இந்திய குடிமக்களுக்கு ஆதார் கார்ட் ஒரு முக்கியமான ஆவணம் ஆகும். ஆதார் எண் வாகனப் பதிவு செய்வதற்கும், புதிய வங்கிக் கணக்கு தீர்ப்பதற்கும், ஐடிஆர் தாக்கல் செய்வதற்கும், அரசு திட்டங்களுக்கும், மானியங்கள் பெறவும், ஓய்வூதியங்கள் பெறவும், மொபைல் சிம் கார்டுகளுக்கு விண்ணப்பிப்பதற்கும் கட்டாயமானது. இது ஒரு முக்கியமான சட்ட ஆவணம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆதார் தனிப்பட்ட மற்றும் அரசாங்க நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், சில சமயங்களில் ஆதாரில் உள்ள தகவல்களை நாம் புதுப்பிக்க வேண்டும். ஆதாரில் எந்த தகவல்களை மாற்றி அமைக்க முடியும், எந்த எந்த தகவல்களை மாறி அமைக்க முடியாது என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது. உங்களால் ஆதாரில் உள்ள எந்த தகவலை மாறி அமைக்க முடியும் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.
மேலும் படிக்க | இனி பணம் எடுக்க ஏடிஎம் செல்ல வேண்டாம்! வீடு தேடி பணம் வந்து சேரும்!
உங்கள் ஆதார் அட்டையில், உங்கள் பாலினம் மற்றும் பிறந்த தேதியை ஒருமுறை மட்டுமே மாற்ற முடியும். இருப்பினும், பெயரை இரண்டு முறை மாற்றி கொள்ள முடியும். மூன்றாவது முறையாக ஆதார் அட்டையில் உங்கள் பெயரை மாற்ற வேண்டும் என்றால், அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும். உங்கள் ஆதார் அட்டையில் முகவரியை எத்தனை முறை வேண்டும் என்றாலும் மாற்றி கொள்ளலாம். இதற்கு உங்களது அடையாள அட்டை, பாஸ்போர்ட், ரேஷன் கார்டு அல்லது முகவரிக்கான பிற சான்றுகளை சமர்ப்பிக்க வேண்டும். இந்த தகவல்கள் அனைத்தும் ஆன்லைனில் புதுப்பிக்கப்படும். அதே சமயம் உங்களின் தற்போதைய முகவரியுடன் உங்கள் ரேஷன் கார்டு இணைக்கப்படவில்லை எனில், மானியத்துடன் கூடிய ரேஷன்களைப் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
ஆதரில் எந்த தகவலை மாற்ற முடியும்?
பெயர் - உங்கள் வாழ்நாளில் இரண்டு முறை மட்டுமே ஆதார் கார்டில் உள்ள உங்கள் பெயரை மாற்றிக்கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக திருமணத்திற்குப் பிறகு பெயர் மாற்றம் வேண்டும் என்றால் மாற்றி கொள்ளலாம். மூன்றாவது முறையாக ஆதார் கார்டில் உங்கள் பெயரை மாற்ற அருகில் உள்ள ஆதார் மையத்திற்குச் செல்ல வேண்டும்.
பாலினம் - உங்கள் பாலின விவரத்தை ஒரே ஒருமுறை மட்டுமே உங்கள் வாழ்நாளில் உங்களால் மாற்ற முடியும்.
பிறந்த தேதி - உங்கள் பிறந்த தேதியை ஆதாரில் புதுப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இருப்பினும் அதில் ஏதேனும் பிழைகள் இருந்தால் அதற்கான உரிய ஆவணங்களை சமர்ப்பித்து பிறந்த தேதியை மாற்றி கொள்ள முடியும்.
முகவரி - பெயர் மற்றும் பிறந்த தேதிக்கு உள்ள கட்டுப்பாடுகளை போல் இல்லாமல், உங்கள் ஆதார் கார்டில் இருக்கும் முகவரியை எத்தனை முறை வேண்டும் என்றாலும் மாற்றி கொள்ள முடியும். முகவரி மாறி கொண்டே இருக்கும் என்பதால் அரசு இந்த சலுகையை வழங்கி உள்ளது.
மேலும் படிக்க | இந்தியாவிற்குள் விற்பனைக்கு வரும் டெஸ்லா கார்கள்! விலை எவ்வளவு தெரியுமா?
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ