த நவம்பர் 2016ம் ஆண்டு ஒரே இரவில் பழைய ரூ 500 மற்றும் ரூ 1000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்து ஒளிக்கப்பட்டதை போலல்லாமல் ரூ.2000 நோட்டை மாற்றுவதற்கு அவகாசம் வழங்கப்பட்டுள்ளது மற்றும் ரூ.2000 நோட்டு இப்போதும் புழக்கத்தில் இருந்து வருகிறது. ரூ.2000 நோட்டை டெபாசிட் செய்ய அல்லது பரிமாற்ற இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) செல்லுபடியாகும் ஐடியை வழங்குவதையோ அல்லது டெபாசிட் படிவங்களை நிரப்புவதையோ கட்டாயமாக்கவில்லை என்றாலும், ஆதாரமாக அடையாள அட்டைகளை சமர்ப்பிக்குமாறு வாடிக்கையாளர்களை சில வங்கிகள் கோருவதாக புகார்கள் எழுந்துள்ளது. சில வங்கிகள் மின்னணு பதிவு மூலம் ரூ.2000 நோட்டுகளை மாற்றிக்கொண்டது. இன்னும் சில வங்கிகள் தங்கள் பெயர் மற்றும் மொபைல் எண்ணை எந்த அடையாளச் சான்றிதழும் கொடுக்காமல் ஒரு பதிவேட்டில் பதிவு செய்யும்படி கூறியுள்ளது.
ரூ.2000 நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்யும்போது கவனிக்க வேண்டியவை:
- வாடிக்கையாளர்கள் ரூ.2,000 நோட்டுகளை ரூ.50,000க்கு மேல் டெபாசிட் செய்ய பான் கார்டு/எண் வைத்திருக்க வேண்டும்.
- ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் விஷயத்தில் வங்கிகள் தங்கள் சொந்த செயல்முறை மற்றும் விதிகளை பின்பற்றும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- ஒரு வாடிக்கையாளரின் வங்கிக் கணக்கில் செலுத்தக்கூடிய டெபாசிட்டுக்கு வரம்பு இல்லை மற்றும் டெபாசிட்களுக்கு கேஒய்சி விதிமுறைகள் பொருந்தும்.
- வங்கிக் கணக்குகளில் ரூ. 50,000 அல்லது அதற்கு மேற்பட்ட டெபாசிட்களுக்கு பான் அட்டையை வழங்க வேண்டும், இதே முறை ரூ.2000 நோட்டுகளுக்கும் பொருந்தும்.
- ரூ.2,000 நோட்டுகளை வங்கியில் இருந்து பரிமாறும்போது கவனிக்க வேண்டியவை:
- ரிசர்வ் வங்கியின் வழிகாட்டுதல்களின்படி, ஒரு நபர் ஒரே நேரத்தில் ரூ.20,000 வரை மட்டுமே மாற்றிக்கொள்ள முடியும்.
- நாட்டின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, ரூ.2,000 நோட்டுகளை மாற்றும் போது அல்லது டெபாசிட் செய்யும் போது படிவம் அல்லது அடையாளச் சான்று தேவையில்லை என்று அதன் கிளைகளுக்கு தெரிவித்துள்ளது.
- ரூ.2000 நோட்டை மாற்ற ஆரம்பத்தில் சில வங்கி கிளைகள் வாடிக்கையாளர்களிடம் படிவத்தை பூர்த்தி செய்ய வலியுறுத்தியது. ஆனால் பின்னர் தங்கள் தலைமை வங்கிகள் நடைமுறையை நிறுத்தியது.
- கோடக் மற்றும் ஹெச்எஸ்பிசி போன்ற தனியார் வங்கிகள் கணக்கு இல்லாதவர்களுக்கு படிவம்/ஐடி சான்றிதழை கேட்டது.
- ஆக்சிஸ் வங்கி, ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட், யெஸ் வங்கி, கனரா வங்கி மற்றும் பாங்க் ஆஃப் இந்தியா ஆகியவை ரூ.2000 நோட்டை மாற்ற படிவம் அல்லது அடையாளச் சான்று எதையும் கட்டாயப்படுத்தவில்லை.
- பாங்க் ஆஃப் பரோடா ரூ.2000 நோட்டை மாற்ற எந்த படிவமும் தேவையில்லை என்றும், ஆனால் கணக்கு இல்லாதவர்களுக்கு அடையாளச் சான்று தேவை என்றும் கூறியுள்ளது.
- ஐசிஐசிஐ மற்றும் ஹெச்டிஎஃப்சி வங்கிகள் அனைத்து வாடிக்கையாளர்களும் படிவங்களை நிரப்ப வேண்டும் என்றும், கணக்கு இல்லாதவர்களுக்கு அடையாளச் சான்று அவசியம் என்றும் கூறியுள்ளது.
மேலும் ரூ. 2,000 ரூபாய் நோட்டுகளை திரும்பப் பெறுவது பணமதிப்பிழப்பு அல்ல என்றும், சட்டப்பூர்வமான நடவடிக்கை, செயல்பாட்டு வசதிக்காக அவற்றை மாற்றுவதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் ரிசர்வ் வங்கி, தில்லி உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மேலும் படிக்க | 7th Pay Commission: ஜூலை மாதம் 2 பெரிய குட் நியூஸ்...டிஏ உடன் இதுவும் அதிகரிக்கும்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ