புதுடெல்லி: எஸ்பிஐ வாடிக்கையாளர்களுக்கு நல்ல செய்தி வந்துள்ளது. நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ தனது வாடிக்கையாளர்களுக்கு வங்கி சேவைகளை மேம்படுத்த முயற்சித்து வருகிறது.
இந்த வரிசையில், எஸ்பிஐ (SBI Bnak)1800 1234 என்ற இலவச எண்ணை வழங்கியுள்ளது, இதில் நீங்கள் வீட்டில் இருந்தபடியே பல்வேறு வசதிகளைப் பெறலாம்.
அனைத்து வேலைகளும் ஒரு எண்ணில் இருந்து செய்யப்படும்
பாரத ஸ்டேட் வங்கி அளித்த தகவலின்படி, இந்த இலவச எண்ணை அழைத்தால், உங்கள் வங்கி இருப்பு மற்றும் கடந்த கால பரிவர்த்தனை விவரங்களைப் பெறலாம். அதாவது, இந்த ஒரு எண்ணில் இருந்து உங்கள் கணக்கு தொடர்பான அனைத்து தகவல்களையும் பெறுவீர்கள்.
ALSO READ | SBI Alert: இந்த தேதி முதல் IMPS பரிவர்த்தனைக்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டும்
வங்கி தகவல்
ட்விட்டரில் இது தொடர்பாக பதிவிட்டுள்ள SBI வங்கி, 'வீட்டிலேயே இருங்கள், பாதுகாப்பாக இருங்கள், நாங்கள் உங்களுக்கு சேவை செய்ய வந்துள்ளோம். உங்கள் உடனடி வங்கித் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவும் தொடர்பு இல்லாத சேவையை SBI வழங்குகிறது. எங்கள் இலவச எண்ணை 1800 1234க்கு அழைக்கவும்' என்று தெரிவித்துள்ளது.
Stay safe at home, we are there to serve you. SBI provides you a contactless service that will help you with your urgent banking needs.
Call our toll free number 1800 1234.#SBIAapkeSaath #StayStrongIndia #SBI #StateBankOfIndia #IVR #AzadiKaAmritMahotsavWithSBI #AmritMahotsav pic.twitter.com/QZNzVgPzYd
— State Bank of India (@TheOfficialSBI) January 20, 2022
இலவச தொலைபேசி எண் மூலம் கிடைக்கும் வசதிகள்
எஸ்பிஐயின் இந்த இலவச எண் மூலம் உங்கள் வங்கி (SBI Bnak) இருப்பைச் சரிபார்க்கலாம்
இந்த இலவச எண்ணை அழைப்பதன் மூலம், உங்களின் கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவல்களைப் பெறலாம்.
எஸ்பிஐயின் இலவச எண்ணான 1800 1234க்கு மெசேஜ் செய்வதன் மூலம் உங்கள் வங்கி இருப்பு மற்றும் கடைசி ஐந்து பரிவர்த்தனைகள் பற்றிய தகவலையும் பெறலாம்.
இந்த இலவச எண்ணில் உங்கள் ஏடிஎம் கார்டைத் தடுக்கலாம்.
இந்த இலவச எண்ணை தொடர்பு கொண்டு ஏடிஎம் கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த இலவச எண் மூலம், வீட்டில் இருந்தபடியே உங்கள் ஏடிஎம் கார்டின் பின் எண்ணை உருவாக்கலாம்.
இந்த கட்டணமில்லா எண்ணில் இருந்து உங்கள் ஏடிஎம் கார்டை முடக்கிய பிறகு புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம்.
இந்த வசதிகளை இந்த கட்டணமில்லா எண்ணை தொடர்பு கொண்டும் பெறலாம், அல்லது குறுஞ்ச்செய்தி அனுப்பியும் பெறலாம்.
ALSO READ | SBI News: இந்த கணக்கு உங்ககிட்ட இருக்கா? இதில் கிடைக்கும் எக்கச்சக்க நன்மைகள்!!
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR