இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு அலர்ட், உடனடியாக இந்த செய்தியை படியுங்கள்

Free Ration Rules: இது தொடர்பாக அரசும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது. அந்தவகையில் இலசவ ரேஷன் பெறுபவர்களுக்கு கட்டாயம் இந்த செய்தியை படித்து மோசடியில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்.

Written by - Vijaya Lakshmi | Last Updated : Jun 14, 2023, 12:53 PM IST
  • பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மோசடி.
  • ரேஷன் பணம் கணக்கில் மாற்றப்படும் என்று கூறி மோசடி.
  • KYC புதுப்பிப்பு என்று கூறி மோசடி
இலவச ரேஷன் பெறுபவர்களுக்கு அலர்ட், உடனடியாக இந்த செய்தியை படியுங்கள் title=

இலவச ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் அலர்ட்: கொரோனா காலத்தில் மத்திய அரசு தொடங்கிய இலவச ரேஷன் திட்டம் தற்போது வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில் இந்த இலவச திட்டத்தின் கீழ், தகுதியான கார்டு வைத்திருப்பவர்களுக்கு டிசம்பர் 2023 வரை இலவச ரேஷன் கிடைக்கும். நாடு முழுவதும் சுமார் 80 கோடி பேர் இந்த திட்டத்தை பயன்படுத்தி வருகின்றனர். குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் ஏற்ப ரேஷன் வழங்கப்படுகிறது. ஆனால், இந்த இலவச ரேஷன் திட்டத்திற்கு மத்தியில், தற்போது மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றுவதற்கு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு தான் வருகின்றனர். அத்தகைய சூழ்நிலையில், நீங்கள் சில விஷயங்களில் கட்டாயம் கவனம் செலுத்த வேண்டும். அவற்றை என்ன என்பதை இங்கே தெரிந்துக்கொள்வோம்.

பெயர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்று கூறி மோசடி
ரேஷன் கார்டுகளின் பட்டியல் அவ்வப்போது புதுப்பிக்கப்பட்டு தான் வருகிறது. இத்தகைய சூழ்நிலையில், பல பெயர்கள் இந்த அப்டேட் முறையில் சேர்க்கப்படுகின்றன, மறுபுறம் சிலரின் பெயர் நீக்கப்படுகின்றன. அந்தவகையில் இந்த சந்தர்பத்தை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு மோசடி செய்பவர்கள் மக்களை ஏமாற்றி வருகின்றனர். இது தொடர்பாக அரசும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து தான் வருகிறது. மோசடி செய்பவர்கள் பெயர் நீக்கப்பட்ட நபர்களுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து, அவர்களின் பெயர்களைச் சேர்க்க மோசடி வழிமுறைகளைப் பின்பற்றுமாறு கூறுகிறார்கள். இதுபோன்ற பல மோசடி வழக்குகள் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளன.

மேலும் படிக்க | பண பரிவர்த்தனை செய்யும் போது கவனம் தேவை.. இல்லை என்றால் சிக்கல் தான்!

ரேஷன் பணம் கணக்கில் மாற்றப்படும்
மேலும் உங்கள் கணக்கில் இலவச ரேஷன் பணத்தைப் பெறுவதற்கான செய்தி கிடைத்தால், இணைப்பைக் கிளிக் செய்யுமாறு கூறிகின்றனர், ஆனால் இது போன்ற இணைப்பைக் கிளிக் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறது. மேலும் இந்த இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம் உங்களுக்கு அதிகச் செலவு ஏற்படலாம் மற்றும் நீங்கள் மோசடிக்கு ஆளாகலாம். தற்போது, ​​அரசு அத்தகைய திட்டத்தை செயல்படுத்தவில்லை. இதுபோன்ற போலி செய்திகளால், நீங்கள் மோசடிக்கு ஆளாகலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

KYC புதுப்பிப்பு என்று கூறி மோசடி
இதனிடையே மோசடி செய்பவர்கள் புதிய முறைகளை பயன்படுத்தி ஏமாற்றி வருகின்றனர். அதன்படி இலவச ரேஷன் எடுப்பவர்களை அழைப்பதன் மூலம், அவர்களின் KYC ஐ புதுப்பிக்கச் சொல்லி மக்களை தங்களின் வலையில் சிக்க வைக்கின்கின்றனர். எனவே இதுபோன்ற ஏதேனும் அழைப்பு வந்தால், எந்த வித ரகசியத் தகவலையும் கொடுக்க வேண்டாம். உங்களின் ரகசியத் தகவலை பகிர்ந்து கொள்வதன் மூலம் நீங்களே சிக்கலில் மாட்டுக்கொள்ளலாம்.

இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், உங்களுக்கு இலவச ரேஷன் கிடைக்கும்
இதுபோன்ற ஒரு இணைப்பை நீங்கள் கண்டால், அதில் அதிக இலவச ரேஷனைப் பெற நீங்கள் ஈர்க்கப்படுகிறீர்கள். ஆனால் அதே நேரத்தில் கூடுதல் இலவச ரேஷன் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும் என்றும் கூறப்படுகிறது. தவறுதலாக கூட இதைச் செய்யாதீர்கள், ஏனெனில் இவை போலி இணைப்புகள் ஆகும். போலி இணைப்பைக் கிளிக் செய்வதன் மூலம், நீங்கள் மோசடிக்கு பலியாகலாம்.

மேலும் படிக்க | விமானப் பயணிகளுக்கு குட் நியூஸ்! DGCA எடுத்துள்ள முக்கிய முடிவு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News